அன்னத்தை போல் வாழும் கலை!
உத்தவரும் கிருஷ்ணனும் சுண்ணாம்பு மற்றும் வெல்லத்தை போல வித்தியாசமானவர்கள் - இருப்பினும் இருவரும் பாசத்திற்குரிய நண்பர்களாக இருந்தனர்.
பெரும்பான்மையான பதிப்புகளின்படி, உத்தவர் மதுராவில் பிறந்து வளர்ந்தவர். அவர் ஒரு முழுமையான நகர சிறுவனாக வளர்க்கப்பட்டவர்; கிருஷ்ணன் ஒரு கிராமத்து சிறுவன்; இடையர்களால் வளர்க்கப்பட்டவன்.
உத்தவர் மிகச் சிறந்த குருக்களிடமிருந்து கல்வி கற்றவர்; கிருஷ்ணனோ, அவன் விருந்தாவனம் விலகும் வரை, முற்றிலும் கல்வி கற்காதவன்.
உத்தவர் நல்நடத்தை கொண்டவர், தீவிரமானவர், கடுமையானவர், அறிஞர் அதோடு திட்டம் தீட்டுபவர்; கிருஷ்ணனோ, தன்னிச்சையானவன், அழகானவன், அதிர்ஷ்டத்தை வரவேற்பவன் (happy go lucky) குறும்பானவன்.
உத்தவர் உறுதிகொண்டவர் (confirmist); கிருஷ்ணனோ கலகக்காரன்.
உத்தவர் பழமையை பாதுகாப்பவர்; கிருஷ்ணனோ வழக்கத்திற்கு மாறானவன்.
உத்தவர் அவர் கற்றதில் நம்பிக்கை கொண்டார். கிருஷ்ணன் தன் ஹிருதயத்தில் நம்பிக்கை கொண்டான்.
உத்தவர் ஆன்மீகத்தை பயின்றார், ஆனால் சத்தியத்தின் உள்ளார்ந்த அனுபவத்தை பெற்றிருக்கவில்லை. கிருஷ்ணன் உள்ளார்ந்த சத்தியத்தில் வாழ்ந்தான், அதன் பின் அவன் கற்றது மேலோட்டமான தகவல்களை; அவன் ஏற்கனவே உள்ளுணர்வால் அறிந்திருந்ததை உறுதிப்படுத்திக்கொண்டான்.
கம்சனின் கொடுங்கோல் ஆட்சியில் உத்தவர் சித்திரவதைகளை அனுபவித்தாலும் அமைதியாக இருந்தார். கிருஷ்ணன் வெறுமனே அவனை அகற்றிவிட்டான்.
உத்தவருக்கு ஒன்று தெளிவாக புரிந்தது - கிருஷ்ணன் ஒரு சாமான்ய ஆன்ம இல்லை என்பது. அவன் சிறப்புமிக்கவன். அவரால் அதை உணர முடிந்தது; அது அவரை அவனிடம் இழுத்துச்சென்றது.
எப்படியோ உத்தவர் தீவிரமான தேடலில் இறங்கியவரானார், கிருஷ்ணரை தன் கலங்கரை விளக்கமாக்கி.
வெறுமனே கிருஷ்ணனின் வாழ்க்கையை பார்த்து கற்றதை ஒப்பிடும்போது உத்தவரின் சாஸ்திர கல்வி ஒன்றுமே இல்லை.
கிருஷ்ணன், அன்புக்கு நிபந்தனையற்று பதிலளிப்பதை பார்த்திருக்கிறார்; அவன் வாழ்வனைத்தும் ஆடி பாடுவதை உத்தவர் கண்டிருக்கிறார்; இடையன், போர்வீரன், அரசியல்வாதி, அரசன் தேரோட்டியென அகந்தையின் ஒரு சிறுதடமும் இல்லாமல் பங்களிப்பு செய்ததை கவனித்திருக்கிறார். பல உறவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் அமைதியாக இருப்பதை அவர் கவனித்திருக்கிறார். பாண்டவர்கள் யுத்தத்தில் வெற்றி கொள்ள உதவுவதற்காக - அவன் தந்திரத்தை கையாண்டதை பார்த்திருக்கிறார்; அதன்பிறகு, தனது சொந்த குழந்தைகள் ஒருவருக்கொருவர் வைதைப்பதை கண்ணால் பார்த்தபிறகும், அதை நிறுத்துவதற்கு எதுவும் செய்யாமல் இருந்ததை பார்த்திருந்தார்.
இறுதியாக, தனது பாதத்தில் விஷஅம்பெய்த வேடனை ஆசிர்வதிப்பதை கண்டார்.
கிருஷ்ணனது வாழ்க்கையின் இறுதி தருணங்களில் உடன் இருந்தது உத்தவர்தான். கிருஷ்ணன் பெரும் வலியில் இருந்தான். அம்பில் தோய்ந்திருந்த விஷம் தனது உடலில் பாய்ந்து மேலேறி அமிலம் போல் எரித்துக் கொண்டிருந்தது. பயங்கர முடிவொன்று நடக்கவிருந்தது. ஒரு போர்வீரன் விரும்பும் வகையில், போர்க்களத்தில் நிகழும் மகத்தான மரணமாக அது இருக்கப்போவதில்லை; அல்லது முதுமை எய்ததுபோல் வசதியாக இறக்கப்போவதில்லை, நேசிப்பவரின் கைகளில் மரணிக்கப்போவதில்லை, அது ஒரு விரைவான வலியற்ற மரணமாகவும் இருக்கப்போவதில்லை.
