நம்பிக்கையின் மேல் நம்பிக்கை பிறந்தது!
புராணங்களில் பூமித்தாயானவள், சுய நினைவுடன் ஜீவுற்று இருப்பதாகத்தான் எப்போதும் விவரிக்கப்படுகிறாள். அவள் உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கிறாள்.
காரியங்கள் கைமீறிப் போகும் பொழுது, தீமைகள் நிகழும் பொழுது, அவளது பொறுமையின் எல்லைக்கு அப்பால் மனிதன் துஷ்பிரயாேகம் செய்யும் பொழுது, அவன் பூலோக ஒழுங்கையும் அமைதியையும் குலைக்கும் பொழுது, அவள் தனது ஆதங்கங்களை சமிக்ஞையின் மூலம் வெளிப்படுத்துகிறாள். புவி வெப்பமடைதலும், ஓசோன் (ozon) அடுக்கில் ஓட்டைகள் விழுதலும், உயிரினங்களின அழிவும், ஆழிப் பேரலைகளும் உண்மையில் மன உளைச்சலில் பூமாதாவின் பதிலளிக்கும் செயல்கள்தான்.
இதைத்தான், பழங்காலத்தில் "துர்சகுனம்" என்றார்கள்.
அதேபோல், அவள் நம்பிகையை காணும் பொழுது, மகிழ்ச்சியில் திளைத்து பதிலளிக்கிறாள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இன்றைய தினத்திலதான் அவள் நம்பிக்கை கொண்டாள். அது ப்ரதபத்-தின் (ஆகஸ்ட் - செப்டெம்பர்) தேயும் சந்திர மாதத்தின் எட்டாம் நாள்.
பூமித்தாய் தன் நிறைந்த ஹிருதயத்தோடு பதிலளித்தாள்.
பரிசுத்த மனிதர்களின் இதயத்தில் புகையின்றி தீ எரிந்தது. தேகம் சிலிர்க்க காற்று மென்மையாக வீசிற்று. நட்சத்திரங்கள் தெள்ளத் தெளிவான வானில் அசாதாரண திறமயுடன் பிரகாசித்தன. தெளிவான தண்ணீர் நாக்கில் தித்தித்தது. ஆறுகள் அமைதியாக ஓடின. ஏரிகள் முழுவதும் தாமரைகள் மலர்ந்து மோகமூட்டும் நறுமணம் காற்றில் கலந்தது. மரங்கள் அற்புத மலருடன் பூத்துக் குலுங்கின. கடலலைகள் இசை மீட்டின. தேவர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
நள்ளிரவு நெருங்கியபோது, படைப்புகள் எல்லாம் எதிர்ப்பார்ப்பில் நீர்த்துப் போயின. அனைத்தும் அற்புதமாக குளிர்ந்த நிலவொளியில் நனைந்து காட்சியளித்தன.
மகிமை பொருந்திய அந்த தருணத்தில் பூமி அதிர்ந்தாள். உயர்ந்து எழுந்த தீயைப் போல், முன்னோர்களின் ஆத்மாக்கள் தங்கள் வணக்கங்களை செலுத்தினர். ஒரு பயங்கர இடி முழக்கத்தோடு, கடல் தேவன் செய்த கர்ஜனை வானில் ஊடுறுவியது. அங்கே நிசப்தம் நிலவியது.
கிருஷ்ணன், இரட்சகன், அண்டசராசரத்தின் பாதுகாவலன், விஷ்னுவின் அவதாரம், தேவகியின் எட்டாவது மைந்தன், வாசுதேவனின் நந்தன், அரக்க கம்சனின் மருமகன் பிறந்தான்.
பூமாதா ஆனந்த்தில் அழுதாள், வானை கிழித்துக் கொண்டு மழை பெய்ய.
இனிய ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்! இன்று பிறந்தான் ஆசிர்வதிக்கப்பட்ட இறைவன்.
"முரளி மனோஹர மோஹன முராரீ
அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி"
#RadhaiyaagiyaNaan

Comments
Post a Comment