விறகுகள் - பகுதி 4
தம்பி இடைநிலை பள்ளியில் சேர்வதற்கு அந்த வருடம் அதிகமான பணம் தேவைப்பட்டது. இதை அக்காவிற்கு தெரியப்படுத்த வேண்டிய நிலையில் அவளுக்கு கடிதம் எழுதினால் கோபித்துக்கொள்ளமாட்டாள் என்றெண்ணி அனுப்பி வைத்தாள். பதில் விரைவிலேயே வந்தது இடிபோல.
ஆம், அக்காவே வீட்டிற்கு வந்தாள் பிணமாக. அவளை தெருவில் கொண்டுவருதை பார்த்தே அப்பா உடைந்து அழுதார். அவளது மரணத்திற்கான காரணம் என்னவென்று ஊரே விவாதித்துக் கொண்டிருக்கும்போது பித்து பிடித்தாற்போல் அமைதியாக அமர்ந்திருந்தாள் லிண்டா. அழுது அழுது முடியாமல் நாட்கள் ஓடின. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் பள்ளிக்கும் செல்லாமல் தன் அறையிலேயே லிண்டா நாட்களை கழித்தாள்.
ஒரு நாள், மாமா வீட்டிற்கு வந்திருந்தார். திண்ணையில் அப்பாவுடன் ஏதோ உரையாடல் நிகழ்ந்தது. பின், பேச்சு வாக்குவாதமாக மாற லிண்டா அறையிலிருந்து எழுந்து வந்தாள். அவள் வந்து நிகழ்வதை அறிவதற்குள் மாமா வேகமாக புறப்பட்டார். பிற்பாடு கேட்டுக்கொள்ளலாம் என்று லிண்டா சமையலறைக்குள் சென்றாள். சாதம் வேக வைத்துக்கொண்டிருக்கும் போது, அப்பா வந்தார்.
"லிண்டா..."
"சொல்லுங்க ப்பா"
"இல்ல. எனக்கு கொஞ்சம் தண்ணி கொடுமா" எனக்கூறி அறையைவிட்டு வெளியேறினார்.
"மாமா என்ன சொன்னாருப்பா?"
சற்று தடுமாறி நின்று, "ஒன்னும் இல்லைம்மா" என்றார். ஒரு குவளையில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, இன்றே எதையும் கேட்கவேண்டாம் என்று லிண்டா அமைதியாக இருந்தாள்.
சிலநாட்கள் கழித்து, பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது மாமா கோபமாக பேசுவதையும் அப்பா ஒடுங்கி நிற்பதையும் தூரத்தில் கண்டாள் ஏதோ ஒன்று தீவிரமாக நிகழ்கின்றது என்று மட்டும் தோன்றியது. தம்பியிடம் அப்பாவிடம் எதையும் கேட்டுக்கொள்ளவேண்டாம் என்று கூறி வைத்தாள். அவர்கள் வீடு முற்றத்தை அடைவதற்குள் மாமா கிளம்பிவிட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கடைக்கு வெளியில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த லிண்டாவுடன் தானும் அமர்ந்து கொண்டான் ஹென்றா. அவளது இடது கையை தன் கையில் எடுத்துக்கொண்டு, "அக்கா கடந்த காலத்த...."
"இந்த ஒரு வருஷமா ஏன் எனக்கு ஒண்ணுமே சொல்லி அனுப்பல? நீயே தனியா எல்லாத்தையும் சுமக்கனும்னு உனக்கு என்ன விதி?"
"நீ மலேசியால எந்த அட்ரஸ்ல இருக்கன்றதே போன வாரம்தான் தெரிஞ்சது. போன் நம்பர் வேற பழைய நம்பர் இல்லைல..."
தன்னுடைய கைபேசி ஒருமுறை களவாடப்பட்டதில், நிறைய தொடர்புகளை இழந்திருந்தாள். முக்கியமாக, ஒரு கட்டத்திற்கு பிறகு ஊருக்கு அழைப்பதையே நிறுத்தியிருந்தாள். ஆகையால், தான் புதிய எண்ணிலிருந்து ஒருமுறை கூட ஊருக்கு அழைக்கவில்லை என்பது நினைவு வந்தது.
"நீ தனியா உணர்ந்தியாடா?"
"அப்போ அப்போ இருந்தது ஆனா, ரத்னா இருந்ததால பரவால்ல."
