களவாடிய பொழுதுகள்!
அத்தியாயம் 5: எதிரொலி - 1
Taxi யில் ஏறியபின் சஞ்சய் சொன்ன விவரங்கள் அனைத்தும்
நம்பமுடியாத ஆச்சர்யத்தை தந்தன. தன் அன்னை தந்தையை தாண்டி அவளது குடும்பத்தை பற்றி
அதிகம் அறிந்திடாத லீலா, முதல் முறையாக ஒரு ரஹஸ்யத்தை தெரிந்துக் கொண்டாள்.
தன் பெற்றோருக்கு இவ்விஷயம் ஒருவேளை தெரிந்திருந்தால் நிச்சயம் தன்னிடம் கூறியிருப்பார்கள்.
இப்போது இவ்விஷயத்தை உறுதிப்படுத்தவும் அவளது பெற்றோர்களும் உயிருடன் இல்லை.
"அப்படியே policeசுக்கு சொல்லி அவங்களையும் கூட்டிட்டு வரப்பாருடா. ஆ... இருக்கு. போன முறை போனப்போ
அங்க மறைச்சு வச்சிருந்தேன். நா பாத்துக்குறேன்" என்று கூறி கடனாய் வாங்கிய அலைபேசியை திரும்ப ஓட்டுனரிடம் கொடுத்தான் சஞ்சய். "லீலா.. லீலா!"
எங்கோ தூரத்தில் ஒலித்து கொண்டிருந்ததுபோல் இருந்தது
அந்த குரல். தன் தோளில் தட்டி "லீலா" என்றழைக்க அவன்புறம் நோக்கினாள்.
"Are you okay?"
"Ah ya..."
"உன்னால நம்ப முடியலைன்னு நினைக்குறேன். உனக்கே எல்லாம்
புரியும். கொஞ்சம் பொறுத்திரு, லீலா" என்றான் சஞ்சய்.
"யார்ரா இவன் இம்மாம் பெரிய வீட்டை காட்டுக்குள்ள
ஒளிச்சுவச்சது?" என்று வாயை பிளந்தான் விக்கி.
"வீடு இல்லடா, பெட்டி ஒளிஞ்சிருக்கு."
வனத்தின் நடுவில் மச்சு வீடு நல்ல கலையோடு கட்டப்பட்டிருந்தாலும் பராமரிப்பற்று அங்கங்கு பழுதடைந்திருந்தது, பாசி படர்ந்திருந்தது. வீட்டை சுற்றி மதில் சுவரும் பிரம்மாண்ட வெளி வாயில் துருபிடித்திருந்தது.
"பெட்டியா?"
அகிலன், "ஆமாண்டா, அதுக்குள்ள இருக்குற எதையோ எடுக்குறதுக்குத்தான்
இவ்வளோ ஓட்டம்"
திறந்திருந்த அந்த வாயிலின் வழியே இருவரும் உள்புகுந்தனர்.
அகிலன் மெதுவாக பார்வையை வீட்டை சுற்றி ஓடவிட்டான். எந்த நடமாட்டமும் இல்லாததை பார்த்து
விரைந்து செயல்பட ஊக்கம் கொண்டான்.
"அதுக்கு நேரே இங்க வந்து வேலைய பாத்திருக்கலாமே அண்ணே..
சாவி தேடி அலைஞ்சுட்டு இருந்தோமே"
"பெட்டியை திறக்கணுமேடா.. அதுக்குத்தான் சாவியா இருக்கும்."
அந்த வீட்டில் மனிதர்கள் வாழ்ந்த பொழுது எவ்வளவு
அழகாக இருந்தது என்று கற்பனை செய்து பார்த்தான் அகிலன். வாயில் படிகளில் ஏறி
வாசல் கதவை பார்த்து நின்றான். கண்ணாடி சன்னல்கள் வழியே உள்ளே பார்த்தான். வீட்டு கதவு
திறக்கப்பட்டது. வீட்டின் உட்புறமெங்கும் தூசி படிந்து மூலைகளில் சிலந்தி வலைகள் இருந்தன.
"விக்கி, எதாவது பூட்டின
பெட்டி இருக்கானு பாரு. நா மாடில போய் தேடுறேன்" என்றான் அகிலன்.
