களவாடிய பொழுதுகள்!

அத்தியாயம் 2: வெடிச் சத்தம் - 2

சுவற்றில் முட்டப் போகிறோம் என எண்ணி காதை பொத்திக்கொண்டு '' வென அலறிக்கொண்டிருந்தாள் லீலா. ஆனால், முட்டுவதற்கு முன்னாலேயே வலப்பக்கம் இருந்த ஒரு குறுக்கு சந்தில் நுழைந்தான் சஞ்சய். லீலா சஞ்சய் பக்கம் சாய்ந்து dashboard-ல் முட்டினாள். அவர்களை பின் தொடர்ந்த வண்டி சுவற்றில் மோதி நசுங்கியது.

'அம்...மா...' என்று இருக்கையில் சரியாக அமர்ந்தாள் லீலா. சஞ்சய் அந்த சந்தின் வழியே வேகமாக சென்று பிரதான சாலையை டைந்தான். போகும் வழியெல்லாம் அடிக்கடி பின்னால் பார்த்துக்கொண்டிருந்தான். 

நெடுந்தூரம் மெளனமாக கடந்த பின்பு லீலா, "சஞ்சய் நாம இப்போ எங்க போறோம்? தூரத்துல காடுதான் தெரியுது." முதலிலிருந்து யோசனையிலும் வலியிலும் இருந்த சஞ்சய்யின் முகம், சற்று இறுக்கம் விலகி, "Santa Fe போறோம் லீலா. என் நண்பன் ஒருத்தன் அங்க இருக்கான். அவன்ட போனதுக்கப்புறம்தான் அடுத்தது என்ன பண்ணப்போறோம்னு யோசிக்கணும். ஸ்ஸ்ஸ்.." Jaguar சாலையின் மேட்டில் ஏறி இறங்க வலியில் முனகினான் சஞ்சய்.

லீலா அவன் மீது பட்ட குண்டடி மீது தன் பார்வையை அடிக்கடி படர விட்டுக்கொண்டிருந்தாள். "சஞ்சய் first எதாவது hospital போகலாம். பக்கத்துல எதாவது ஒரு city-குள்ள போ" என்றாள்.

"
இல்லை லீலா. நாம முதல்ல பத்திரமா போய் சேர்றதுதான் இப்போ முக்கியம்" என்று சோர்வோடு சொன்னான்.

அவன் மயக்கம்போட்டு விடுவானோ என்று சந்தேகித்து வானொலியை தட்டினாள், "ஒரு 20 நிமிஷம்தான் சஞ்சய் ஆகும். இப்படி காயத்துல குண்டோட இருக்கிறது ஆபத்து. சொன்னா கேளு, காடிய வலப்பக்கம் திருப்பு."

ஏற்கனவே அவள் வானொலி தட்டிய எரிச்சலில் இருந்த சஞ்சய், "பரவால்ல வேண்டாம், லீலா" என்று சொல்லி வானொலியை நிறுத்தினான். லீலா மீண்டும் வானொலியை உயிர்ப்பித்து, "உனக்காகத்தான் திறந்தேன். பாடிட்டு இருக்கட்டுமே" என்றாள்.

சஞ்சய் எரிச்சலாய், "ரொம்ப அவசியமா இப்போ?" என வானொலியை அமைதிப்படுத்தினான். லீலா தன் அலைபேசியை எடுத்து எண்களை அழுத்த, "யாருக்கு call பண்ற இப்போ?"

"Ambulance
கு, at least.." என்று லீலா சொல்லி முடிப்பதற்குள்ளேயே, சஞ்சய் அலைபேசியை பிடுங்கப் பார்த்தான். 
லீலா பிடிவாதமாக அலைபேசியை தராமல் இருக்க, சஞ்சய் வலியோடு அதை பிடுங்க ஆயத்தப்பட அவனது பார்வை மங்களாகி காரை அதன் போக்கில் விட்டுட்டான். லீலா அவன் மயங்கிவிட்டதை பார்த்த நொடி Jaguar சாலையோர பாறையை முட்டியது. 

அவ்விபத்தின் அதிர்ச்சியில் மீண்டும் அவள் இதயம் படபடத்தது. காலில் ஏதோ கடிக்க அதை சொரிந்து விட்டு எழுந்தாள். 'Santa Fe போகவேண்டும் என்றான். இப்போது எப்படி செல்வது? முதலிலேயே என் பேச்சை கேட்டு சிகிச்சை பெற்றிருந்தால் இந்நேரம் அங்கு போய் சேர்ந்திருக்கலாம்.' என்ன செய்வது என காலால் புற்களை உதைத்தவள் மீண்டும் சாலைக்கு சென்று பார்த்துவிட்டு திரும்பினாள். தரையை பார்த்துக்கொண்டு நடக்க சற்று நின்றாள். 

