விறகுகள் - பகுதி 3
அன்று துஹ்ர் தொழுகைக்கு பிறகு சாப்பிட உணவகத்திற்கு சென்றாள் லிண்டா. முன்னமே தேவி அங்கு அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன்னால் ஓர் இளம் ஆடவன் அமர்ந்திருந்தான். "இருந்தாலும் நீ அவளைப்போல கொஞ்சம் கூட இல்ல... அட! லிண்டா! வா வா! யார் வந்திருக்கா பார்!" அத்தனை பற்களும் தெரிய அழைத்தாள்.
அவ்வாடவன் சட்டென திரும்பி, "அக்கா..."
லிண்டா வேறொரு மனிதனைப் பார்ப்பதுபோல் அவனைப் பார்த்தாள். "ஹென்றா...?!" என்றாள்.
ஹென்றா தலையசைத்தான். ஆளே மாறிப்போயிருந்தான். நன்கு வாரிய தலைமுடி, கருப்பு ஜீன்ஸ், டர்டல் நெக் சட்டையுடன் நடிகனைப்போல இருந்தான். அவனை தழுவிக்கொண்டாள், லிண்டா. "எப்படி இருக்க?"
"நீயே சொல்லு... எப்படி இருக்கேன்?" என்று சுழன்று காட்டினான்.
"ஹாஹா ஹீரோ போலத்தான் இருக்க. ஆமா என்ன திடீர்னு என்னை பாக்க வந்திருக்க?"
"உனக்கு காத்திருந்து எனக்கு இப்போ ரொம்ப பசிக்குது. முதல்ல சாப்பிடுவோம்... ப்ளீஸ்..."
"சரி சரி"
இருவரும் சோற்றை இறைச்சியுடனும் காய்கறிகளுடனும் சேர்த்துப்போட்டு கொண்டு அமர்ந்தார்கள். சிறிது நேரத்தில், கேட்ட பானங்களும் வந்து சேர்ந்தன.
"அக்கா... எப்படி அக்கா இருக்க? கல்யாணம் பண்ணியா?" என்று கவலையோடு கேட்டான்.
லிண்டா அமைதியாக, "ஆயிடுச்சிடா. ஒரு பங்களாதேஷியர். இன்னொரு கம்பெனில வேலை பார்க்கிறார்."
"சாயங்காலம் அவரை பாக்கலாமா, அக்கா? எங்க தங்கியிருக்க?"
"இங்கத்தான் பக்கத்துல. முதலில் நீ சொல்லு. என்ன பண்றனு? சட்டையெல்லாம்... வேற மாதிரி ஆகிட்டதே."
"அதைச் சொல்லு, இந்தோனேசியாவிலே வளர்ந்து வரும் ஹீரோவா?" என்று சிரித்தாள் தேவி.
"வேலை செய்றேன், அக்கா. பள்ளி முடிச்சுட்டு நீ அனுப்பின பணத்தில டிப்ளோமா பண்ணினேன். அப்புறமா ஒரு ஈவென்ட் கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன். இதோட நாலு வருஷமாச்சு. அப்பா..."
ஹென்றா எதுவும் தொடராதது கண்டு, "என்ன?" என்றாள்.
"போன வருஷம் அப்பா இறந்துட்டாரு, அக்கா..."
தன் தந்தையின் மீது திரட்டி வைத்திருந்த வெறுப்பெல்லாம் ஒரு நிமிடம் பனிபோல லிண்டாவின் கண்களில் திரண்டு கொண்டு வந்தது. உணவு உள்ளே செல்ல மறுத்தது. லிண்டா எழுந்து கை கழுவ சென்றாள்.
தேவி, "ஐ எம் சாரி, ஹென்றா. சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் போய் அவளோட வேலையையும் கவர் பண்றேன். சந்திப்போம்" என்று எழுந்து சென்றாள்.
