களவாடிய பொழுதுகள்!
அத்தியாயம் 6: மரணப் பறவைகள் - 2
'Boys இதுதான் plan. யாருக்கும்
சந்தேகம் இருக்கா?'
'இல்லை,
Major. All Clear!'
'Good. இப்போ கிளம்பறோம். இன்னும் 80 நிமிஷத்துல அந்த வீட்டுல இருக்கோம். சஞ்சைய அங்க meet பன்றோம்.'
ஏறக்குறைய
பதினைந்து நபர்கள் அடங்கிய குழு ஒரு Jeepபில் ஏறியது.
எடுத்த மாத்திரத்திலேயே 120 கிலோமீட்டர் வேகத்தில் புறப்பட்டது. அனைவரது
அலைபேசியும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. துப்பாக்கிகள் அனைத்தும் ஆயத்தமாயின.
ஆழ்கடலின் அமைதியை கொண்டு அனைவரும் பயணித்தனர். ஒரு அடர்வனத்திற்கு வெளிய Jeep நின்றது. அனைவரும் இறங்கி காட்டு வழியே
பயணித்தனர்.
தன்னை சுற்றி
நிகழ்வதை ஒலியாலே உணரும் திறன் இராணுவ வீரர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான
ஒன்று. தனது படை வீட்டின் பின்புறத்திலிருந்து மேலேறுவதையும் எதிரிகளின் கும்பல்
வீட்டின் முன்புறத்தில் வந்திறங்கியிருப்பதையும் அந்த அமைதியான வனத்தில் எழுந்த
ஒலிகளிலேயே அறிந்துக் கொண்டான். அவர்கள் தன்னை நெருங்க எத்தனை நொடிகள் ஆகும் என்று
மனதிலேயே கணித்தான். படிகளில் விரைந்த ஒவ்வொரு ஜோடி கால்கள் எழுப்பிய ஒலி, slow motionஇல் எந்த கால் எந்த படியில் எந்த உயரத்தில் ஏறிக்கொண்டிருந்தன என்பது வரை
உய்த்தறிந்தான் சஞ்சய்.
ஷங்கர், சஞ்சய் கூறியப்படியே நண்பர்களை ஒரு சிறுபடையாக அழைத்துவந்து
அந்த வீட்டின் பின்புறம் சேர்ந்தான். அவனது யுக்தியை முன்பு தெரியப்படுத்திய படியே
அனைவரும் அந்த வீட்டின் மாடி அறைக்கு ஏறினர். அவர்களது அசைவின் ஓசை காட்டு மரங்கள்
பெரும் காற்றில் சலசலப்பது போலிருந்தது. சஞ்சய்யைப்போல அந்த ஓசையை நன்கு
அறிந்தவர்கள் அது செயற்கையானது என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலும். ஷங்கர் ஓர் அறையில் கவனமாக
நுழைந்தான். அறையின் முன் கதவை எச்சரிக்கையோடு சென்றடைந்து வெளியே என்ன
நடக்கிறதென்று பார்த்தான். 'எவன் இவன்? எனது நண்பனுக்கு முன்னால் துப்பாக்கியோடா? எவ்வளவு தைரியம்? சஞ்சய் இன்னும் ஏன் பொறுமையாக
பேசிக்கொண்டிருக்கின்றான்?' என்று பொருமினான் ஷங்கர்.
போர்க்களத்தில்
எத்தனையோ வகை துப்பாக்கிகளை கடந்து வந்த சஞ்சய்க்கு விக்கி தன்னை நோக்கி
பிடித்திருந்த துப்பாக்கி அவனுக்கு எந்த அச்சத்தையும் விளைவிக்கவில்லை.
