களவாடிய பொழுதுகள்!
அத்தியாயம் 1: வழி மாறிய பயணம் - 2
"Alright sir" என்று கூறிவிட்டு அலைபேசியை dash boardல் எறிந்தான் ஓட்டுனருக்கு பக்கத்தில் அமர்த்திருந்தவன்.
ஒல்லி பிச்சான் உடம்பை வைத்துக்கொண்டு வாகனத்தை வலப்பக்கமாக திருப்பிய விக்கி, அதே வேகத்தோடு இருக்கையிலிருந்து நகர்ந்தான். மீண்டும் சரியாக அமர்ந்து கொண்டு, "என்ன Bro இவரு. முதல்ல அவன் யாரு? எதுக்கு தேடுறாருனு சொல்லாம சும்மா தேடுன்னா என்னத்த தேடுறது? இவரு என்னமோ chainனு சொல்றாரு, பில்லா படத்துல pendriveவ தேட சொன்ன கதையா. அப்படித்தானே போன மாசம் ஒருத்தன் கூப்பிட்டான். Coat suit எல்லாம் போட்டுட்டு இருக்கானே weightடா எதாவது வேலை குடுப்பான்னு பார்த்தா அவன் ஆசைநாயகி நாய காணலையாம் தேடி தரணுமாம். அந்த நாய தேடி ஒரு மாசம் நாயா அலைஞ்சதுதான் மிச்சம். பேசின பணத்தையும் தரமாட்டேன்னுட்டான். வர வர நம்ம நிலைமை தமிழ் சினிமாவ விட மோசமா போகுது bro. எனக்கென்னவோ இந்தாளை..." என பேசி முடிப்பதற்குள் அருகில் இருந்தவன், "மூடிட்டு ஒட்டு!" என்றான்.
"ஆமா, இப்படியே சொல்லி சொல்லி..." என முணுமுணுத்த விக்கியின் பேச்சில் கவனம் செலுத்தாமல் வெளியே பார்த்தான் அகிலன்.
அந்த இரவிலும் பட்டப்பகல் போல் இருந்தது Kansas நகரம். எங்கு நோக்கினும் வண்ண neon விளக்குகள் ஒளிர்விட்டு கொண்டிருந்தன. திருவிழாவிற்கு திரளும் கூட்டம்போல எங்கு பார்த்தாலும் மக்கள் நடந்து கொண்டிருந்தனர். எவர் கையிலும் shopping bags இல்லாமல் இல்லை. ஒரு இடம் முன்னேறுகிறதென்றால் அது எவ்வழியிலோ அட்டை போல மனிதனின் ரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கிறதென்று அர்த்தம். ஒரு கடையினுள் காலை வைத்தால் பையிலிருந்து பணத்தை எடுத்தே ஆகவேண்டும். இல்லையெனில் கேட்டது கிடைக்காது, காரியம் ஆகாது. கற்பதற்கு பணம், கற்பது மண்டையில் ஏறவில்லை என்றால் வருத்தத்தில் குடிப்பதற்கு பணம், குடிப்பதில் கலக்க நீருக்கும் பணம். இன்னும் சுவாசிக்கும் காற்றுக்குத்தான் பணம் வசூலிக்கவில்லை.
பணம். பணத்தினால்தான் தன் தாத்தன் சிறைக்கு சென்றார், தன் தந்தை இறந்தார், இப்போது தானும் எவன் எவன் காலிலோ விழாக்குறையாக பணத்திற்காக அலைகிறான். October வந்தால் அவன் குண்டர் கும்பலிலிருந்து விலகி பத்து ஆண்டுகள் நிறைவடைகிறது. சில ஆண்டுகளுக்கு முன், அதே குண்டர் கும்பலிலிருந்து விலகி வந்து தன்னுடன் சேர்ந்தவன்தான் விக்கி. தனியே இருந்தபோது வயிற்று பசியை பற்றி அவன் கவலைப்பட்டதே இல்லை. ஆனால், வெகுநாள் தம்பியைப்போல் பழகியவன், தன் முதிய தாயோடு வந்தபோது அவர்களைக் கைவிடக்கூடாது என வைராக்கியம் கொண்டான். இந்த தொழிலில் அவனுக்கு விருப்பமில்லை ஆயினும், அவர்களுக்காக செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான் அகிலன். ஒரு அதிகப்படியான தொகையோடு யாரவது வேலை தர முன்வந்தால், நிச்சயம் இத்தொழிலை விட்டுவிட வேண்டும் என சில நாட்களுக்கு முன் மனசுக்குள் தீர்மானித்திருந்தான்.
"இவன் காடிலதான் போறானா மாட்டு வண்டில போறானா?" என்று விக்கியில் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்த அகிலன் முன்னால் ஒரு சிகப்பு van இழுபட்டு நகர்ந்து கொண்டிருப்பதை பார்த்தான். "ம்ம்ஹும் மாடு கூட இவன overtake பண்ணிடும். சரிப்பட்டு வராது" என்று ஹாரனை அழுத்தி விட்டு overtake செய்தான் விக்கி. வலப்பக்கம் கதவின் ஓரத்திலிருந்து புட்டியை எடுத்து தண்ணீர் குடித்தான் அகிலன். விக்கி கூறியது உண்மைதான். அவனுக்கும் அந்த குழப்பம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவனுள் ஏதோ ஒன்று, இந்த பயணம் முன்போன்ற சல்லித்தனமான பயணம் இல்லை என கூறிக்கொண்டே இருந்தது. கார் எதன் மீதோ எறியதில் அகிலனின் தலை கண்ணாடியில் முட்டியது.
"ச்ச்" என முகத்தை தடவிக்கொடுத்து மெதுவாக கண்விழித்தாள் லீலா. யார்மீதோ படுத்திருக்கிறோம் என்று உணர்ந்தவள் சட்டென எழுந்து கொண்டாள். சீரிகைகளின் ஒலி அந்த இரவின் குளிரை நினைவுபடுத்தியது. நல்ல வேளையாய் அன்று வானில் நிலவு ஏறி இருந்தது. அதன் வெளிச்சத்தில் ஓரளவு சுற்றி இருந்தது தெரிய வந்தது. கிழக்கே ஒரு பெரிய தடாகமும் அதை சுற்றி வளைத்த காடும், தூரத்தில் மலை முகடுகளும் தெரிந்தன. கண்களை தேய்த்துவிட்டு மீண்டும் சுற்றி பார்த்தாள். எவ்வாறு இங்கு வந்தோம் என்பது மெதுவாக நினைவு வந்தது. அடுத்து என்ன செய்வதென தெரியாமல், அருகில் இருந்தவனை அழைத்தாள், "சஞ்சய்! சஞ்சய்!"
அவன் ஓரசைவும் இன்றி படுத்துக்கிடந்தான். வலது இடையில் இருந்த காயத்தை பார்த்தாள். துப்பாக்கி குண்டை காணவில்லை. உள்ளே ஆழமாக சென்று விட்டதா இல்லை விழுந்து விட்டதா என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால், அந்த காயத்திலிருந்து வெகு நேரம் ரத்தம் கசிந்து மயக்கநிலையை எட்டியிருப்பானோ என சிந்தித்தாள். தன் shawlலை எடுத்து அவன் காயத்தை சுற்றிக் கட்டினாள். அவன் மேல் சட்டையை கழற்றி அவனுக்கு தலையணை ஆக்கினாள். யாரையாவது உதவிக்கு அழைத்து வரலாம் என நெடுஞ்சாலைக்கு நடந்தாள்.
களவாடப்படும்...

Comments
Post a Comment