அங்கு அவளுக்கு தெரிந்த ஒரு தாவரம் புதராக வளர்ந்திருந்தது. அதில் இருந்த சிறிய மலர்களை எப்போதோ பார்த்த ஞாபகத்தில் சற்று அருகில் சென்று அதை பிடுங்கி நுகர்ந்தாள். அவள் முகத்தில் ஒரு நிம்மதி பிறந்தது. இன்னும் கொஞ்சம் கிள்ளி கையில் அள்ளிக்கொண்டு, சஞ்சய்யின் அருகில் ஒரு மரத்தடியில் அமர்ந்தாள். 


கொஞ்சம் பெரிய அளவு கற்களை பொருக்கி வந்து அந்த தாவரத்தை தேய்த்து சக்கையாக்கினாள். பச்சிலையை எடுத்து தனியே ஓர் இலையின் மேல் சேகரித்தால். இவ்விலையை கையில் ஏந்திக்கொண்டு சஞ்சய்யின் வலப்பக்கம் அமர்ந்தாள். அவனது நெற்றியின் இடப்புறம் தெரிந்த காயத்தின் மேல் அவள் தயாரித்ததை வைத்தாள். 'ஸ்ஸ்ஸ்ஸ்..' என்று எரிச்சலில் முனகினான் சஞ்சய். 

அவனது சட்டையை மேலேற்றி இடையில் கட்டியிருந்த shawlலை அவிழ்த்து அவனது இடையில் காயத்தை கவனித்தாள். குண்டு அந்த காயத்திலிருந்து வெளியேறி இருந்தது போலத்தான் இருந்தது. நிலவின் வெளிச்சத்தின் அவ்வளவாக தெரியவில்லை. அக்காயத்தின் மீது அவள் கையை வைக்க இன்னும் பலமாக, 'ஸ்ஸ்ஸ்.. ' என்று சத்தமிட்டு சஞ்சய் அவளை நோக்கினான். 

"
ஏரியுதா? Sorry கொஞ்சம் பொறுத்துக்கோ இந்த Yarrow (அச்சில்லியா) paste போட்டுடுறேன்" என்று சொல்லி அந்த பச்சிலையை அள்ளி காயத்தில் வைத்து shawlலை கட்டினாள். 'ஆயீ' என்று பல்லை கடித்துக்கொண்டு கத்தினான் சஞ்சய். "அப்போவே என் சொல்பேச்சு கேட்டிருக்கணும்.." முகவாயை ஆட்டி, "சரி சரி... அப்படியே படுத்திரு கொஞ்ச நேரத்துல நல்லாயிடும். Bleeding குறைந்து வலியும் குறைந்திடும்" என்றாள்.

லீலா மீண்டும் மரத்தினடியில் அமர்ந்து தனது காயத்தின் மேல் பச்சிலை பூசிக்கொண்டாள். எரிச்சலில் எழுந்து இங்கு அங்குமாய் கைகளை ஆட்டி நடந்தாள். குளிர் வேறு கூடியிருந்தது. அசதியில் அமர்ந்தாள். அப்படியே சஞ்சய் மீது சாய்ந்து தூங்கிபோனாள்.

தோளின் மேல் பட்ட அடியில் கண்கள் விரிய சாலையை கவனித்து பார்த்தான் விக்கி. 
"எத்தனை முறை சொல்லிருக்கேன் தூக்கம் வந்தா சொல்றான்னு" என்றான் அகிலன். 

"
Bro, இந்த வண்டி வேற 100 km/hr மேல போகமாட்டேங்குது. நீங்க வேற எங்க போகணும்னு சொல்லமாட்டுறீங்க. எவ்வளோ தூரம்ணே இப்படியே?"

"
இந்த highway வழியைத்தான் எடுத்தாங்கனு நீ தானடா சொன்ன"

"
அப்போ சொன்ன bro... அதுக்கப்புறம் எந்த பக்கம் போனாங்களோ? வண்டிய எடுத்ததுதான் எடுக்க சொன்னிங்க ஒரு Lambor ஒரு Porscheனு இல்லாம போயும் போயும் ஒரு டப்பா வண்டிய.."

"
சரி சரி வண்டிய ஓரமா நிறுத்தப்பாரு bossக்கு ஒரு phone போட்டு சொல்லிடலாம்" என்று தன் jeans பைக்குள் கைவிட்டான்.

"
ம்ம். டேய் கிழவா, வண்டியாடா இது? என் கையில சிக்கின செத்தடா..." என்று முணுமுணுத்துக்கொண்டே ஒரு இளைப்பாறுமிடத்தில் நிறுத்தினான். வண்டியைவிட்டு இறங்கி "Broஒன்னுக்கு போயிட்டு வறேண்ணே!" என்று ஓடினான் விக்கி. 

அலைபேசியை காதில் வைத்து காத்திருந்தான் அகிலன். சில வினாடிகளில் அதே அதிகாரக்குரல், "என்ன பிரச்சனை?" என்றது.

களவாடப்படும்...

Comments