'இவள் யார்?' இவள் எப்படி இங்கு வந்தாள்? இவளுக்காகவா நண்பன் இன்னும் இவர்கள் இருவரையும் கொல்லாமல்
இருக்கிறான்? அடேய் நண்பா, எதோ நடந்திருக்கிறது உனக்கு. வேலையா குடும்பமா என்று
கேட்டால், 'சந்தேகமென்ன? வேலைதான்' என்று பெண்களை தூர வைக்கும் இவன், இன்று இந்த பெண்ணுக்காக வேலையில் தாமதிக்கின்றானா?' வியப்பில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கினான் ஷங்கர். 'இந்தா வேலைய முடிச்சுட்டு உன்ன கோழி அமுக்குற
மாதிரி அமுக்குறேன் இருடா' என்றான் மனதிற்குள். படையினர் அனைவரும்
ஏறக்குறைய வந்து சேர்வதற்குள் படிகளில் காலடி ஓசைகளை கேட்டான். ஷங்கர் அவர்கள்
எவர் என்று முழுமையாக காண்பதற்குள்ளாகவே...
அகிலனின்
கண்களினூடே தனது முதுகிற்குப் பின்னால் எதிரியின் முதல் தலை தெரியவரும் சமயத்தில், சஞ்சய் தனது காலனியில் வைத்திருந்த மரணப் பறவைகள்
ஒவ்வொன்றாக வீசி எறிந்தான். அவனுக்கு பிடித்தமான ஆயுதத்தை கையாளுவதை பார்ப்பதில்
ஷங்கருக்கு எப்போதும் ஒரு கர்வம் உண்டு. ஒரே கையசைவில் அத்துணை யந்திரங்களை
வீசுவதில் வல்லவன் பிறிதொருவனை ஷங்கர் பார்த்ததில்லை. எதிர்பாராத சமயத்தில்
துப்பாக்கியை வைத்திருந்தவன் சஞ்சய்யை சுட்டான். அதைக்கண்ட ஷங்கர் தனது தாக்குதலை
உடனே தொடங்கினான். சஞ்சய் தன் இடக்கை சுடப்பட்டிருப்பதை உணர்வதற்கு முன்னரே விக்கி
மரணித்து விழுந்தான்.
படை
கூடத்திற்குள் நுழைந்து படிகளில் எறியவர்களை கொன்று குவித்தது. இடது கையை
பிடித்துக்கொண்டு படிகளின் அருகில் இருந்த ஓர் அறையில் விடு விடுவென சென்று
காத்திருந்தான் சஞ்சய். வேறெந்த ஆயுதங்களும் அவனிடம் இல்லை. ஷங்கர் எதிரிகளை
தாக்கிக்கொண்டே தனது வலது பையில் இருந்த துப்பாக்கியை சஞ்சய்யிடன் வீசினான். அதை
கட்சிதமாக வாங்கிக்கொண்டு புது உற்சாகத்தோடு தன் படையினருடன் தாக்குதலை
தொடங்கினான் சஞ்சய். படை மாடியிலிருந்து மெல்ல கீழே நகரத் தொடங்கியது. கீழிருந்து
வரும் துப்பாக்கி சூடுகளில் தப்பித்து ஒவ்வொருவரும் இறங்கி போராடினர்.
எதிர்பார்த்ததை
விட எதிரிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. கீழே ஆங்காங்கே
நின்றிருந்தவர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்தனர் சஞ்சய்யின் படையினர். அரை
மணிநேரத்திற்குப் பின்னர், அனைத்தும் ஓய்ந்தது. சஞ்சய்யின் படையினர் ஒருவரை
ஒருவர் கட்டித்தழுவி பாராட்டிவிட்டு வீட்டின் வெளியே கவனிக்கச் சென்றனர். அவர்களை
தொடர்ந்து வெளியேறுவதற்குள் படிகளில் யாரோ இறங்கி வருவதை சஞ்சய் உணர்ந்தான், திரும்பினான்.
'சஞ்சய்ய்ய்ய்ய்!!'
களவாடப்படும்...



Comments
Post a Comment