"நான் அறியேன்!"

புத்தரின் அழகான அர்ததமுள்ள நீதிக்கதை ஒன்று உள்ளது.



ஒருமுறை புத்தர் தனது சீடர்களோடு யாத்திரை செல்லும் போது, ஒருவர் அவரிடம் வந்து "கடவுள் இல்லை, இருக்கிறாரா என்ன?" என கேட்டார். அதற்கு புத்தர் "ஆம் கடவுள் இல்லை" என கூறி நடந்தார். 
சற்று தூரம் நடந்த பிறகு, இன்னொருவர் அவரிடம் வந்து, "கடவுள் இருக்கிறார், உண்மை தானே?" என வினவினார். அதற்கு புத்தர், "ஆம் கடவுள் இருக்கிறார்" என கூறி யாத்திரையைத் தொடர்ந்தார். 
பின் மூன்றாவதாக ஒருவர் புத்தரை அனுகி, "கடவுள் இருக்கிறாரா?" என கேட்டார். புத்தர் புன்னகைத்து அவனைத் தழுவிக் கொண்டார், தன்னோடு சேர்த்துக் கொண்டார். அறிவொளி எட்டிய ஆத்மாவானது, தன் ஞானத்தை எவர் மீதும் செலுத்தி வற்புறுத்தாது. 
முதல் மற்றும் இரண்டாவதாக வந்தவர்கள் தங்கள் மனதில் 'இது இப்படிதான்' என கருத்துகளை நிச்சயப்படுத்திக் கொண்டு வந்தவர்கள். என்ன கேட்டிருந்தாலும் பார்த்திருந்தாலும் அதை தங்கள் மனதில் பதிய வைத்து முன்கூட்டிய கருத்துகளுக்கு வர்ணம் தீட்டியிருப்பார்கள். அவர்களது பாத்திரங்கள் புதியவைகளுக்கு இடமில்லாமல் இருந்தது, அதில் இடத்தை உருவாக்கவும் அவர்கள் தயாராக இல்லை. ஆகையினால் புத்தர் அவர்கள் என்ன கேட்க விரும்பினார்களோ அதையே கூறினார்.
மூன்றாவதாக வந்தவன் வெறுமையான பாத்திரம் போன்றவன். எந்த வாதமுமின்றி, தயக்கமுமின்றி, வர்ணப்பூச்சுகளின்றி நிறப்பிக் கொள்ள தயாராக இருந்தான். . 
குருவின் அடையாளத் தன்மை, அவர் சீடர்களை தேடாமல்வற் புறுத்தாமல் இருப்பதே. அவர் எதிலும் தலையிடவும் மாட்டார். ஒரு சீடனின் அடையாளம், சுத்தமான கரும்பலகைப் போல, வெறுமையான குடத்தைப் போல, வெறுமையான குழல் போலுள்ள நிலையை அடைவதாகும். தலைவனின் கரத்திலிருந்து எழும் இசை அந்த வெறுமையால்தான். 
மஹாபாரதத்தில் நிறைய மதிக்கதக்க, விவேகமான ஆண்களும் பெண்களும் இருக்கின்றனர். ஆனால் வெகு சிலரே 'வெறுமைக் குழல்களாக' இருக்கின்றனர்.
அர்ஜூனன், ஏன் அவன் போரிடக் கூடாது அவன் ஏன் சன்யாசத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என பற்பல காரணங்களை ஒரு பருவதத்தைப் போல அடுக்கினான். கிருஷ்ணன் அமைதியாகவே இருந்தான். குழப்பத்தின் உச்சக் கட்டத்தை எட்டுகையில், அர்ஜூனன் 'நான் அறியேன்' என்றான். அதுவே கீதையின் ஆரம்பப் புள்ளி. 
அனைவருக்கும் புத்த ஜெயந்தி வாழ்த்துக்கள்!
#RadhaiyaagiyaNaan

Comments