சாளரத்தின் வழியே... நாம்!

மஹாபாரதத்தின் அழகு யாதெனில் பட்டுத்துணியெனும் கதையில் பதிக்கப்பட்ட பல ஆழமான நிகழ்வுகளே - சிலவை பிரதான கதையிலும் சில நாட்டுப்புறக்கதையிலும். இந்தக் கதைகளின் நோக்கம் உண்மையில் கதாபாத்திரங்கள் பற்றிய ஆழமான புரிதலை தருவதற்காகத்தான் மேலும் மிக முக்கியமாக நம்மை பற்றிய ஆழமான புரிதலை கொடுக்கத்தான். அவை நமது குணத்தை நாமே எட்டி பார்க்க உதவும் சாளரங்களாக செயல்படுகின்றன. வரலாற்று உண்மையை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தால் முற்றிலுமாக இந்த நீதி கதைகளின் முக்கிய அம்சத்தை தவறவிடும் படி நேரிடும்.

ஒருமுறை, கிருஷ்ணன் ஒரு முழுமையான நல்ல மனிதனை, ஒரு துளி தீய கரை படியாத ஒருவரை அழைத்து வர துரியோதனிடம் கூறினான். வழக்கமாக கிருஷ்ணன் கூறுவதை அலட்சியப்படுத்தும் துரியோதனன், இந்த விந்தையான ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டினான். உத்தம மனிதனை தேடும் நோக்கத்தில் தன் ரதத்தில் ஏறி புறப்பட்டான் சுயோதனன். மொத்த ராஜ்ஜியத்தையும் சல்லிட்டு இழைத்த பின், கிருஷ்ணனிடம் திரும்பி வந்து 'அப்படி யாரும் இல்லை' என நம்பிக்கையோடு அறிவித்தான்.

“உன் சாந்த வடிவமான அண்ணன் யுதிஷ்டிரனுமா இல்லை?" என்று கேட்டான் கிருஷ்ணன், ஆச்சர்யத்தோடு.

"இல்லை - முதலில் அவன் என் சகோதரன் அல்ல. அவன் ஒரு கௌதேயன் ஆவான். இரண்டாவது, வெறுமனே யாராலும் உத்தமனாக முடியாது. வெளிப்படையாக களங்கமற்ற நபராக இருந்தாலும், ஒரு சிறு தீயவையாவது அவருள்ளே இருக்கும். இல்லை கிருஷ்ணா, எந்த ஒரு மனிதனும் முற்றிலுமாக நல்லவன் இல்லை. நிச்சயமாக யுதிஷ்டிரனுள் தீயது உள்ளது!" என்று முடித்தான் துரியோதனன்.

அதேவேளையில், கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடமும் முற்றிலுமான தீயவனை அழைத்துவரும்படி கோரியிருந்தார். அதற்கு கீழ்ப்படிந்து, யுதிஷ்டிரனும் உயரத்தாழ சல்லிட்டு ஆராய்ந்து, தனது பணி தோல்வியடைந்ததை அறிவிக்க கிருஷ்ணனிடம் வந்தான். முற்றிலும் தீய சொரூபமாக யாருமே இருக்கமுடியாது என்று கூறினான்.

"ஏன் யுதிஷ்டிரா, உன் பெரியதந்தையின் மகனான துரியோதனனை சிந்திக்கவில்லையா, அவன் உனக்கு செய்த அனைத்திற்கு பிறகும்?"

"நிச்சயமாக இல்லை, கிருஷ்ணா!" என்று அவன் பதிலளித்தான். "ஒரு மனிதன் தீமையில் எவ்வளவு மூழ்கினாலும், ஆழத்தில் அவனுள் நன்மை குடிகொண்டிருக்கும். என் அன்புச் சகோதரன் துரியோதனன் தவறான வழிகாட்டலுக்கு உட்பட்டு அறியாமையில் தவிக்கிறான். அந்த அடுக்குகளை நீக்கி பார்த்தால், இதயத்தில் அவன் ஒரு தேவதூதன்."

இந்த கதையின் முக்கிய கருத்து யாதெனில் - நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ அதையே பார்க்கிறோம். நாம் அனைவரும் நம் பிம்பங்களையே உலகில் பார்க்கிறோம். உண்மையில் இந்த உலகம் நம்மாளுமையின் கண்ணாடி. துரியோதனனால் மற்றவரில் உள்ள நன்மையை எப்படி காணமுடியவில்லையோ அதுபோல யுதிஷ்டிரனால் மற்றவரில் உள்ள தீமையை காணமுடியவில்லை.

யுதிஷ்டிரரும் பூரணமானவர் அல்ல என்பதை பற்றி விரிவான வாதங்கள் இன்னமும் தொடர்கின்றன, அது உண்மைதான். தவறு செய்வது மனித இயல்பு. அபூரணமாக இருப்பது இயற்கை தான். கடவுள் மட்டும் சம்பூர்ணமாய் இருப்பவர் பக்கம் இருப்பதாய் முடிவெடுத்தால், அவர் தனித்து நிற்கவேண்டியதாய் இருக்கும்.

எனினும், யுதிஷ்டிரர் நற்குணத்தின் மீது நம்பிக்கைகொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நன்மையை தேட விரும்பினார். அவர் ஒவ்வொருவரிலும் உள்ள நற்குணத்தை பார்க்க, கண்டறிய, கவனம் செலுத்த, மற்றும் அதை மனதார போற்ற தேர்வு செய்தார். இது அவர் பக்கம் நன்மையை ஈர்க்கச் செய்து, நிகழ்வுகளும் அதற்கேற்ப இடம்பெற்றன.

துரியோதனன் ஒரு நல்ல அரசனாகவும் ஒரு சிறந்த அறிவாளியாகவும் இருந்திருக்கலாம். அவர் முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும் இருக்கலாம். ஆனால் அவர் மற்றவரை சந்தேகத்துடன் பார்க்கவே தேர்வுசெய்தார். ஆகவே அவரால் மற்றவரில் உள்ள நன்மையை காணயிலவில்லை. உண்மையில், அவர் தேடியதும் கவனம் செலுத்தியதும் மகிமைப்படுத்தியதும் தீமையையே.

இக்கதை இவ்வுலகில் நாம் எங்கே நிற்கிறோம் என்பதை அறிவுறுத்துகிறது. இக்காவியத்தில் நாம் எதை காண்கிறோமோ - ஏன் நம்மை சுற்றியுள்ள வாழ்விலும் - அது நம்மை பற்றி துள்ளியமாக எடுத்துக்காட்டும் சுட்டிக்காட்டியாக விளங்குகிறது.

ஒரு சிறு பரீட்சை செய்வோமா? இப்படத்தில் தாம் எந்த சொல்லை முதலில் கண்டீர்கள்?

Comments