களவாடிய பொழுதுகள்!

அத்தியாயம் 3: மோஹினி - 1

"அவங்கள miss பண்ணிட்டோம் boss!"

மறுபக்கம் கஷ்ட்டப்பட்டு வந்த பெருமூச்சின் ஓசை கேட்டது. "கடைசியா எந்த பக்கம் போனாங்க?" குரலில் கடுமை தொனித்தது.

"I-70 Highway"

சில நிமிட மௌனத்திற்கு பிறகு, "லீலாவுடைய mobile Colorado, Denver cityலிருந்து south போய்ட்டு இருக்கு. இன்னும் 1 மணி நேரத்துல எனக்கு update வேணும்!" தொடர்பு துண்டித்தது. 

பெரிதாக மூச்சிழுத்தான் அகிலன். தன் அலைபேசியில் Denver cityயிலிருந்து தெற்கு நோக்கி என்னென்ன நகரங்கள் இருக்கிறதென பார்த்தான். தூரத்திலிருந்து விக்கி ஓடி வருவதை கண்டான். வண்டியின் கதவை திறந்து ஏறிக்கொண்டான். விக்கி வண்டியை அடைந்தபோது, "டேய் வேண்டிய எடு கிளம்பனும்" என்றான் அகிலன். விக்கி, "என்ன bro, அவங்க போன இடம் தெரிஞ்சிடுச்சா?"

"ஆமாண்டா. Denverருக்கு ஒட்டு சீக்கிரம் இன்னும் 40 நிமிஷத்துல அங்க இருக்கணும்."

"Denverருக்கா? ஐயோ petrol பத்தாதே!"

"பச்.. இந்தா பிடி. சீக்கிரம் petrol போட்டுட்டு வண்டிய எடு" என்றான் அகிலன் பணத்தை நீட்டி. விக்கி அதை வாங்கிக்கொண்டு அருகிலிருந்த நிலையத்தில் நிறுத்தி petrol நிரப்பினான். நிரம்பிய பின்னரும் வண்டி நகரவில்லை. அகிலன் சுற்றும் முற்றும் பார்த்தான். நிலையத்தின் உள்ளிருந்து கையில் ஒரு பை நிறைய எதையோ அள்ளிக்கொண்டு வந்தான் விக்கி. கதவின் பக்கம் வர அகிலன் கத்தினான், "டேய், கொஞ்சமாச்சும் அவசரம் தெரியுதா உனக்கு? இப்போ ரொம்ப முக்கியமா இதெல்லாம்?"

"இல்ல bro..."

"மூடிட்டு எடுறா வண்டிய!" என்றான் கோபத்தில் புறம் நோக்கி.

விடுவிடுவென்று வண்டியில் ஏறி நெடுஞ்சாலைக்கு கிளம்பினான் விக்கி. இரவானதால் சாலையில் வாகனங்கள் அதிகம் இல்லை. இந்த இருட்டில் வழியைத் தவறவிட்டு விடக்கூடாதென்று கவனமாகவும் வேகமாகவும் ஓட்டினான். அகிலன் தன் jacketடிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து பார்த்துவிட்டு வெளியில் இருண்ட வானத்தை நோக்கினான்.

Denver cityயை மனக்கண்ணில் ஓடவிட்டான். Kansasஸிலிருந்து மேற்கே Denver. அங்கிருந்து தெற்கே நிறைய சிறுநகரங்கள் பின்னர் Albuquerque. ஆனால் இதற்கிடையே பெரிய பாதுகாக்கப்பட்ட வனம் இருக்கிறது. 'வனத்தை தவிர்த்திருப்பார்களா அல்லது வனத்தினுள் செல்லும் வழியே சென்றிருப்பார்களா?' என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.

பசி எடுத்தது. காலின் அருகில் இருந்த பையில் நிறைய உணவு பொருட்கள் இருப்பதை கண்டான். விக்கி முன்கூட்டியே யோசித்து வாங்கி வைத்ததை நினைத்து மெச்சினான். "சாப்பிடுறியாடா?" என்றான். "ஹ்ம்ம்.. நீங்க சாப்பிடுங்க bro" என்றான் விக்கி. அந்த பையில் ரொட்டிகளும் தண்ணீரும் இருந்தன. ஒரு ரொட்டியை பிரித்து விக்கியிடம் தந்தான். மற்றொன்றை பிரித்து தான் உண்டான்.

