வியாசர் கூறிய அந்த 'முள்'

முடிவில், நாம் குழப்பமடைகிறோம்!

அதர்மத்தை நியாயப்படுத்தி தர்மத்தை ஸ்தாபிக்க, தர்மத்தை பின்னோக்கி வளைத்து....யப்பப்பப்பா... இந்த பெரும் முயற்சி எதற்காக? இது சோர்வை அளிக்கிறது, அதோடு அனைவரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொண்டால், இந்த உலகம் என்ன ஆவது?

நமது குழப்பங்களுக்கு மத்தியில், விமர்சகர்கள் கொண்டாடி அறிவிப்பதென்னவென்றால், இந்த முழு புத்தகமும் காட்டுமிராண்டித்தனமான மதிப்புகளின் (Barbaric values) தொகுப்பு மட்டுமல்லாமல் "உண்மையான" வாழ்விற்கு பயனில்லாத ஒன்று என்று கூறுகின்றனர்.

முதலில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் மகாபாரதம் கருத்துமுதல்வாதம் (idealism) சம்பந்தப்பட்ட ஒரு படைப்பல்ல. அது குணச்சித்திர கதையல்ல.

அது சத்தியத்தை பற்றியது - எந்த அளவிற்கு "உண்மையான வாழ்க்கை" பற்றி கூற இயலுமோ அந்த அளவிற்கு. அது உண்மையான சூழ்நிலைகளை அதன் சிக்கல்களோடு கையாள்கிறது.

நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட தர்மத்தை அது தயங்காமல் கற்றுக்கொடுக்கும் அதேவேளையில், இந்த நிறைவற்ற உலகில் அதர்மம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை ஒப்புக்கொள்கிறது.

இது பாசாங்குத்தனம் இல்லை.

அதை எதிர்கொள்வோம்! - விஷயத்தின் உண்மையாதெனில், சில நேரங்களில் வாழ்க்கையில், ஒரு முள்ளை எடுக்கவேண்டுமென்றால் நீங்கள் மற்றொரு முள்ளை பயன்படுத்தவேண்டும்.

இந்த "மற்றொரு முள்" தான் வியாசர் கூறும் அதர்மம்.

ஆனால் இது சாதாரண முள் அல்ல. விதிகளை பொறுப்பில்லாமல் கைவிடுவதல்ல இது. இது ஒரு சிறப்புமிக்க முள் - சிறப்புமிக்க அதர்மம். இது பிரம்மாஸ்திரம் போன்றது. தகுதிபெற்றவரொழிய, வேறு யாரும் இதை பிரயோகிக்க முடியாது.

வழக்கமான தர்மத்தை விட இந்த அதர்மத்தை பின்பற்றுவது கடினமானது. அதை பயன்படுத்த அசாத்திய தைரியமும், அறிவாற்றலும், நேர்மையும் பொறுப்புணர்வும் வேண்டும்.

களத்தை உடைக்கும் இந்த கருத்து வடிவத்தை அறிவிக்கும் அந்த தைரியம் வியாசர் ஒருவருக்கே உள்ளது.

எப்படியோ, பிகாஸோ (Picasso) இதை சிறந்த முறையில் கூறியுள்ளதாக நான் உணர்கிறேன் -

"Learn the rules like a Pro - and then break them like an Artist."

"ஒரு நிபுணனைப்போல் விதிகளை கற்றுக்கொள் - பின்னர் அதை ஒரு ஓவியனைப்போல் உடைத்தெறி."

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் விதிகளை கட்டுடைப்பதற்கும் அதை மீறுவதற்கும் தகுதியுள்ளவர் - 'எனினும்' - தாம் விதிகளில் நிபுணத்துவம் பெற்ற பிறகு மட்டுமே.

மீண்டும் வேத வியாசரை காண்போம் - தர்மத்தால் மட்டும்தான் மகிழ்சியும் வளர்ச்சியும் வாழ்வில் வசந்தமாகும் என அவர் முதலில் தர்மத்தை வானளவு பாராட்டினார்.

பின்னர், அவர், "சூழ்ச்சியை சூழ்ச்சி புரிபவனிடம் பயிற்சி செய்" என்றார்.

