விறகுகள் - பகுதி 2
மாலையில் பழைய நினைவுகளால் தாக்கப்பட்டு லிண்டா ஏதோ யோசித்தப்படியே இருப்பிடம் திரும்பினாள். தேவி சொன்னது உண்மைதானா என ஒருமுறைக்கு இருமுறை கேட்டு வைத்தாள். தனது தம்பி இங்கு வருவது சரியா என்று புரியவில்லை. அவன் என்ன செய்ய விழைகிறான் என பலவாறு சிந்தித்தாள். 'என்னை சமாதனப் படுத்தி அந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல வருகின்றானா?'
தேவிக்கு விடையளித்து தன் அறைக்கு சென்றாள். ஜில்லென்று இருந்த தண்ணீரில் குளித்தாள். 'இல்லை. அவனது முயற்சிகள் எதுவும் பலிக்கப்போவதில்லை. எனது உறுதியை குழைக்க விடமாட்டேன். மீண்டும் அந்த நரகத்திற்கு செல்வதா? இல்லவே இல்லை.' குளித்து முடிந்து வந்து படுக்கையில் படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். காமம் நிறைந்த அந்த கண்கள். நினைக்கையிலேயே உடம்பெல்லாம் கூசியது. முகமெல்லாம் வெக்கை கொண்டது.
சுமத்ரா தீவில், பத்து சங்கார் என்ற மலைப் பிரதேச சிறுநகரத்தில் பிறந்தவள் லிண்டா. அவளது வீட்டிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு பெரிய ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியை சுற்றிய காட்டுக்குச்சென்று விறகுகள், மூங்கில்கள் வெட்டி வந்து கைவினை பொருட்கள் செய்து விற்று வந்தார் அவளது அப்பா. வெயில் காலம் சுற்றுப் பயணிகள் அதிகம் வரும் காலம் ஆதலால், மற்ற காலங்களில் எல்லாம் பணம் ஈட்டி குடும்பம் நடத்துவது சிரமம்தான். மூன்றாவது பிள்ளையை பெற்றதோடு தாய் விண்ணுலகம் எய்தினாள். அதன் பிறகு அப்பா மருமணம் செய்து கொள்ளவில்லை.
ஐந்து வயது மூத்தவளான லிண்டாவின் அக்கா ஆரம்பக் கல்வியோடு படிப்பை நிறுத்திவிட்டு, குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். அது அப்பாவிற்கு ஓரளவுக்கு உதவியாக இருந்தாலும், அவரது வருமானத்தில் பழையபடி சில நாட்கள் பட்டினியாய் கிடைக்கும் நிலை மட்டும் அப்படியே இருந்தது. கைக்குழந்தையாக தம்பி ஹென்றாவை வைத்துக்கொண்டு, வெகுநாட்கள் பட்டினி இருக்கமுடியாது என்ற காரணத்தால் அக்கா, மாமாவின் வயலில் வேலைக்கு சேர்ந்தாள். மாமா அக்காலத்திலேயே மேற்கல்வியை முடித்தவர். தலைநகரில் வேலை பார்த்துக் கொண்டே இங்கு நிலங்களை வாங்கி போட்டு உழவர்களை நியமித்து விவசாயம் பார்க்கிறார். வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் இங்கு வந்து தங்கி நிலங்களை மேற்பார்வையிடுவார். அக்கா அங்கு பெற்று வரும் சம்பளப் பணத்தால்தான் பட்டினிக் கிடக்காமல் மாதம் முழுவதும் உண்ணவும் பள்ளி செல்லவும் முடிந்தது.
அக்கா எதிர்நோக்கிய சிரமங்களைக் கண்டு லிண்டா பலமுறை தானும் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு உதவி செய்யலாமா என வினவியதுண்டு. ஆனால் ஒவ்வொருமுறையும் அவளது அக்கா மறுத்தே பேசினாள். 'வறுமைக்கு பலியாவது என்னோடு முடியட்டும். நீங்கள் இருவரும் இந்த வறுமைக்கு அடிபணியாமல் முற்றுப்புள்ளி வையுங்கள். இனி நமது சந்ததியில் எவரும் வறுமையை எதிர்நோக்க கூடாது என்ற எண்ணத்தை மனதில் விதைத்து படியுங்கள்' என்பாள். அவள் ஏறக்குறைய லிண்டாவிற்கு இரண்டாம் தாயாகவே தோன்றினாள். லிண்டா ஆரம்பக் கல்வி முடித்து இடைநிலைப் பள்ளியில் சேர்ந்தாள்.
