களவாடிய பொழுதுகள்!

அத்தியாயம் 4: வேகத்துடிப்பு - 2

"ஆஆ... அம்மா" என்ற முனகல் கேட்டு சாலையை நோக்குவதை விடுத்து சஞ்சய்யின் அருகில் வந்து அமர்ந்தாள் லீலா. "சஞ்சய், ரொம்ப வலிக்குதா? அப்போவே சொன்னேன் hospital போலாம்னு நீதான் கேக்கல. இந்த நிலமைல இப்போ இந்த உருண்டு போற idea வேற உன் மண்டையில உதிச்சிருக்கு பாரு... ஹையோ" என நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

மெதுவாக எழ முயற்சி செய்த சஞ்சய் வலியை தாங்கிக்கொள்ள பற்களை கடித்துக் கொண்டான். உடனே அவனது தோளோடு தோள் சேர்ந்தாள் லீலா. அவனுக்கு நிற்க உதவி புரிந்து அவன் சட்டையில் ஒட்டியிருந்த சருகுகளை அப்புறப்படுத்தினாள். "இப்போ எங்க அதுக்குள்ள கிளம்புற? கொஞ்ச நேரம் உக்காரு" என்றாள்.

"நம்மகிட்ட அவ்வளவு நேரமில்லை லீலா.."

"நானும் முதலிலிருந்து கேட்டுட்டு இருக்கேன் நீ சொல்ல மாட்டீங்கிற. அவனுங்களாம் யாரு? அவங்க ஏன் நம்மை தொரத்தினாங்க? நாம ஏன் ஓடணும்?"

அந்த வலியிலும் அவளது கேள்வி அம்புகளால் புன்னகையித்துக் கொண்டு சாலையில் நடந்தான் சஞ்சய். கேள்வி கேட்டுக்கொண்டே வந்தவள் அந்த சிறுநகரில் தென்பட்ட ஒரு clinicகை பார்த்து, "சஞ்சய் clinic இருக்கு பார் அங்க. வா போகலாம்" என்று அவனை இழுத்துச் சென்றாள்.

"லீலா... நமக்கு நேரமில்லை. அவனுங்கள…"

"அதெல்லாம் இருக்கு. அவங்கதான் போய்ட்டாங்கல்ல. சனியனை விட்டோம்னு இருக்கியா. அத விட்டுட்டு அவங்களையே கட்டிபுடிச்சு தொங்கிட்டு இருக்க. பேசாம வா!" என்று அழைத்துச் சென்றாள்.

clinicகுள் நுழைந்தவுடன் அவனை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு அங்கிருந்த receptionist இடம் தேவையான தகவல்களை தெரிவித்தாள். கூட்டம் இல்லாமல்தான் இருந்தது. சிறிது நேரத்திலேயே டாக்டர் அறையிலிருந்து ஒரு பெண்மணி வெளிவந்து pharmacy நோக்கி சென்றார். பின் டாக்டர் அறையிலிருந்து, "சஞ்சய்!" என்று அழைக்கப்பட்டது.

லீலா சஞ்சய்யை உள்ளே அழைத்துச் சென்றாள். ஒரு தாதி சஞ்சய்யின் சட்டையை கழற்ற உதவினாள். பின்னறையிலிருந்து டாக்டர் வந்தார். அவர் வந்து காயத்தை கவனித்தார். காயத்தின் மீதுள்ள பச்சிலை காய்ந்திருந்ததை கவனித்து அது என்னவென்று வினவினார். லீலா அந்த தாவரத்தின் விவரங்களை குறித்து தெரிவித்தாள். பின் அவளை வெளியே காத்திருக்கும்படி அனுப்பி வைத்தார் டாக்டர். சஞ்சய்க்கு pain killer தரப்பட்டது. அதோடு காயத்திற்கு மருந்திட்டு துணியும் கட்டப்பட்டது.

"டேய், அந்த route எடு" என்று கைகாட்டினான் அகிலன். பிரதான சாலையிலிருந்து வனப்பகுதிக்குள் ஒரு சிறுவழி சாலையில் மாருதி நுழைந்தது. போகும் வழியெல்லாம் கரடு முரடாகவே இருந்ததில் விக்கி சபித்துக் கொண்டே வண்டி ஓட்டினான். "விக்கி நல்ல கேட்டுக்கோ, உள்ள ஒரு வீட்டுக்குள்ள நாம நுழைய போறோம். Boss சொன்ன அந்த பெட்டிய கண்டுபுடிக்கிறோம். அதுக்குள்ள உள்ளத கொண்டுபோய் சேர்க்கிறோம். உன் துப்பாக்கியை மறுபடி அங்க இங்க வச்சிடாத கூடவே எடுத்து வா. அவங்க நமக்கு முன்னாடி அங்க இருந்தாலும் இருக்கலாம்" என்று எடுத்துரைத்தான் அகிலன்.

