கிருஷ்ணனின் போதனையாக வாழ்ந்த இராமன்!

மனிதன் வாழ்க்கையில் இரண்டு விதமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறான். 

ஒன்று தார்மீகம் (moral), மற்றொன்று நெறிமுறை (ethical).


தார்மீக நெருக்கடிகள் எளிமையானவை. சந்தேகமில்லா சத்தியத்திற்கும் வெளிப்படையான தவறுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் வெகு வெளிப்படையானவை. அவ்வாறிருக்க, சரியானதை செய்ய வலிமையையும் ஒருமைப்பாட்டையும் பண்பாக கொண்டிருந்தால் போதுமானது. இவ்விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை.

மறுபுறம் நெறிமுறை நெருக்கடிகள், சற்று சிக்கலானவை. தேர்வுகள் 'சரி-தவறு' என்பதற்கிடையே இல்லாமல், சில சரியானவைகளுக்கிடையே இருக்கும். அவ்வாறிருக்கும்பொழுது, சிறந்த முடிவை எடுப்பதற்கு ஒருவருக்கு தெள்ளத்தெளிந்த ஞானம் அவசியம்.

கிருஷ்ணனின் தத்துவம் எளிமையானது.

அவன், ஒருவர் நெறிமுறை நெருக்கடியில் இருக்கும் போது, அவர் உயர்ந்த தார்மீகத்தை தெரிவு செய்து அதன்படி குறைந்த தார்மீகத்தை சரிசெய்ய வேண்டும், என்கிறான். உயர்ந்த தார்மீகமானது, பெரும்பாலான மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும், நீண்டகால நீடித்த விளைவுகளைக் கொண்டது, அதோடு அதிகபட்ச ஆன்மீக வளர்ச்சியை நல்குவது. இது முழுமையான அர்த்தத்தில், குறைந்தபட்ச 'சுயநல தேர்வு'. இது உத்தமமான சிறந்த வழியாக இலலாமல் இருக்கலாம், ஆனால், மிகவும் நடைமுறைக்கு ஏற்றது அதோடு அனைத்தையும் மேம்படுத்த வல்ல வழி.

ஒன்றை தக்கவைத்திருப்பது உன்னதமானதாக இருந்தாலும், அது அனைவரது ஆன்மீக வளர்ச்சி மற்றும் பொதுநல வழியின் இடையே வந்தால், அதை கைவிடலாம் என்கிறான் கிருஷ்ணன்.


கிருஷ்ணனின் தத்துவம் அவனது முந்தைய அவதாரத்தின் - அழகிய இராமன் - செயல்களோடு முரண்படுவதாக சிலர் நினைக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் இராமன்தான் கிருஷ்ணனின் தத்துவத்தின் படி வாழ்த்த மிகவும் சிறந்த எடுத்துக்காட்டு என உணர்கிறேன் - இறைவனாக இல்லை, ஒரு மனிதனாக.

இராமன் அவனது வாழ்க்கையின் மிகப் பெரிய நெறிமுறை நெருக்கடியை எதிர்கொண்டன், தற்செயலாக, சீதையின் புனிதத்தை பற்றி ஒரு வண்ணான் கேலிபேசி வதந்தி பரப்புவதை கேட்டபோது. அவனால் அதை கைவிட முடியவில்லை.

அவன் இரண்டு அல்ல, மூன்று "சரியான" தேர்வுகளுக்கிடையில் முடிவுசெய்ய வேண்டியிருந்தது.

ஒன்று, ஒரு அரசனாக சரியானதைச் செய்வது - தயக்கமில்லாமல் பாராபட்சம் காட்டாமல் மக்களுக்காக சேவை செய்வது, தையை காட்டுவது அதோடு அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைப்பது;

இரண்டு, ஒரு கணவனாக சரியானதைச் செய்வது - மனைவிக்கு உறைவிடம், உணவு, உடை மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் கொடுத்து அவளை பாதுகாப்பது;

அதோடு மூன்று, ஒரு மனிதனாக சரியானதை செய்வது - தனது காதலியை மதித்து அவள் மீது நம்பிக்கை கொண்டு அவளுக்கு துணை நிற்பது. 