சட்டென்று தன் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. திறந்து படித்தான், "Target did not move from 39°00'01.7"N 105°46'32.0"W till now." 'நகரவில்லையா. ஏன்?' கையில் இருந்த அந்த படத்தைப் பார்த்து, 'பயம் விட்டுப்போனதா?' என சிந்திக்க அலாரம் அடித்தது. "Bro! அத கொஞ்சம் அடைச்சுடுங்க" என்றான் விக்கி. அகிலன் அவனது அலைபேசியை எடுத்து அலாரத்தை அடைத்து வைத்தான். காலை மணி 6 என்று காட்டியது.

வெகுநேரமாக உடல் பிணத்தைப்போல் அசைவற்று கிடந்ததாக உணர்ந்தான். மெல்ல கண்களை திறந்து பார்க்க வானம் விடிந்திருந்தது, 'எவ்வளவு நேரம் இப்படி கிடந்தேன்? லீலா? லீலா!' லீலாவை காணாமல் பதறி எழ இடையில் ஏற்பட்ட வலியால் மீண்டும் படுத்துகொண்டான். அப்பொழுதான் தன் காயத்தை நினைவுக் கூர்ந்தான் சஞ்சய்.

விபத்துக்குள்ளாகியதிலிருந்து நடந்தவை எல்லாம் ஏதோ கனவுக்குள் நடந்த நிகழ்வுகள் போல இருந்தது. 'காரிலிருந்து என்னை யாரோ இங்கு வந்து போட்டிருக்கிறார்கள்.. யாரோவா? லீலா. லீலாதான். அவளுக்கு ஏதாவது நேர்ந்திருக்குமோ? நேற்று என் காயத்திற்கு ஏதோ பச்சிலை பூசினாளே! பின் என் நெஞ்சின் மீது தலைவைத்து உறங்கினாளே! எங்கே சென்றாள்?' என மெல்ல எழுந்தான் சஞ்சய். எழுந்து நிற்கவே தலை கிறுகிறுத்தது.

மெதுவாக தள்ளாடி சென்று அருகில் இருந்த பெரிய மரத்தடியில் அமர்ந்தான். அங்கு கிடந்த கற்களில் பச்சிலை காய்ந்திருந்தது. சற்று தள்ளி தீமூட்டி அணைக்கப்பட்டதன் அடையாளம் தென்பட்டது. பின்னர் தான் படுத்திருந்த இடத்தை நோக்கினான். அங்கு ஒரு பாறையின் மேலே துணிகள் இருப்பதை கண்டான். திடீரன்று, குளத்தினுள்ளிருந்து ஒரு தேவதை வெளிவந்தாள். வாயில் வைத்திருந்த தண்ணீரை தூரமாக துப்பினாள். மகிழ்ந்தாள். நீரை கையால் அள்ளி முகத்தில் எறிந்தாள். தேவதையின் பொன்னொளி மேனியின் ரகசியத்தை கண்டுகொண்டான்.



காலை கதிரின் கிரணங்கள் அவளது ஈர உடலில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அவளது தோளில் இருந்த நீர் திவளைகள் ரத்தினங்களாய் மின்னின. 'நேர்த்தியான நுதல், செதுக்கிய மூக்கு...மீண்டும் தண்ணீருக்குள் சென்று வெளிவந்து மீண்டும் துப்பின்னாள் அந்த சிலை. மகிழ்ந்தாள். 'அட அந்த பற்கள் நீரின் அடியிலிருந்து வந்த முத்துக்களா?' அந்த நீர்தாமரை சிரித்த காட்சி சஞ்சய்யின் மனதில் ஆழமாக பதிந்தது. எங்கிருந்தோ கரிச்சான் கத்த அவள் வனத்தை பார்த்து சுற்றி திரும்பினாள். அவளது கண்கள் தன் கண்களை சந்தித்ததும் திடுக்கிட்டான். அவளும் திடுக்கிட்டு விலகி பாறைக்கு பின்னால் சென்றாள். உடனே வேறுபக்கம் நோக்கி தன் பார்வையை திருப்பினான்.

