காதல் மடல்
உத்தவா கிருஷ்ணனின் நண்பன்; உறவினனும் ஆவான்.
அவன் உயர் கல்வி கற்றவன் - அவனது சிறப்பு என்னவெனில், அவனால் வேதங்களில் உள்ள ஒவ்வொரு வரிகளையும் விளக்கும் அளவிற்கு அவற்றை கற்றிருந்தான். அவன் எந்த ஒரு கருத்தையும் ஆதரிக்கும், மற்றும் ஆமோதிக்கும் திறன் பெற்றிருந்தான்; உபநிடங்களின் அனைத்து சூத்திரங்களையும் அறிந்திருந்தான்.
ஒருமுறை கிருஷ்ணனுடன் இணைந்து அவன் வேலை செய்ய வேண்டிவந்தது. அவன் குருகுலத்தில் மிகச்சிறந்த மாணவனாக விளங்கினாலும், 'மகரிஷி' மற்றும் 'சிறந்த ஞானி' என்ற பட்டங்களைப்பெற தகுதியானவனாக இருந்தாலும் அது கிடைக்காததை எண்ணி சலித்துக் கொண்டான்.
இறுதியில் தன்னை நிதானப்படுத்த முடியாமல், கிருஷ்ணனிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
"நீ அனைத்து கருத்துகளையும் வேதாந்தங்கள் மற்றும் அதன் தாற்ப்பரியங்களை முழுமையாக உணர்ந்தாயா? நீ தயாராயினாயா? நீ உனது கல்வியை முழுதுமாக கற்றதாய் நினகை்கிறாயா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் மாயக்கண்ணன்.
"ஏன்? நிச்சயமாக" என்று திடமான நம்பிக்கையுடன் கூறினான் "நான் கற்பதற்கு வேறெதுவும் இல்லை."
கிருஷ்ணன் அவனை ஏற இறங்கப்பார்த்து, அவன் பிரச்சனைக்கு ஏதேனும் வழியில் உதவுவதாக சம்மதித்தான். அதே வேளையில் தனக்கொன்று உதவுமாறு கேட்டுக் கொண்டான். அவன் உத்தவாவை இராதாவிடம் சென்று, தன்னிடமிருந்து ஒரு காதல் மடலை அளிக்குமாறு சொன்னான்.
உத்தாவா அதற்கு சம்மதித்தான். அவன் தேரினை ஏறும் வரையில், கிருஷ்ணன் எதையும் கொடுத்தனுப்புவதாக தெரியவில்லை. இறுதியில் புறப்படும் முன் அவனே கேட்டான். கிருஷ்ணனனோ ஆச்சர்யத்தோடு கல்லச் சிரிப்பு சிரித்து, அவனிடம் 'கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை' என்றான்.
உத்தாவா ஆச்சர்யத்தோடு புறப்பட்டான். இராதாவை காதலித்தானானால், கிருஷ்ணன் ஏன் பிரிந்து வந்தான்? கிருஷ்ணன் அவளிடம் கல் மனதோடு ஏன் நடந்துக் கொள்கிறான்? நான் வெறுங்கையோடு சென்றால் அவள் என்ன நினைப்பாள்? நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என பலவாறு எண்ணமிட்டான். பிருந்தாவனத்தை அடைவதற்கு முன்னால், அவன் ஒரு காகிதத்தை எடுத்து கிருஷ்ணனிடமிருந்து கொண்டு வந்தது போல், ஒரு காதல் மடலை தயார் படுத்தினான்.
அவன் இராதையின் இல்லத்தை அடைந்தபோது, அவள் அவனை வெகுவாக வரவேற்றாள். அவள் - தான் வியக்கும் அளவிற்கு - ஆழ்ந்த அமைதிக் கொண்டவளாகவும், முழுமைப் பெற்றவளாகவும் தோன்றினாள். இவ்வளவு நேரம் அழுதுவிட்டு ஒரு சிறந்த சீடனின் முன்னால் அப்படிக் காட்டிக் கொள்ளாமல் மறைக்கின்றாளோ என்று சிந்தித்தான்.
அவன் சிறிது நேரம் அவளுடன் உரையாடினான். அவள் கண்களில் கண்ட சஞ்சலத்தைக் கண்டு, 'வாழ்வு துயரங்களும் பிரிவுகளும் நிறைந்தது, வேதங்களில் லோக பிரிவுகளை பற்றியும் எழுதியுள்ளது' என்றான்.
அவள் புன்னகைத்தாள்.
அவன் தான் கற்ற வேதங்களைப் பற்றி பேசலானான். அவள் துயரத்தை விடுக்கச் சொன்னான், 'ஏனெனில் நாம் அணைவரும் பரமாத்மாவின் ஒர் அங்கமாக இருக்கும் பொழுது பிரிவிணை என்பது சாத்தியமல்ல' என்றான்.
அவள் புன்னகைத்தாள்.
அவளுக்கு தான் உரைப்பது புரியவில்லை போலும் என்று எண்ணினான். அவன் அந்த காதல் மடலை கிருஷ்ணனிடமிருந்து கொண்டு வந்ததாக கூறினான்.
அவள் அந்த மடலை பிரித்துப் பார்தாள். உத்தவா தன் இறுக்கையில் ஒருவித கலக்கத்தோடு, அந்த மடல் இவனே தீட்டுயது என்று கண்டுக் கொள்வாளோ எனும் சங்கடத்தில் அசைந்தான். கிருஷ்ணன் இவளை மறந்து விட்டதாக அவள் நினைத்து விடக்கூடாது என்று ஆசைப்பட்டான்.
