களவாடிய பொழுதுகள்!
அத்தியாயம் 4: வேகத்துடிப்பு - 1
அகிலன் ஒரு நொடி அதிர்ந்தான், 'அவ்வளோ சத்தமாவா பேசினோம்?'
"அண்ணே அண்ணே... இங்க வாங்க!"
இயல்பிற்கு வந்த அகிலன் விக்கியை நோக்கி நடந்தான், "என்னடா?" சரியாக அப்பொழுது அலறியது அவனது அலைபேசி. எடுத்து காதில் வைத்தான் நடந்துகொண்டே.
"என்னாச்சு?"
"காட்டில் ஒரு விபத்து. அவர்கள் இல்லை.. தேடிக்கொண்டிருக்கின்றோம்" விக்கியின் அருகில் சென்றவுடன் அவன் கை நீட்டி எதையோ காண்பித்தான். "எவ்வளோ..." என்று மறுபக்கம் பேச ஆரம்பிக்க. இடையில் நிறுத்தினான் அகிலன், "Boss ஒரு chain கிடக்கு இங்க."
தொடர்பின் மறுமுனை அமைதியாக இருந்தது. பின், "பாக்க எப்படி இருக்கு?"
புற்தரையிலிருந்து அதை கையில் எடுத்தான், "நீலக்கல் வச்சிருக்கு. அநேகமா கை அல்லது கால் chainஆ இருக்கும்."
மெதுவாக கையில் வைத்து விளையாடியபடி, "ஒரு சின்ன சாவிபோல ஒன்னு தெரியுது."
நொடி அமைதிக்குப் பிறகு, "சரி, இப்போ அவங்க முக்கியமில்லை, உடனடியா Santa Feக்கு கிளம்புங்க. உங்கள நான் அங்க சந்திக்கிறேன். இடத்தை இன்னும் கொஞ்ச நேரத்துல அனுப்பி வைக்கிறேன்." தொடர்பு துண்டித்தது.
ஓரமாக புன்னகைத்து பெருமூச்செறிந்தான் அகிலன். "அண்ணே, என்ன சொல்றான் இப்போ?"
அகிலன் எழுந்து நடந்தான், "வேலை இனிமேதான் ஆரம்பமாகிருக்கு. வா கிளம்பலாம்." விக்கி எழுந்து வண்டிக்கு ஓடினான், "அப்போ அவங்க?"
கதவைத் திறந்த அகிலன், சற்று நின்று மரத்தில் மோதியிருந்த அந்த வாகனத்தை பார்த்தான் பின் வனத்தில் பார்வையை படரவிட்டான். வண்டிக்குள் ஏறிக்கொண்டே, "பார்த்துக்கலாம்" என்றான்.
ஒரு மூலையில் வைத்திருந்த தண்ணீர் புட்டியை எடுத்து குடித்தான். 'இவனுங்க எங்க போறானுங்கனு தெரியலையே. எப்படியும் இவனுங்க முன்னாடி Santa Fe போய்டணும்' அசையாமல் யோசித்தான் சஞ்சய்.
அலைபேசி சிணுங்கி ஒலித்தது. "விக்கி, Santa Fe, Hyde Park Road போ.."
நசுக்கமடைந்தான் சஞ்சய், 'இவனுங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?' திரும்பி தன்னைப்போல அருகே படுத்திருந்த லீலாவை நோக்கினான். அவளும் அந்த இடத்தை கேள்வியுற்று அதிர்ந்திருந்தாள் என்று முகம் காட்டியது. முன்னாள் சுட்டிக்காட்டி சைகை செய்தாள், 'எப்படி?'
சஞ்சய் தன் Jean காற்சட்டையை தொட்டு பார்த்து யோசித்தான். மெதுவாக எழுந்து அவளது காலை தொட்டான். லீலா எழுந்து நோக்கினாள். அவளது இடது காலில் இருந்த chainனை காணவில்லை. 'எங்கே?' என்று சைகை செய்து கேட்டான் சஞ்சய். லீலாவின் முகத்தில் குழப்பம் படர்ந்தது. திடீரென்று தூக்கிப் போட்டது வண்டி. இருவரும் பின்னிருக்கையில் வேகமாக மோதினர், அங்கிருந்த பொருட்கள் அவர்கள் மீது மோதி உருண்டது.