"சரிண்ணே" என்றான் விக்கி. மாருதி ஒரு பள்ளத்தினுள் இறங்கி சாலையை விட்டு விலகிச் செல்ல, விக்கி steeringகை மறுபுறம் திருப்பினான். ஆனால் வண்டி திசை மாறாமல் விலகிச் சென்றபடியே ஓரிடத்தில் நின்றது. "என்னடா ஆச்சு?" என்று வண்டியை விட்டு இறங்கினான் அகிலன்.

"Engine சூடாகிடுச்சு அண்ணே. Petrol வேற தீரப்போகுது" என்று சொன்னபடியே விக்கியும் இறங்கி வண்டியை பரிசோதித்தான். "சோமாறி என்ன வண்டிய வச்சிருக்கான் ச்சா!"

"சரி வா நடந்தே போகலாம். துப்பாக்கியை எடுத்துக்கோ" என்று சொல்லிவிட்டு அகிலன் புறப்பட்டான்.

"தோ வந்துட்டேன் bro" மாருதியிலிருந்து தன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அகிலனின் பின்னால் ஓடினான்.

பத்து நிமிடங்களில் சஞ்சய் அறையிலிருந்து வெளிவந்தான். பின்தொடர்ந்த டாக்டர், சஞ்சய் மற்றும் லீலாவை பார்த்து, "பளுவான வேலை ஏதும் செய்து உடம்பை strain பண்ணிக்காதிங்க. உங்களுக்கு rest அவசியம். இந்த கடுதாசியில் உள்ள medicine pain அதிகமானா மட்டும் சாப்பிட்டா போதும். இன்னும் 2 days, you will be alright. சரியான நேரத்துல blood flowவை stop பண்ணிருக்கீங்க, லீலா. But அது எல்லா நேரத்துலையும் உதவாது. You are lucky" என்றார். "Thank you, டாக்டர்" என்றான் சஞ்சய். லீலா அந்த கடுதாசியை எடுத்துக் கொண்டு pharmacyயில் தேவையான மருந்துக்களை வாங்கினாள்.

இருவரும் clinicகை விட்டு வெளிவருகையில் லீலா தன் பாக்கெட்டிலிருந்து அலைபேசியை எடுத்தாள். ஒரு எண்ணை தேர்வு செய்து அழைத்தாள். அதைக் கண்ட சஞ்சய் அதிர்ச்சியில், "யாருக்கு phone பண்ற?" என்று அந்த அலைபேசியை பிடுங்கினான்.

"ஏய்... taxiக்கு தான் phone பண்ணேன். கொடு இங்க..."

"எப்போதிலிருந்து வச்சிருக்க இத?" என்று பதற்றமாக வினவினான்.

லீலா முறைத்துக்கொண்டே "கொடு இங்க... என் காரை நொறுக்கின அன்னைக்குதான் எடுத்தேன்."

"Oh God! இதுனாலதான் அவனுங்க நமம்ல correctடா follow பன்றானுங்க லீலா. என்னோட phoneஅ தேவை இல்லாம தூக்கி எறிஞ்சுட்டேன்."

"என்ன ஒளறிட்டு இருக்க? கொடுக்கப்போறியா இல்லையா இப்போ?"

"இத இனிமேலும் வச்சிருக்க கூடாது, லீலா" என்று பாதாள சாக்கடையின் மூடி வழியே கீழே போட்டான்.

"Oh shit! டேய் ஏண்டா அதுக்குள்ள போட்ட?" என்று அவனை அடித்தாள் லீலா.

"Cool down, லீலா. இப்போ உடனடியே கிளம்பனும். அவனுங்க அந்த வீட்டுக்கு போய் சேர்றதுக்கு முன்னாடி நாம போகணும்" என்று சாலையில் இறங்கி கையை ஆட்டி ஒரு taxiயை கூப்பிட்டான் சஞ்சய்.

லீலாவின் கோபம் உச்ச்சமடைந்தது, "எந்த வீடு? ஏன் நாம அவனுங்கள தேடி போகணும், சஞ்சய்? இப்போவாவது அவங்க யாருனு சொல்லப் போறியா இல்லையா? உனக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்? இப்போ நீ சொல்லாம இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் சஞ்சய்!" தன் மனதில் நிறைந்திருந்த அத்துணை கேள்விகளையும் கேட்டுவிட்டாள் லீலா.


Taxi அவர்களது அருகே வந்து நின்றது. "லீலா please, time இல்ல போகலாம்" என்று சஞ்சய் கதவைதிறந்து காட்டினான். லீலா அசையாமல் நின்றாள். "Please லீலா எனக்காக வா" என்று இறைஞ்சினான்." மீண்டும் அமைதி காத்தாள் லீலா.

பெருமூச்செறிந்து, "லீலா.... Mr. சுந்தராஜனுக்காக வா" என்றான்.

லீலாவின் புருவங்கள் சுருங்கின. இதயம் வேகமாக துடித்தது.

களவாடப்படும்...

Comments