அவள் புன்னகை அகன்றது. கண்களில் மினுமினுப்புடன் அவள் உத்தவாவைக் கண்டாள். அவன் 'அதில் அப்படி என்ன தீட்டியுள்ளது?' என்று ஆச்சர்யம் கொள்வது போன்று கேட்டான்.
"அன்பு உத்தவரே, தாம் இன்னும் முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை. உங்கள் கல்வி முழுமைப் பெறவில்லை. தாம் இன்னும் தயாராகவில்லை."
அவன் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான். அந்த சாதாரண படிப்பறிவில்லா இடையத்தி இந்த அனைத்திலும் கைத்தேர்ந்த சீடனை பார்த்து ஒரு முட்டாளென கலகல வெனச்சிரித்தாள்.
"நீ எவ்வாறு அறிவாய்?" என்று கேட்டான் உத்தவா.
"அன்பு உத்தவரே, எனக்கு கிருஷ்ணனிடமிருந்து எந்த காதல் மடலும் தேவையில்லை. அவர் எனக்கு எந்த தகவலும் உரைக்க தேவையில்லை. எங்கள் இருவருக்கிடையில் எந்த உரையாடலும் தேவையற்றது. அவர்தான் எனது தகவல். இந்த ப்ரபஞ்சமே எனக்கு கிருஷ்ணனின் காதல் மடல்தான்."
அவன் இவை அனைத்தையும் மௌனமாக கேட்டுக்
கொண்டிருந்தான். அவள் கொண்டிருந்த அறிவு, சந்தேகமற்ற ஞானமாக திகழ்வதை அவள் முகத்தில் கண்டான். அப்பொழுதுதான் அவன் ஞானத்தை தராத கல்வி கற்பதனால் பயனில்லை என உணர்ந்தான்.
"தாங்கள் எங்கள் காதலை புரிந்துக் கொள்ளவில்லை. நாங்கள் பிரிந்திருக்கவில்லை, நாங்கள் இருவரும் ஒன்றாகி உள்ளோம். அவர்கள் அவரை இவ்வுலகின் இறைவன் எனக் கூறுகிறார்கள். அவ்வகையில் எதுவும் என்னிடமிருந்து பிரியவில்லை - தாங்கள் உட்பட - ஏனெனில் தாமும் அவரே."
உத்தவா பேச்சற்று போனான். இராதை தற்பொழுது உபநிடங்களின் தாற்பரியத்தை விளக்கினாள் - நாம் அணைவரும் பரமாத்மாவின் அங்கமே.
அவளது ஒவ்வொரு சாதாரண வார்த்தைகளும், காதல் கொண்ட பால்காரியிடமிருந்து வரும் வாழ்வின் உண்மை இரகசியம். அவன் இவ்வளவு நாள் கற்று தேர்ச்சிப் பெற்றதை தற்பொழுது தன் கண் எதிரே காண்கின்றான். அவன் அங்கேயே இருந்து, அவள் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்க ஆசை கொண்டான்.
அவன் அந்த நாள் முழுவதையும், இராதை கிருஷ்ணன் மீது கொண்ட காதலால் வெளிப்படும், உயரிய கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் வாழ்வின் பெரும் தத்துவத்தை காதலின் மொழியில் கூறினாள். அவள் எப்பேற்பட்ட கருத்துகளை உரைக்கின்றாள் என அவளே உணர்ந்திருக்க மாட்டாள். அவன் வெகு நாட்களாக விடைக்காக ஏங்கிக் கொண்டிருந்த கேள்விகளுக்கும் விடையினை கேட்டரிந்தான்.
இராதை உத்தவா கற்ற கல்வியை தலைகீழாய் மாற்றினாள். இந்த உரையாடலால் அவனுக்கு இருந்த சந்தேகங்கள், ஆட்ஷேபனைகள், கேள்விகள், அகங்காரம் மற்றும் தற்பெறுமை அனைத்தும் மாயமாயின. அவன் ஒரு புது சிருஷ்டியைக் கண்டான்.
துவாரகைக்கு திரும்பிச் செல்லும் வழியில் அவன் ஒரு புதிய மாற்றம் நிறைந்த மனிதனானான். அவன் தனக்குள்ளேயே பாடிக்கொண்டிருந்தான். அவன் நடையில் ஒரு துள்ளலும், இதயத்தில் ஒரு பாடலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. வழியில் ஒரு உடல் நலம் குன்றியவரை தேரில் ஏற்றி அவருக்கு உதவி செய்தான். எப்பொழுதும் காணும் சூர்ய அஸ்தமணம், அன்று என்றும் காணா அழகு கொண்டிருந்தது. சிருஷ்டியே அன்று புதுமையான, அமைதியான, நிரந்தரமான அழகோவியமாக இருப்பதை கண்டான்.
கிருஷ்ணன் அவனை சந்தித்தபோது அவனுக்கு வணக்கம் செலுத்தி, இராதாவைப் பற்றிக்கூட கேள்வி எழுப்பாமல், "உனது மகரிஷி பட்டத்தைப் பற்றி ஆலோசிக்கலாம் வா" என்றான்.
"நீ ஒன்றை அறிவாயா மாதவா? எனக்கு அந்த பட்டத்தில் இனி விருப்பமில்லை" எனக்கூறி உத்தவா கிருஷ்ணனை ஆரத்தழுவினான்.
"ஆனால் இப்பொழுது நீ தயாராக இருக்கின்றாய். அனைத்தையும் அறிந்து தெளிவுப் பெற்று உனது கல்வியில் முழுமைப் பெற்றாய்" என்றான் மாயவன் மதுசூதனன்.
#RadhaiyagiyaNaan
This story is an offshoot adaptation from the Bhagawadham. It portrays the profoundness of Radha's love beautifully. However, I am afraid I do not know the source of this story - which text or which folklore. All I know is that I love it!

Comments
Post a Comment