@@@@@@@@@@@@@@@@@@
அக்காவுக்கு திருமணம் என பத்து சங்கார் முழுவதும் சொல்லி ஆனது. அனைவரும் திரள திருமணமும் எளிமையாக நடந்தேறியது. அக்காவை மறுவீடு அனுப்பி வைத்து, படுத்து துயில் எழுந்த போதுதான் அக்கா இல்லாத வீட்டில் ஏதோ ஒரு வெறுமை குடிகொண்டிருப்பதை லிண்டா உணர்ந்தாள். மறுவீடு அனுப்பி வைக்கையில் அக்காவை அழக்கூடாது என ஆற்றுப்படுத்தியபோது எழாத அழுகை அப்போது பீறிட்டு வந்தது. அரை மணி நேரம் அழுதுவிட்டு, தனக்கும் தம்பிக்கும் சிற்றுண்டியை தயார் செய்தாள். பின் இருவரும் பள்ளிக்கு சென்றனர்.
மாதங்கள் பல உருண்டோடின. திருமணம் ஆன முதலே மாதா மாதம் அக்காவிடமிருந்து வீட்டு செலவு, படிப்பு செலவுக்கு பணம் வந்து கொண்டிருந்தது. முன்போல் வெறும் வயிறோடு அவ்வளவாக தூங்குவதில்லை. மிதிவண்டியில் பள்ளிக்கு போகும்போதும் மீண்டும் வீடு திரும்பும்போதும் தெருவில் உற்றார் உறவினர் அக்காவை பற்றி பெருமையாக பேசுவதை கேட்பது எப்போதும் மகிழ்ச்சியை தந்தது லிண்டாவுக்கு. அதனால், அக்கா வீட்டுக்கு வரமாட்டாளா என்ற ஏக்கம் எப்போதும் இருந்தது. ஒருமுறை, தானே பார்த்துவிட்டு வரலாம் என மாமாவின் இல்லத்திற்கு சென்றாள். ஆனால், வீடு பூட்டிருந்தது. அக்காவும் மாமாவும் எங்கோ சென்றிருக்கிறார்கள் என்று தர்மன் கூறினார்.
சில நாட்களிலேயே, அக்காவை பற்றி வீதியில் தினம் கேட்கும் பேச்சு மாறிப்போனது. அக்கா இன்னும் கருத்தரிக்காததை ஒரு குறையாக அனைவரும் பேசினர். அப்படி யாரவது பேசக்கேட்டால் உடனே மிதிவண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பி விடுவாள். ஒரு நாள், இப்பேச்சுகளினால் ஏற்பட்ட துன்பத்தில் லிண்டா தன் அக்காவிற்கு ஒரு கடிதம் எழுதினாள். பதில் கடிதத்திற்கான ஆவலோடு உறவினர் ஒருவரின் குழந்தையிடம் கொடுத்து அக்காவிடம் கொடுத்துவிடும்படி அனுப்பி வைத்தாள். அந்த சிறுமி தன் மனதை பிரதிபலித்து துள்ளி செல்வதை நின்று பார்த்தாள். பின் வீட்டினுள் சென்று அனைவருக்கும் பிரத்யேகமான உணவை தயார் செய்தாள்.
இரண்டு நாட்கள் ஆனது. நாட்கள் வாரங்களாயின. மேலும் கடிதங்கள் எழுதி அனுப்பத்தான் செய்தாள். ஆனால், பதில் மட்டும் வரவில்லை. வீதியில் அக்காவை பற்றிய பேச்சுக்கள் அடங்கிப்போயிருந்தது ஒரு நிம்மதியை தந்தது. அக்காவிற்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தாள். பதிலுக்கு காத்திருந்து மீண்டும் ஏமாந்து போனாள். ஆனால் ஒரு வாரம் கழித்து, முற்றத்தை பெருக்கிக் கொண்டுருக்கையில் அதே சிறுமி கையில் ஒரு உறையோடு வருவதை கண்டதும் லிண்டாவிற்கு உள்ளமெல்லாம் மலர்ந்தது. துடைப்பத்தை எறிந்துவிட்டு அச்சிறுமியை தூக்கி முத்தமிட்டு பின் அந்த உறையை வாங்கி பிரித்தாள். அதில் மாதாமாதம் அனுப்பும் பணம்தான் இருந்தது. பின் அக்கா எதாவது சொன்னாளா என அச்சிறுமியிடம் கேட்க, 'இனி கடிதம் எதுவும் அனுப்பவேண்டாம்' என்றதாக சொன்னாள். காரணம் தெரியாமல் நின்ற லிண்டாவிற்கு அக்காவை உடனே பார்க்கவேண்டும் போல தோன்றியது.