இது அவனுக்கு எளிதானதல்ல. அவன் 'சிறந்ததற்கு' தூரமான ஒரு தீர்வினை முன்கொண்டு வந்தான், ஆனால், அது மிகவும் தன்னலமற்றதாக இருந்தது. உண்மையில், அத்தீர்வின் சுயநலமின்மை, அவனுடைய இதயத்தை உடைத்தது, அவனை தனது காதலியிடமிருந்து பிரித்து அதோடு தனது புத்திரர்களின் உரிமைகளை அவர்கள் பிறப்பதற்கு முன்பே பறித்தது.

இது தன் தனிப்பட்ட விஷயம், தன்னுடைய மனைவி புனிதமானவள் என தனக்கு தெரியும் என்று மக்களிடம் கூறியிருந்தால், அவர்கள் அவனது பாராபட்சத்தை குற்றம் சாட்டியிருப்பர். அவன் தங்கள் உணர்ச்சிகளைப் (sentiments) பற்றி கவலைப்படவில்லை என்று நினைத்திருப்பார்கள். சாதாரண மனிதனாக அவனால் அதை செய்திருக்க முடியும். ஒரு அரசனாக அதை செய்ய அவனுக்கு அவ்வாறொரு வசதியில்லை.

ஒரு சிறந்த மனிதனாக, அகல்யா, சபரி, மண்டோதரி மற்றும் தாரா ஆகியோரை அவன் அங்கீகரித்து மீட்டெடுத்தான். ஆனால், அதுவே அவனது மனைவிக்கு வந்தபோது, அது தனிப்பட்ட விஷயமாகிறது. 

அவன் மற்ற பெண்களின் தரப்பில் நின்று, உலகின் கண்களில் அவர்களது தூய்மையை உறுதிப்படுத்தினான். ஆனால் அதேபோல, அவன் தன் மனைவியின் தரப்பில் நின்று கொண்டிருந்தால், அவர்களுடைய சந்தேகங்கள் இன்னும் உலவிக்கொண்டுதான் இருக்கும்; அவன் அவளை பற்றி எதோ ஒன்றை மூடிமறைக்கிறான் என்று உலகம் நினைக்கும்.

பரிபூரண அரசனாக, அவன் முதலாகவும் முதன்மையாகவும், தன்னுடைய சொந்த உணர்ச்சிகளுக்கு முன்னால் தன்னுடைய பிரஜைகளின் உணர்ச்சிகளை வைத்தான். மக்கள் சீதையின் கற்பை சந்தேகித்து புனிதமான அரியணையில் அமர அவள் தகுதி உடையவளா எனும்போது, அவளை அரண்மனையிலிருந்து அனுப்பிவிட்டான்.

பரிபூரண கணவனாக, அவன் அவளை விரட்டவோ கைவிடவோ இல்லை. அவனும் அவளுடன் வால்மீகியிடம் சென்றான் - அந்த நேரத்தில் மிகவும் முற்போக்கான சிந்தனையுள்ள தூய்மையான இதயமுள்ள முனிவர். வால்மீகியின் ஆசிரமம் புவியியல் ரீதியாக இராமனின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தது, எனவே அவன் மறைமுகமாக அவளை கவனித்துக் கொண்டிருந்தான். வால்மீகி ஆசிரமத்தில் உள்ள பெண்கள், சீதையையும் பிறக்காத குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டனர். இராமன் மறைமுகமாக அவளுக்கு உணவு, உறைவிடம், உடை ஆகியவற்றை வழங்கினான். அவளை மதிப்பவர்கள், அவளுக்கு மரியாதை அளிப்பவர்கள், அவள் மீது நம்பிக்கை கொண்டவர்கள், அவளது கண்ணியத்தை உறுதிப்படுத்துபவர்களின் பராமரிப்பில் அவள் இருப்பதில் அவன் அக்கரை எடுத்துக்கொண்டான்..