அப்பாவிற்கு வயதாகி விட்டதால் முன்புபோல காட்டுக்கு சென்று வரமுடியவில்லை. அவரது வருமானம் தடைபட்டால் ஏற்படும் பிரச்சனைகளை ஆலோசித்து அக்காவிற்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்தார். அக்காவிடம் இது பற்றி கேட்டபோது அவள் பதில் ஏதும் உரைக்காமல் வெறுமனே தலையாட்டினாள். அப்போதுதான், மாமாவிற்கு மணமுடிக்கலாம் என்ற எண்ணம் எழவே ஊருக்கு திரும்பியிருந்த மாமாவைக் காண அப்பா முடிவு செய்தார். காலை இளம் வெயிலில் நானும் அப்பாவும் மிதிவண்டியில் மாமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
வயல்வெளிக்கு நடுவே சுற்றிலும் மாமரங்கள் வளர்ந்த வீடு அது. மரங்களில் கொடுத்து கொத்தாய் மாங்காய்கள் தொங்கின. குருவிகளின் ஓசை எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. உழவர்களின் குழந்தைகள் மரத்தடியில் பம்பரம் விளையாடிக்கொண்டு மகிழ்ந்திருந்தனர். அப்பா வீட்டின் படிகளில் ஏறி மாமாவை அழைத்தார். நான் படிகளில் ஏறி பாதியில் நின்றுக் கொண்டிருந்தேன். மாமா ஓர் அறையிலிருந்து சட்டையை மாட்டிக்கொண்டு வெளிவந்து அப்பவை வரவேற்றார்.
"அட வாங்க மாமா. வணக்கம். தர்மா! இங்க வா" என்று வேலையாளை அழைத்து தேநீர் எடுத்துவரச் சொன்னார். தர்மன் அதிதி தர்மத்தை செய்ய புறப்பட்டார்.
"இருக்கட்டும் மச்சான். ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..."
"முதல்ல உக்காருங்க மாமா, நிக்கிறீங்களே" என்று திண்ணையில் போடப்பட்டிருந்த நாற்காலியை சுட்டிக்காட்டினார். இருவரும் அமர்ந்ததும், "ஏதாவது சாப்பிடறீங்களா? எடுத்து வர சொல்லட்டுமா?" எனக்கேட்டு லிண்டாவை நோக்கி புன்னகை செய்தார்.
"இல்ல மச்சான், சாப்பிட்டோம்."
"ம்ம்.. சொல்லுங்க மாமா. என்ன விஷயம்?"
"அது வந்து பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன்" என்றார் சற்று சங்கடத்தோடு.
பம்பர விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் சந்தோசத்தில் ஆர்ப்பரித்தனர். ஒருவனை அவனது நண்பர்கள் இருவர் கட்டியணைத்து தட்டிக்கொடுத்தனர். அவர்களை பார்த்தபடியே நான் படிக்கட்டுகளில் அமர்ந்தேன்.
"யாரு இவளுக்கா? இவ இன்னும் படிக்கிறால்ல?" என்று லிண்டாவை கை நீட்டி காண்பித்தார் மாமா.
"இல்ல, மச்சான் மூத்தவளுக்குத்தான்."
"ஓ குசுமாவா? தாராளமா ஏற்பாடு பண்ணிடலாம், மாமா. யாரு மாப்பிள்ளை?"
"மச்சான்... தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க. உங்களைத்தான் மாப்பிள்ளை கேக்க வந்தேன். எனக்கும் வயசாகிட்டே போகுது குடும்பத்தை எவ்வளோ நாள் சமாளிக்க முடியுமோ தெரியல. நீங்களும் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்க..." என்று தலையை சொரிந்தார் அப்பா.
சமையலறையிலிருந்து தர்மன் ஒரு தட்டில் தேநீர் கொண்டுவந்து மேஜையில் வைத்தார். அப்போது உள்ளே ஓர் அறையிலிருந்து பெண்ணொருவர் வெளியேறி பின் வாசலுக்கு நடந்தார். அதை பார்த்துக்கொண்டிருந்த லிண்டாவை, "இந்தாம்மா" என்று தர்மன் அழைக்க, அவர் நீட்டியிருந்த தேநீரை வாங்கிகொண்டாள். மீண்டும் வீட்டினுள் பார்க்கும்போது அந்த பெண்மணி தென்படவில்லை. மாமாவின் பெற்றோர்கள் எப்போதோ இறந்துவிட்டபடியால், இது வேலைக்காரியாக இருக்கும் என முடிவு செய்தாள்.
மாமா ஓரமாக புன்னகை பூத்திருந்தார்.
குசுமா அக்கா மாமாவின் நிலத்தில் வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே மாமா ஜாவாவிலிருந்து திரும்பியிருந்தார். வயலை மேற்பார்வையிட்டு திரும்பும் சமயம் அக்காவை அவர் அடையாளம் கண்டுக்கொண்டார். அவளை உடனடியாக வீட்டுக்கு வரசொல்லிருந்தார். கை காலெல்லாம் கழுவிவிட்டு மாமாவின் வீட்டு முற்றத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் வருவதை படிக்கட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மாமா, அவள் நெருங்கியதும் "என்ன குசுமா? எதுக்கு இங்க வந்து கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க? பணப்பிரச்சனைனா ஒரு கடுதாசி போட்டிருக்கலாம்ல? நானே வேண்டிய பணத்தை அனுப்பி இருப்பேனே?" என்றார்.