"ஆனால்" - மேலும் கூறுகிறார், இப்பொழுது வருகிறது அந்த பொறி - "கீழ் கண்டவைகளை பின்பற்றினால் மட்டுமே நீங்கள் அதை நாட வேண்டும்":

1. தர்மத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்;

2. பரிசுத்தமான ஹிருதயம் கொண்டிருக்க வேண்டும்

3. உங்கள் இறுதி இலக்கு தர்மமாக இருக்க வேண்டும்.

4. அனைத்து தர்ம வழிமுறையும் தோல்வியுற்றிருக்க வேண்டும்.

5. இது இறுதி முயற்சியாக இருக்கவேண்டும்.

6. பெரும் தயக்கத்துடன் இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

7. எந்த விளைவுகளையும் ஏற்கத் தயாராக இருக்கவேண்டும்.

எனவே, ஒருவர் சூழ்சியின் பாதையில் செல்ல வற்புறுத்த படும்போதெல்லாம், அல்லது அவருக்கு வேறு எந்த தேர்வும் இல்லாத நிலையில் இருக்கையில் - அவர் மேலே சித்தரிக்கப்பட்டுள்ளது பாத்திரத்தின் ஆழத்தை கொண்டிருக்கிறாரா என்று தன்னை கேட்டு கொள்ளவேண்டும். அவர் வியாசரின் புள்ளி பட்டியலில் ஏழு கருத்துக்களையும் சரிபார்த்துவிட்டாரா?

வேத வியாசர், நிஜ வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்த தீர்வுகள் உள்ளன என பாசாங்கு செய்யவில்லை. சில சமயங்களில், அதர்மத்தை நாடுவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று ஒப்புக்கொள்ளும் ஆச்சரியப்படத்தக்க நேர்மையும் உலக ஞானமும் கொண்டிருந்தார்.

கிருஷ்ணர் காவியத்தில் பூரணமான மனிதர் ஆவார். பிக்காஸோ கூறிய நிபுணரும் அவரே, ஓவியரும் அவரே. வியாசரின் ஏழு புள்ளி நட்சத்திரம் அவர். மிக உயர்ந்த நன்னெறி கோட்பாடுகளை கொண்டிருந்தவர் அவர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தர்மத்தை நிபுணன் போல் அறிந்திருந்தவர் அவர். எனினும், அவர் கருத்துமுதல்வாதி (idealist) அல்ல. அவர் புத்திசாலி. அதோடு எதார்த்தமானவரும் கூட.

அவர் சூழ்சியை பயன்படுத்திய ஒவ்வொரு தருணத்தையும் கூர்ந்து பார்த்தால் அவர் அதை யாரிடம் பயன்படுத்துகிறார் என்பது தெரிய வரும் - ஒன்று வாழ்வனைத்தும் சூழ்ச்சி புரிபவனிடம் அல்லது கண்மூடித்தனமாக சூழ்ச்சி புரிபவனை சார்ந்து இருப்பவரிடம். இருப்பினும், அவர் மற்ற அனைத்து வழிகளும் மூடப்பட்டபின்னரே அதை பயன்படுத்தினார் - தன் இறுதி முயற்சியாக; இறுதி ஆயுதமாக. வேறுவகையில், அவர் விதிகளை ஓவியன் போல் உடைத்தார் - பாகுபாடோடும், எச்சரிக்கையோடும் மிகுந்த தீர்மானத்தோடும்.

கருணை கொண்டு அவர் காந்தாரியின் கண்ணீரை துடைத்தார். ஒரு புன்னகையுடன் அவள் சாபத்தை ஏற்றுக்கொண்டார். சாந்தமாக அவரது குழந்தைகள் இறப்பதை கண்டார். அவரது நகரம் மூழ்கும் நேரம், பற்றின்றி ஏற்பாடுகளை செய்தார். இறுதியாக, இதயம் நொறுங்கிய நண்பனிடம், ஒரு அழகான பாடலோடு அவர் விடைபெற்றார். வேறு வார்த்தைகளில், உலகிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிறைவேற்றிய பின்னர் அவரது தனிப்பட்ட கர்மத்தை ஏற்றுக்கொண்டார். துறவி போலவர் அவர்.

நம்மால் இதை செய்ய முடியுமா?

முடியாது என்று நினைக்கின்றேன்.

அதனால்தான், விதிகளை அவரால் உடைக்கமுடிகிறது. உங்களாலோ என்னாலோ முடிவதில்லை.

Comments