களவாடிய பொழுதுகள்!

அத்தியாயம் 2: வெடிச் சத்தம் - 1

வெகுநேரம் நெடுஞ்சாலையின் நடுவே அலைந்தாள் லீலா. வாகனம் வரும் அறிகுறி ஏதும் தென்படவில்லை. கால் வலிக்க தொடங்கியதால் அருகில் இருந்த மரத்தடியில் அமர்ந்தாள் சாலையை பார்த்தபடி. 

'எதுக்கு சுட்டாங்க? இவன் எதாவது கும்பல்ல நமக்கு தெரியாம இருக்கானா?' என்று சிந்தித்தாள். நேற்று காலையில்தான் அவசரமாய் காணவேண்டும் என்று அழைத்திருந்தான் சஞ்சய். "உனக்கு surprise இருக்கு, உடனே வா" என்றான். சரி என்று permission வாங்கிச் செல்ல chief scientist அலுவகத்திற்குள் நுழைந்தாள். "Chief, samples எல்லாம் PCRல போட்டிருக்கேன் run  பண்ணிட்டு இருக்கு. ஒரு hour வெளியே போயிட்டு சாப்பிட்டு வறேன்" என்றாள். "ஓ! சரி, லீலா. வர late ஆச்சுன்னா எந்த stageகு proceed பண்ணனும்னு Emilyயிடம் சொல்லிட்டு போ" என்றார் Chief. நன்றி சொல்லிவிட்டு ஆய்வுகூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த Emilyயிடம் விவரங்கள் எல்லாம் சொல்லிவிட்டு தன் hand bag எடுத்துக்கொண்டு கிளம்பினாள். தன் வெள்ளை coatடை கழற்றி கையில் தொங்கவிட்டு தன் Jaguar வண்டியில் ஏறினாள்.

லீலா படித்ததனைத்தும் Kansas நகரத்தில்தான். அறிவியல் தொழிற்நுட்பத்தில் இளங்கலை கல்வியை Kansas State Universityயில்தான் பெற்றாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இங்கே ஒரு தனியார் தாவரவியல் ஆய்வுகூடத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். முதலில் ஒரு சாதாரண laboratory technicianனாக சேர்ந்தாலும் ஒன்றரை வருடத்தில் project reseacherஆக பதவி உயர்த்தப்பட்டாள். வண்டியின் dash boardல் தன் அலைபேசி அதிர்ந்தது. 

அழைப்பை எடுத்தாள். "லீலா, உன் வீட்டு முன்னாடிதான் நிக்கிறேன். எங்க இருக்க?"  

"On the way, சஞ்சய். ஒரு 20 minutes" என்றாள்.

'OK' என சொல்லி அழைப்பை துண்டித்தான். மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் இந்த வாகனத்தை புதிதாய் வாங்கினாள். அதற்கு முன்பெல்லாம் மின்சார ரயிலில் பயணிப்பதுதான் வழக்கம். அப்படி ஒருமுறை வேலை காரணமாக Beaufort செல்லவேண்டியிருந்தது. அந்த பயணத்தில் அறிமுகமானவன்தான் சஞ்சய். அந்த இரண்டு நாள் Beaufortடில் நடைபெற்ற conferenceகு பின்னர் அவனை சந்திக்கவில்லை. அதன் பிறகு அவளுக்கு வெகுதூரம் ரயிலில் ப்ரயாணிக்கும் அலுவல் ஏதும் வரவில்லை. அவர்கள் தொடர்பு எண்கள் எதையும் பரிமாற்றிக்கொள்ளவும் இல்லை. இதன் பிறகுதான் லீலாவிற்கு வேலை உயர்வு கிட்டி இந்த வாகனமும் வாங்கினாள். 

இரண்டு வாரங்களுக்கு முன்தான் மீண்டும் அவனை பார்த்தது, தற்செயலாக ஒரு அங்காடியில். அன்று வேலை முடிந்து வீட்டிற்கு சமையல் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. பொருட்களுக்கு கட்டணம் செலுத்திய பின், வரிசையில் தனக்கு பின்னால் நின்றவர் ஏதோ பேசினார். திரும்பி பார்த்துவிட்டு வேகமாக வெளியே நடந்தாள். பழகிய முகம் என நினைவு வர அங்கேயே நின்றாள். சஞ்சய் அங்காடியிலிருந்து அவளை பார்த்து  புன்னகைத்துக்கொண்டே வெளிவந்தான். அவனுக்கு Kansasஸில் ஒரு project சம்மந்தமாக வந்திருப்பதாக சொன்னான். விடைபெறும் முன்னர் தங்கள் அலைபேசி எண்களை பரிமாற்றிக்கொண்டனர்.