"டேய், பின்னாடி என்ன இருக்கு? போய் பாரு..." என்று குரல் கேட்டவுடன் திடுக்கிட்டான் சஞ்சய். "இந்தா..." என்று கதவு திறக்கப்பட்டது. என்ன செய்வதென தெரியாது முழித்தபோது, இருக்கையின் அடியில் இருந்த மிதிடியை பார்த்தான். அதை இழுத்து போர்த்தி லீலாவை தன்னோடு நெருக்கி அணைத்தான். பின்கதவு திறக்கப்பட்டது.
அலங்கோலமாய் இறைந்து கிடந்தது வண்ணப்பூச்சு சாமான்கள். அதில் ஒன்றை எடுத்து என்னவென்று பார்த்துவிட்டு தூக்கி எறிந்தான் விக்கி. "ச்சை... அண்ணே paintண்ணே. சரியா மூடலைப் போல ஊத்திடுச்சு" என்றபின் கதவு மூடப்பட்டது. அவன் இருக்கைக்கு வந்தமர்ந்து வண்டியை மீண்டும் எடுத்தான்.
நிம்மதி அடைந்தான் சஞ்சய். தன் உடல் உணரும் கதகதப்பை எண்ணி மெய்சிலிர்த்தான். மிதியடியை விளக்கி போட்டு அசையாமல் இருந்த லீலாவைப் பார்த்தான். முகத்தில் சரிந்திருந்த முடியை எடுத்து காதுமடலுக்கு பின்னால் ஒதுக்கினான். அப்பொழுதும் அசையாமல் இருந்ததில் பதறினான். அவளது சுவாசத்தை விரல்களில் உணர்ந்தான், 'முதலில் தூக்கி போடப்பட்டதில் தலையில் அடிபட்டிருக்க வேண்டும்' என்று தேற்றிக்கொண்டான். தன் jacketடை சுருட்டி அவளது தலையின் அடியில் வைத்தான்.
அவனுக்கு பின்னால் மஞ்சள் வண்ணம் ஊற்றிக் கிடந்தது. அதன் மீது மிதியடியை போட்டு ஓரளவுக்கு மறைக்கப் பார்த்தான். பின் நகர்ந்து ஓரமாக சாய்ந்து அமர்ந்தான்.
'இவர்களுக்கு எப்படி நாம் விபத்துக்குள்ளான இடம் தெரியும்?' என்று யோசித்தான். Track செய்கிறார்களோ என்று தன் jeanனில் இருந்த அலைபேசியை திறந்திருந்த ஜன்னல் வழியே வெளியே எறிந்தான். மாருதியின் engine சத்தத்தில் அது விழுந்த ஒலி மறைந்தது.
"வா போகலாம்"
என்றான் சஞ்சய். அவர்கள் தங்கள் தடங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்த சமயம் மெதுவாக வண்டியை நோக்கி நகர்ந்தனர். அவர்களது ஒவ்வொரு அடிகளுக்கு இணையாக அடியெடுத்து நகர்ந்தனர் லீலாவும் சஞ்சய்யும். சஞ்சய் பின் கதவை திறந்தபோதுதான், அங்கு 'அண்ணா' என்று குரல் எழுந்தது. தங்களை கண்டு விட்டனரோ என்று அந்த மாருதியின் மறுபக்கம் ஒளிந்துக்கொண்டனர். மேலும் சத்தம் ஏதும் எழாததை அறிந்து மெதுவாக பின்கதவை தூக்கினான். சிறிய இடைவெளியிலேயே லீலாவும் சஞ்சய்யும் அதில் ஏறிக்கொண்டனர். "ஏய்... என்ன நாம அவனுங்க வண்டிலையே ஏறுறோம். அவனுங்க கிட்ட சிக்கிட்டோம்னா?" என்று கேட்டாள் லீலா.