அச்சிறுமியை அனுப்பிவிட்டு போட்டது போட்டப்படியே இருக்க, மிதிவண்டியை எடுத்துக்கொண்டு மாமாவின் வீட்டிற்கு விரைந்தாள். அக்கா செடிகளுக்கு நீர் இறைப்பதை தூரத்திலேயே பார்த்த லிண்டா வீட்டை நெருங்கும்போதே வண்டியை கீழே விட்டு விட்டு அக்காவை நோக்கி ஓடினாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அக்காவின் மகிழ்ச்சியான முகத்தை பார்த்தபடி நேரே அவளை கட்டி அணைத்துக்கொண்டாள். சில நிமிடங்கள் அணைத்தவாறே நலம் விசாரித்தாள். அக்கா முன்பைவிட வெகுவாக மெலிந்திருப்பதாக உணர்ந்தாள். அக்காவை விடுவித்து அவளது முகத்தைப் பார்த்தாள். வாய் மட்டும்தான் புன்னகைத்ததே தவிர முகத்தில் எந்த சந்தோஷமும் தெரியவில்லை.
"அக்கா, ஏன்கா கடிதம் போடவேண்டாம்னு சொல்லிட்ட? உன்னைய பாக்கணும்னு எவ்வளோ ஏங்கினேன் தெரியுமா? ஏன் ஒருமுறை கூட வீட்டுக்கு வரலை? பணம் மட்டும்தான் வருது. உன்னைவிட எங்களுக்கு பணம் பெருசாகிடுமாக்கா?" என மனதில் எழுந்த கேள்விகளை அடுக்கினாள் லிண்டா.
"அப்படிலாம் இல்லடா. நீ நல்ல படிச்சு முன்னேறணும். நம்ம குடும்பத்தை நீதான் உயர்த்தனும். என்னைய நெனச்சு கவலைப்பட்டுபட்டு கடிதமெல்லாம் எழுத வேண்டாம்னுதான் அப்படி சொன்னேன். அதோடு நாங்க அடிக்கடி வெளிய போயிடுறோம்ல?"
"கண்டிப்பா நல்லா வருவேன், அக்கா. ஆனா நீ இல்லாம வீடே வேற மாதிரி இருக்கு அக்கா. ஊர்ல உள்ளவங்க உன்ன பத்தி பேசறதை கேட்டுத்தான் ஆறுதலா இருந்தது. அப்புறம் அதுவே என்னைய வருத்தத்துல தள்ளி ஒரு வழியா இப்போ நின்னுடுச்சு..." எனும்போது, தன் அக்காவின் கண்களில் பயம் குடிகொள்வதை பார்த்தாள். "என்னக்கா?" யாரைப் பார்க்கிறாள் என திரும்பி நோக்கினாள். சற்று தொலைவில் மாமா மோட்டார் வண்டியில் வந்துகொண்டிருந்தார்.
"லிண்டா, நீ புறப்படு."
"ஏன் அக்கா? மாமாவையம் பார்த்துட்டு போறேனே."
"வேண்டாம். சீக்கிரம் புறப்படு" விடுவிடுவென சென்று மண்ணில் கிடந்த லிண்டாவின் மிதிவண்டியை தூக்கி நிறுத்தினாள். அப்போதுதான் கையில் ஏதோ காயம் இருப்பதை லிண்டா கவனித்தாள்.
பதட்டமாக, "அக்கா, என்ன காயம் இது?"
"ஒன்னும் இல்ல. சமைக்கும்போது சூடு பட்டுடுச்சு. சரி ஏறு வண்டியில."
"மருந்து போடுக்கா" என்று மிதிவண்டியில் ஏறி அமர்ந்தாள் லிண்டா. அவள் முன்னேற யத்தனிக்கையில் அக்கா அவளது வலக்கரத்தை பிடித்தாள்.
"அப்பாவை பாத்துக்கோ. பத்திரமா இரு."
சரி என்று கிளம்பினாள் லிண்டா. அவள் புறப்பட்ட சில நிமிடங்களில் மாமா வீடடைந்ததை வழியில் பார்த்தாள். என்றும் இல்லாமல் தன்னை பாதுகாப்பாக இருக்க சொன்னது வியப்பாக இருந்தது.

தொடரும்...

Comments
Post a Comment