மச்சு படிகளில் ஏறினான். விசாலமான மேல் கூடம், மூன்று அறைகள் இருந்தது. கிழக்கில் அடர்வானத்தை பார்வையிடும் வகையில் ஒரு வராண்டாவும்
இருந்தது. கூடத்தில் நடந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தான் அகிலன். இரு அறைகளுக்கு இடையில்
சுவற்றை ஒட்டி அமர்த்தப்பட்ட மேஜையின் மேல்
வைக்கப்பட்ட பொருட்களுள் ஒரு புகைப்படம் அவனை சற்றே ஈர்த்தது.
இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவிற்கு
வந்தது தாத்தாதான். முதலில் இங்கேயே கம்மியராக வேலை செய்த பின்பு அமெரிக்க இராணுவப்படையில்
இணைந்தார். பின்னாளில் அமெரிக்க பெண்மணி ஒருவரை மணமுடித்துக்கொண்டார் தாத்தா. வேலை
ஓய்வு பெறுகையில் முதல் உயரிய விருது வழங்கப்பட்ட முதல் வெளிநாட்டார் தாத்தா, Major R. சுந்தரராஜன்.
"தாத்தாவை பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது. அவர் வீட்டுக்கு
குழந்தையா இருந்தப்போ போயிருப்பேன். அதுக்கப்புறம் போனதில்ல. அதுக்குமேல அவர் இறந்த
செய்திதான் தெரிஞ்சது."
"ஆனா சும்மா சொல்லக்கூடாது லீலா. உங்க தாத்தா பெரிய
ஆள்தான். இராணுவ ரகசியத்தை இதுவரை மறைச்சு வந்திருக்காரே."
"உனக்கு எப்படி தெரிஞ்சது இந்த விஷயம் எல்லாம்?"
மெலிதாக புன்னகைத்து, "One
year of work" என்றான்.
'ஒரு வருடமாக இந்த வேலையில் ஈடுபட்டிருந்தானா? எனக்கு இவனை ஆறு மாதங்களாக தானே தெரியும். அப்படியானால் இவன் என்னை பின்தொடர்ந்து
இருக்கின்றானா? என்னை வேவு பார்த்து ஏதோ நோக்கத்தோடு பழகி வந்திருக்கின்றானா? இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசித்திருக்கின்றான்? என்னை இதில் உடன் சிக்க வைத்ததன் காரணம் என்ன? என்னை வைத்து எதையேனும் அடைய விழைகின்றானா? இவனது பெயர் படிப்பை தவிர அவ்வளவாக இவனை பற்றி தெரியாதே?!' என்று கேள்விகள் மடைந்த திறந்து ஓடின லீலாவின் மூளைக்குள். எந்த கேள்வியிலிருந்து
ஆரம்பிப்பது என தெரியாமல் அவனையே வெறித்து பார்த்திருந்தாள்.
Taxi நகர்புறத்தை விட்டு சற்று தள்ளி வனத்திற்குள் சென்ற
சாலையில் திரும்பியது. அவளது முகத்தில் கவலை ரேகை ஒன்று தோன்றிருப்பதை கவனித்தான் சஞ்சய்.
எனினும் மௌனம் காத்தான். பின் அவள் ஏதோ பேச வாய் திறக்கையில் taxi ஓட்டுனரை நிறுத்தச் சொன்னான். "இறங்குவோம்" என்று சொல்லி இறங்கி ஓட்டுனரிடம் பணத்தை நீட்டி வாகனத்தை சுற்றி வருவதற்குள்
லீலா அலைக்கழித்து போனாள். மறுபுறத்து கதவை திறந்து அவசர அவசரமாக இறங்கினாள்.
சஞ்சய்
அதற்குள் விடுவிடுவென சாலையை கடந்து வனத்திற்குள் புகுந்தான்.
"சஞ்சய்...! சஞ்சய்...!"
அவனை தொடர்ந்து பின்னால் ஓடினாள் லீலா.
அவன் பதில் ஏதும் பேசாமல் நடந்து கொண்டே இருந்தான்.
லீலா அவனை துரத்தி முன்னாள் ஓடி வழிமறித்து நிறுத்தினாள். பெருமூச்சுக்களிடையே, "நீ யாரு? வேவு பார்த்து நோக்கத்துடன் என்கூட இவ்வளோ நாள் பழகினாயா?" என வினவவே தள்ளாடி எழுந்து நின்ற அவள் ஒரு மரக்கிளை தடுக்கி பின்னால் விழப்போனாள்.
கையோடு கை கோர்த்து அவளை விழாமல் பிடித்துக்கொண்டான், "Hey I'm
Sanjai Paarivallal, US Department of Defense."
களவாடப்படும்...



Comments
Post a Comment