கதைவை மெதுவாக மூடிவைத்து, "சிக்கமாட்டோம். Trust me" பின் அவளது பார்வையை பார்த்து, "Will you?" என்றான்.
அவள் அதற்கு பதில் சொல்லாமல், "யாரு அவனுங்க? அத சொல்லு முதல்ல" என்றாள். இடதுபுறம் கதவு திறந்ததில் இருவரும் அமைதியாய் படுத்துக்கொண்டனர்.
நினைவிலிருந்து விடுப்பட்டு, 'ஒருவேளை லீலாவின் chainனை கண்டுதான் அந்த குரல் எழுந்ததோ?' என்று திடீர் அச்சம் எழுந்தது சஞ்சய்க்கு. 'இருக்கக்கூடாது. ஆனால், அது அவர்களிடம் சென்றுவிட்டால்? இல்லை, முதலில் இவர்களுக்கு முன்னமே அந்த வீட்டை சென்றடையும் வழியறிய வேண்டும்' என்று முடிவு செய்துக்கொண்டான்.
எழுந்து அமர்ந்து ஜன்னல் வழியே வெளியே நோக்கினான். இன்னும் சிறிது நேரத்தில் நகரத்தை அடைந்து விடுவார்கள் என தோன்றியது. அலைபேசியின் அலறலில், சஞ்சய் குனிந்து கொண்டான். லீலாவை கன்னத்தில் தட்டி எழுப்பினான். மெதுவாய் சிலமுறை திறந்து பின் நினைவறிந்து கண்களை விரித்துப் பார்த்தாள். 'எப்படியோ எழுந்து விட்டாள்' என்று மனதுக்குள் மகிழ்ந்தான் சஞ்சய். அவள் ஏதோ பேசமுயற்சிக்க, வாயை பொத்தி 'பேசாதே' என கண்களால் காட்டினான்.
"என்ன?!" புருவங்கள் சுருங்கியது அகிலனுக்கு. வேகமாக ஓடிக்கொண்டிருந்த வண்டி மீண்டும் ஏதன் மீதோ ஏறி இறங்கியது. "விக்கி..." என்று சொல்லி வண்டியை நிறுத்தும்படி சைகை செய்தான். கதவை அவசரமாய் திறந்திறங்கி பின்கதவை திறந்துப் பார்த்தான். வண்ணம் ஊற்றிருந்தது. ஆனால் முதலிலேயே விக்கி அதை சொல்லியிருந்தபடியால் கதவை மூடப்போனான். கதவின் ஓரத்தில் இருந்த பூச்சுக்கரையை கண்டுவிட்டான். மெதுவாக மேலேற்றி உள்ளே பார்த்தான். வண்ணத்தின் மீது மிதியடி விரிந்திருந்தது.
சத்தமாக மூடிவிட்டு சிறிது தூரம் நடந்து அங்கும் இங்கும் பார்த்தான். "ச்சா" என்று தலையைக் கோதிவிட்டு சாலையை எத்தினான். என்ன நடக்கிறதென்று புரியாமல் நின்று பார்த்திருந்த விக்கி அகிலனருகே சென்று, "என்னண்ணா?" என்றான்.
இடையில் கைவைத்துக்கொண்டு, "நம்ம வண்டிலதாண்டா இருந்துருக்காங்க அவங்க. எப்படியோ தப்பிச்சுட்டாங்க..."
அதிர்ந்து போனான் விக்கி, "என்ன?!"
"ஆமாண்டா.. வா வா எடு வண்டிய... வேகமா போகணும்" என்று கூவிக்கொண்டே அகிலன் வண்டியை நோக்கி ஓடினான். விக்கி மாயத்திலிருந்து விடுபட்டவனாய், "இதோ வந்துட்டேன்..."
என்று ஓடி வண்டிக்குள் ஏறினான். அடுத்த நொடி பறந்தது மஞ்சள் மாருதி.
களவாடப்படும்...



Comments
Post a Comment