சில நிமிடங்களுக்குப் பின், அவள் அருகில் வரும் ஒலிகேட்டு ஓரப்பார்வையிட்டான். கையில் வைத்திருந்த துணிச்சுருளை தன் முகத்தில் எறிந்தாள். கோபம். தன் புன்னகையை அந்த துணியிலேயே மறைத்து விலக்க அது அவனுடைய வாடையில்லை என்பதை உணர்ந்தான். துணிச்சுருளை விரித்து பார்த்தான். அது நேற்று அவள் அணிந்திருந்த trench coat. எங்கோ திரும்பி புன்னகைத்து, 'என் சட்டையை களவாடிவிட்டாள்' என்று அவள்பால் திரும்பியவனின் மனம் 'சட்டையை மட்டும்தானே?' என்றது. அந்த கேள்வியில் சற்று திளைத்துவிட்டு நொடியினில் வெளிவந்தான்.

"உனக்கு ஒன்னும் அடியில்லையே
?"

குளத்தை நோக்கி அமர்ந்து கல்லெரிந்துக் கொண்டிருந்த கை நில்லாமல் தொடர்ந்தது. பதில் இல்லை.

"சரி
, நம்ம கார் எங்..."

கோப மோஹினி சட்டென்று திரும்பி தன்பால் கல்லெறிந்தாள்
, "அது என் காரு... சல்லி சல்லியா நொறுக்கிட்டு கார் எங்கவாம்?" மீண்டும் திரும்பி குளத்தை நோக்கி இருந்தாள். 


'ப்பா.. கோபம் வந்தாலும் மோஹினிதான்' என்று சிரித்துக்கொண்டான். 'நாள்தோறும் வீசும்.. பூங்காற்றை கேளு என் வேதனை சொல்லும்..." என்று பாட அவள் திரும்பாமலே, "வலி இன்னும் இருக்கா?" என்று கேட்டாள். 'அட இரக்கம்!'

"என்ன?" என்றான் கேளாதவாறு.

"உனக்கு கேட்டுச்சு.."

"அட எதோ பேசுனாப்ல இருந்தது பாடிட்டு இருக்கப்போ. மறுபடி சொல்லுறது..." என்றான் நக்கலாக. 

"இன்னும் வலிக்குதான்னு கேட்டேன்... ஹரிஹரன் ஜி?"

குரலை சரிபடுத்திக்கொண்டு, "ஓ.. இருக்கு இருக்கு. ஆனா நேற்றைவிட பரவால்லை" என்றான். 

மீண்டும் அமைதி.

மரத்தை பிடித்து மெல்ல எழுந்தான். மரத்தின் வேரில் வைத்திருந்த ஒரு கால் வழுக்கி கீழே விழப்போனான். ஆனால் பின்னாலிருந்து தன் இரு தோள்களையும் தாங்கி பிடித்த கை மெதுவாக மண்ணில் அமர வைத்தது. கைகளை விடுவித்துக் கொண்டு முன்னாள் வந்தாள் வனயக்ஷி, "என்ன? கொஞ்சம் வலி குறைஞ்சா பெரிய Supermanனு நினைப்பா?" அவன் மெல்ல புன்னகைக்க சட்டையை பிடித்திழுத்து முகத்தை அருகே கொண்டு வந்தாள், "ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு போனோனே, என் கார் எனக்கு வந்தாகணும்..."

"அம்மா தாயே! உன் கார் மட்டும் இல்ல அதுக்கு மேலையும் தரேன். கொஞ்சம் தூக்கிவிடும்மா..." என்றான் அப்பாவியாக. சட்டையை விட்டுவிட்டு தள்ளி நின்று கை நீட்டினாள்.

அக்கரத்தை பற்றிக்கொண்டு எழ அவள் அவனது இடத்தோளை பற்றித் தூக்கி உதவினாள். அவன் மெல்ல நடந்தான். அவளது துணியையும் ஒரு இலைசுருளையும் எடுத்துக்கொண்டு சஞ்சய்யின் இடப்பக்கம் தோள்சேர்த்தாள். இருவரும் நெடுஞ்சாலைவரை சென்று பார்த்தனர். வாகனம் ஏதும் வந்தபாடில்லை. "சரி.. நம்ம காரு எங்கருக்கு?" என்று லீலாவைப் பார்த்து திரும்ப, மோஹினி கோபப்பார்வையை வீசிக்கொண்டிருந்தாள்.


களவாடப்படும்...

Comments