பரிபூரண மனிதனாக, தன் மனைவியைப் பற்றி அவன் எப்படி உணர்கிறான் என்பதை தன் பிரஜைகளுக்கு, அவர்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்த பின்னரும், காட்டினான். சீதை குறைகளுக்கு அப்பாற்பட்டவள் என அவன் அறிந்திருந்த எல்லாவற்றையும் அவர்கள் அறிகிறார்கள் என்பதை அவன் உறுதிப்படுத்திக்கொண்டான். அவன் அவர்களை நேசித்தாலும், அவர்கள் மீது அக்கறை கொண்டாலும், அவர்களது நிலையற்ற வதந்திகளுக்கு ஆதரவளிக்கவில்லை. அவர்களது இதயங்களில் சீதைக்கான நிரந்திரமாக மரியாதை உணர்வை ஸ்தாபித்தான். அவர்களது வார்த்தைகளுடைய ஞாயமின்மை பற்றிய புரிதலை அவன் அவர்களுக்கு உணர்த்தினான். அதோடு அவர்களது அன்பு சீதை திரும்பி வர மறுத்தபோது அவர்கள் இழந்ததை உணர்ந்தார்கள்.

சிம்மாசனத்தில் அமரவைப்பதற்கு மறுமணம் புரிய மறுத்தான், பதிலாக, சீதையின் தங்கச் சிலைக்கு இடமளித்தான். செம்பு அல்ல, வெள்ளி அல்ல, களியும் அல்ல. தங்கம் - சீதையைபோல ஒருபோதும் கறைபடியாத ஒரு உலோகம் என்றான். சீதை மீது அவன் கொண்டிருந்த ஆழமான அன்பின் அடையாளமாக இருந்தது அவன் செயல். இது அவன் எவ்வளவு ஆழமாக அவள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறான் அவளை மதிக்கிறான் என்பதை உலகிற்கு காட்டும் அவனது வழி. இது அவனது பிரஜைகளுக்கு ஒரு உருவக (allogerical) அறிக்கை அதாவது, "நீ என்ன சொன்னாலும், எனக்கு, என் சீதை புனிதமானவள், கறைபடியாதவள், என் வாழ்வின் காதல், அதோடு எப்போதும் என் ஒரே ராணி" என்பதே. 

கிருஷ்ணனின் தர்மத்தின் வரையறைக்கு இராமனே உண்மையில் சரியான உதாரணம். பெரிய காட்சியை மறக்காமல் தார்மீக நெருக்கடியை அவன் கையாண்டான். பெரிய, நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடிய "சரியானவைகளுக்கு" சேவை செய்ய சிறிய "சரியானவைகளை" கைவிட்டான்.

சிறிய "சரியானது", உடலளவில் சீதையை தக்க வைத்து அவளோடு நின்றிருப்பதாக இருந்திருக்கும். ஆனால், அவன் உலகத்திற்கு ஒரு உயர்ந்த அன்பை காட்டினான் - ஆழமான, நுண்ணியமான பற்றில்லா காதலை. சிறிய "சரியானது", அவள் தூய்மையானவன் என்று உலகத்திற்கு அறிவிப்பதாக இருந்திருக்கும். ஆனால், அவன் அவர்களாகவே அதை உணரும்படி செய்தான். சிறிய "சரியானது", சுயநலமாக, அவனுக்காக, அவனது மனைவிக்காக, அவனது மனைவியுடனான திருமண பேரின்பத்திற்காக வாழ்வதாக இருந்திருக்கும். ஆனால், அவன் தன்னலமில்லாமல் சோகத்தில், தாழ்மையாக தனிமையில் வாழ்ந்தான். சிறிய "சரியானது", அகிலம் அனைத்தும் அவளுக்கான அவனது மரியாதையை பறைசாற்றுவதாக இருந்திருக்கும். ஆனால், நீடிக்கும் காலத்தில் உலகம் அவளுக்கு மரியாதை அளிப்பதை உறுதி செய்துகொண்டான். சிறிய "சரியானது", சிறிய சாமான்ய மனிதனாக வாழ்வதாக இருந்திருக்கும். ஆனால், அவன் மகா பெரியவர் போல் வாழ்ந்தான், யாராலும் வாழ முடியாததுபோல் வாழ்ந்தான்.

நீண்டதொர் புகழ்வாழ் வும் - பிற 
நிகரறு பெருமையும் அவள் கொடுத்தாள்!

- Reposted

Comments