தொடரும்...

"உழைச்சு சம்பாதிக்கிறதுதான் உடம்புல ஓட்டும் மாமா. என் உழைப்புக்கு மட்டும் பணம் கொடுத்தா போதும்."
"நீ யாரோ இல்லையே. என் அக்கா மகள் தானே. என்கிட்டே பணம் கேட்டு வாங்கிக்கிறதுக்கு என்ன கூச்சம்?"
"தன்மானம், மாமா. என்னைய வற்புறுத்தாதீங்க" என்று சொல்லி வேலைக்கு திரும்பினாள்.
சங்கார் ஏரியில் வட்டம் வட்டமாய் தோன்றி மறைந்தன. படகுத்துறையில் காலை முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டு இளம் லிண்டா பொறுக்கி எடுத்து வந்த கற்களை எரிந்துக் கொண்டிருந்தாள். தேன்சிட்டுகளும், பிட்டா குருவிகளும் இசை மீட்டிக்கொண்டிருந்தன.
"நம்ம நிலத்துலதான் குசுமா வேலை செய்றா. எப்படி மாமா...?"
"நான் அவகிட்ட எடுத்து சொல்றேன், மச்சான். கவலைப் படாதீங்க." என்றார் அப்பா.
"அப்படின்னா சரி, மாமா. அவகிட்ட பேசுங்க. அவளுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்தான்."
"சரி மச்சான், புறப்படுறேன்" என்று சொல்லிவிட்டு அப்பாவும் லிண்டாவும் வீடு திரும்பினார்கள். அப்பா அக்காவிடம் விஷயங்களை தெரிவித்தார். லிண்டா பள்ளி பாடங்களையெல்லாம் முடிக்கும்வரை வீடே அமைதியாக இருந்தது. அக்கா அவ்வளவு நேர யோசனைக்கு பிறகு அப்பாவிடம் சென்று, "மாமா வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன்ப்பா" என்றாள்.
"ஏன் மா?"
"சில விஷயங்களை பேசவேண்டியது இருக்கு, அப்பா. என்னோட சம்மதம் அவருடைய பதிலை பொறுத்துதான் இருக்கு."
"சரிம்மா. யோசிச்சு பேசு" என்றார் அப்பா. அக்கா அவளுடைய மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். அப்பா நாளிதழை எடுத்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அவருக்கு தேநீர் போட்டுக் கொடுத்தாள் லிண்டா. சிறு பொழுது கழித்து லிண்டாவும் வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த மிதிவண்டியை எடுத்துக்கொண்டு, "அப்பா ஏரிக்கு போயிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள்.
மீண்டும் நீரில் சில வட்டங்கள் தோன்றி மறைந்தன. தூரத்தில் கொக்கு ஒன்று ஏரியின் மீது பறந்து இடப்புறமாய் பட்டுப்போயிருக்கும் ஒரு மரக்கிளையில் யாரோ வருவதுபோல இருக்கவே சற்று திரும்பிப் பார்த்தாள். பின்னால், குசுமா மிதிவண்டியை நிறுத்தி அவளை பார்த்துப் புன்னகைத்தாள். விறு விறுவென நடந்து வந்து அவளருகில் அமர்ந்தாள்.
அவளது இடக்கையை லிண்டா தன் வலக்கையில் கோர்த்துக்கொண்டாள். "லிண்டா, மாமாகிட்ட பேசிட்டேன். கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டார்" என்றாள்.
சந்தோசம் மேலிட, "அப்படியா?" என்றாள்.
"ஆமா. அடுத்த மாசம் கல்யாணம் வச்சிக்கலாம்னு அப்பா சொல்லிட்டார்."
"அக்கா, மாமாகிட்ட என்ன பேசின?" என்றாள்.
மகிழ்ச்சியில் திளைத்த அவளது முகம் சற்றே தாய்மை குடிகொள்ள, "உங்கள பதித்தான் பேசினேன்" என்று லிண்டாவின் முகத்தை ஏந்தினாள். "நீ படிச்சு முடிக்கிற வரையில நம்ம குடும்ப செலவை அவர் பாத்துக்கணும்னு எடுத்து சொன்னேன். அதற்கு அவரு சம்மதம் தெரிவச்சதும் தான் என்னோட முடிவை சொன்னேன்" என்றாள்.
அவள் கைக்கு முத்தமிட்டபடியே நெருங்கி அமர்ந்தாள். கண்களில் ஊறிய கண்ணீரை மறைத்தபடியே அவளது கையை கட்டி அணைத்து தோளில் தலை சாய்ந்தாள். ஆனால் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல நிகழ்வுகள் வரிசையாய் நிகழும் என அன்று அடித்து சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன்.

Comments
Post a Comment