அடர்ந்த வனத்தின் நடுவில் மிகுந்த வலியுடன், கிருஷ்ணன் தனியே மெதுவாக இறந்துகொண்டிருந்தான். தனது என்றழைக்கக்கூடிய எல்லாவற்றையும் இழந்து பின்னர் ஒரு அநாமதேய, தாங்கொண்ணா இறுதியாக இருந்தது அது.
துக்கத்தில் தன் ஹிருதயம் வெடித்துவிடுமோ என்றெண்ணினார் உத்தவர். அவரால் தன் தோழனை இந்நிலையில் பார்க்க சகிக்க இயலவில்லை. கிருஷ்ணனின் கண்களில் வேதனை படர்ந்த போதிலும், அந்த கண்களுக்கு பின்னால் ஒரு நித்ய அமைதியை கண்டார். அவனை சுற்றி முடிவிலா அமைதியும் கருணையும் வெள்ளமெடுத்திருப்பதை உணரமுடிந்தது.
கிருஷ்ணன் தன் மரண செய்தியை அவனது பெற்றோர்களுக்கும், பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவருக்கும் தெரிவிக்கும்படி உத்தவரை அமைதியாக கேட்டுக்கொண்டான். அவனது குலத்தின் துயரகரமான முடிவை அனைவருக்கும் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டான்.
தேம்பியவாறே நடுங்கும் உடலுடன் மனமுடைந்து சரிந்து அமர்ந்தார் உத்தவர். அப்போது அவர் பெற்றதே உத்தவ கீதை.
பூமியில் கிருஷ்ணன் பாடிய இறுதி பாடல். துயரத்தால் நசுக்கப்பட்ட தோழனுக்கு பாடிய பகவத் கீதையை போல. இவ்விரண்டு நிகழ்வுகளிலும், கிருஷ்ணன் இறைவனும் ஆவான்; நண்பனும் ஆவன்.
கிருஷ்ணன் அவருக்கு விட்டு/போக விடும் கலையை (art of letting go) கற்றுக் கொடுத்தான். பற்றின்மையே (detachment) அந்த விட்டு விடும் கலை. கிருஷ்ணர் வாழ்வும் அதில் உள்ள பொருளும் - வரும் போகும் - என உத்தவருக்கு உணர்த்தினான். நித்தியமாக இருப்பது ஆன்மாவே.
இராதை அதை அறிந்திருந்தாள்.
அவள் கிருஷ்ணனை மற்றவரை விட அதிகமாக நேசித்தாள், இருப்பினும் அவள் பற்றின்மையின் மருவடிவமானாள். காதலும் பற்றின்மையும் பரஸ்பரமானதல்ல. சொல்லப்போனால், ஆழமான அன்பிலிருந்தே பற்றின்மை எழுகிறது. அவள் அழுது புலம்பத்தான் செய்தாள், ஆனால் கிருஷ்ணன் திரும்ப வரமாட்டான் என்பதை அறிந்து ஏற்றுக்கொண்டாள். உணர்வுப்பூர்வமாக அவன் அவளுடன் எப்போதும் இருந்தான், அவள் அந்த உண்மையோடு வாழ்ந்தாள்.
காதலோடு அவனை போக விட்டாள்.
கிருஷ்ணன் விருந்தாவனத்தை விட்டு செல்ல வேண்டியிருந்தது. அவன் மதுராவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவன் துவாரகை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அவன் பூமியை விட்டு புறப்பட வேண்டியிருந்தது.
ஆனால், வைகுண்டம் - உண்மையான வீடு, ஹிருதயம், நித்தியமானது... கிருஷ்ணன் ஹிருதயத்தை விட்டு விலகவே மாட்டான்.
"வருந்தாதே உத்தவா - என் அன்பு தோழனே எழுந்திரு!", என கிருஷ்ணன் தனது இறுதி சுவாசத்திற்கு முன் மெதுவாக வலியுறுத்தினான்.
உத்தவர் புரிந்துகொண்டார்.
உத்தவ கீதைக்கு மற்றொரு பெயர் "ஹம்ச கீதை" அதாவது "அன்னத்தின் பாடல்".
அன்னத்தை போல் வாழும் கலையை அது கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கை எனும் தண்ணீரை ஒரு அன்னத்திற்கு அனுபவிக்க தெரியும்; அதில் நீந்தும், அதை அருந்தும், அதில் விளையாடும், அதை நேசிக்கும், ஆனால் ஒருபோதும் நீரை அதன் இறகுகளுக்குள் அனுமதிக்காது.
யாருக்கும் ஒரு நண்பன் வழங்க முடியாத ஒரு சிறந்த பரிசை கிருஷ்ணன் உத்தவருக்களித்தான் - இந்த உண்மையை புரிந்துகொள்வது மட்டும் அல்லாமல் உணரவும் வைத்தான்.

Comments
Post a Comment