அதன் பிறகு இருவரும் ஒரு விடுமுறை நாளில் Windsor வரை சென்று வந்தனர். ஆனால், அந்த பயணத்திற்கு பிறகு சஞ்சய்யிடம் ஒரு வித்யாசத்தை கண்டாள், லீலா. அது பதட்டமா பயமா என்று தெரியவில்லை. நள்ளிரவில் அழைத்து நலம் விசாரிப்பான். சில சமயம் நேரே வீட்டிற்கு வருவதும் உண்டு. அதையெல்லாம் லீலா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்னால், தன் கழுத்தில் உள்ள chain காணவில்லை என்று உணர்ந்தாள். ஒருவேளை அது Windsor ரயில் பயணத்தின்போது விழுந்திருக்கலாம் என்று சஞ்சய்யிடம் கூறினாள். சஞ்சய் அது எவ்வாறு இருக்கும் என கேட்க அவளது கால் chainனை காட்டினாள். அதில் தொங்கிய பதக்கத்தை போலவே தன் கழுத்து சங்கிலியில் இருக்கும் என்றாள். அவர்களிடையேயான அந்த சம்பாஷணைக்கு பிறகு அவனை இரண்டு நாட்களாக காணவில்லை. அதன் பிறகு இப்போதுதான் அழைத்திருக்கிறான்.

லீலா தன் தெருவுக்குள் நுழைய அங்கே அவள் வீட்டின் ஓரமாக ஒரு மோட்டார் வண்டி நிற்பதை கண்டாள். அதில் சஞ்சய் சாய்ந்து உக்கார்ந்திருப்பதை பார்த்துக்கொண்டே நெருங்கினாள். இவள் வாகனத்தை கண்டதும் சஞ்சய் முகம் மலர்ந்து நின்றான். வண்டியை மெல்ல நிறுத்திவிட்டு லீலா கீழிறங்கினாள். சஞ்சய்யும் வண்டியை சுற்றிவந்து ஓட்டுநர் பக்க கதவின் மீது சாய்ந்துக் கொண்டான். 

"என்ன அவசரமா கூப்ட? ரெண்டு நாளா ஆளைக் காணோம்" என லீலா சொல்ல, அவள் தோள்களை பிடித்து அவளை வண்டியின் மீது சாய்த்தான்.

முன் நின்று அவள் முகத்தை பார்த்து, "Guess what...?" என்று அவன் கையை உயர்த்தினான். அவனது கையின் இடுக்கிலிருந்து லீலாவின் கழுத்து செயின் விழுந்து தொங்கியது.

"Hey என் chain..." என்று சொன்னதுதான், தூரத்திலிருந்து ஒரு சத்தம் எழுந்தது. இருவரும் சத்தம் எழுந்த திசையை நோக்கி திரும்பினார்கள். ஒருவன் துப்பாக்கியை தூக்கிப் பிடித்து நின்றுகொண்டிருந்தது பார்த்து லீலா சஞ்சயை தள்ளினாள். சஞ்சய்யின் இதயத்தை குறிவைத்து வந்த முதல் குண்டு வண்டியின் கதவில் பாய்ந்தது. இராண்டாம் குண்டு சஞ்சய்யின்  வலப்பக்க இடையில் பட்டது. தொடர்ச்சியான வெடி ஓசையில் லீலா மிரண்டு போனாள். "உள்ளே போ!" என சஞ்சய் அவளை வண்டியில் தள்ளி அவனும் ஏறிக்கொண்டு வண்டியை ஒட்டிச் சென்றான். 


பின்னால் அந்த திடீர் நபர்கள் தொடர்வதை பார்த்துக் கொண்டே ஓட்டிச் சென்றான் சஞ்சய். ஆனால், லீலா பிரம்மை பிடித்தவள் போல அவனது காயத்தை பார்த்துக்கொண்டு 'சஞ்சய்... சஞ்சய்... ரத்தம்...' என முனகினாள். ஒரு முட்டுச் சந்தில் நுழைந்து சுவரை நோக்கி மிக வேகமாக ஒட்டிக் கொண்டிருந்தான் சஞ்சய்.

லீலா அலறினாள்.

களவாடப்படும்...

Comments