"ரத்னாவா? யார் அது?"
"அக்கா..." என்று இழுத்தான் ஹென்றா.
"டேய் என்னடா வெட்கப்படற? எப்போதிலிருந்து இதெல்லாம்?"
மஹ்மூத் யூனுஸ் பொது கல்லூரியில் வணிக மேலாண்மையில் டிப்ளமோ பட்டபடிப்பிற்கு சேர்ந்து நான்கே மாதங்கள் ஆன சமயம் ஒரு புதன் கிழமை காலையில் அவளைப் முதல் முதலாக சந்தித்தான். தனது மிதிவண்டி அவளது ஸ்கூட்டி நிறுத்தும் இடத்தை மறித்து நிறுத்தப்பட்டிருந்ததால் கோபத்துடன் அவனுக்காக காத்திருந்தாள். அவனை கண்டவுடன் சண்டைக்கோழியாக மாறினாள். அன்று ஒரு நாளோடு தீராமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எதையாவது காரணமாக்கி சண்டைபோட்டுக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் தானும் சளைத்தவன் அல்ல என்று சண்டைபிடிக்க ஆரம்பித்து, பின்பு அந்த சண்டைகளே நட்பாகி பின் காதலாக மருவியிருந்தது.
"அவளை காலேஜ்ல பார்த்தேன், அக்கா. அங்கதான் பழக்கமானது. ரொம்ப பொறுமையானவ அக்கா. என்னைய நல்லா பாத்துக்குவா. Actually அக்கா, அவளை பற்றி சொல்றதுக்காகத்தான் வந்தேன். அவங்க வீட்டுல கல்யாணம் பண்ண அவசர படுறாங்களாம். அதான் நம்ம வீட்டிலிருந்து யாரவது பேசணும்ல. எனக்கு நீதான் இருக்க."
லிண்டா, "என் தம்பி இவளோ வளர்ந்துட்டானா?" என ஆச்சர்யமாக பார்த்தாள்.
"பேசுவியா அக்கா?"
"அவங்க நம்பரை குடுடா. நாளைக்கே பேசுறேன். என் தம்பிக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு ஆசை இருக்காதா? உன் இஷ்டப்படி சந்தோஷமா உன் வாழ்க்கையை அமைச்சுக்க."
கொஞ்ச நேரத்திலேயே ஷிபிட் முடிந்ததிற்கான சமிஞை ஒலியும் ஒலித்தது. தேவி வந்தவுடன் மூவரும் தங்கும் விடுதிக்கு சென்றனர். ஒரு உணவகத்தின் மேலே, கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் இருந்தது அந்த அறை. ஒரு அலுவலக அறையை எட்டு அறைகளாக தடுத்து வைத்திருந்தனர். எல்லோருக்கும் பொதுவாக இரண்டு கழிவறைகள் இருந்தன. ஹென்றா அக்காவின் அந்த சிறிய அறையை சுற்றிப் பார்த்தான். "அக்கா, இந்த இடம் போதுமாக்கா உங்க இரண்டு பேருக்கும்?"
"இங்க இருக்கறதே இரவுதான். படுத்துகிறதுக்கும் துணிமணிகளை வைப்பதற்கும் இடம் இருந்தா போதாதா? குளிச்சுட்டு வரேன். வந்ததும் உங்க மாமாவை காட்டுறதுக்காக அழைத்துப்போறேன்."
"சரி அக்கா."
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குசுமா அக்கா இல்லாதநிலையில் வீட்டு பொருளாதார நிலை மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. அப்பாவின் கைவினை வியாபாரத்திலிருந்து வரும் பணம் போதுமானதாக இல்லை. லிண்டா பள்ளியின் இறுதி ஆண்டில் இருந்ததினால், மேற்படிப்பை சற்று பொறுத்தே தொடர்ந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். இப்போது ஹென்றாவின் கல்விக்கான செலவை ஏற்க என்ன செய்யலாம் என யோசித்தபோது, மரியம் அக்காவின் வாழைத்தோப்பில் பகுதி நேரமாக வேலைக்குப்போக தீர்மானித்தாள்.
பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு வந்து உடைமாற்றிக்கொண்டு நேரே தோப்பிற்கு சென்று ஆறு மணி நேரம் வேலை செய்தாள் லிண்டா. அவ்வப்போது மாமா வீட்டிற்கு வந்து சென்று கொண்டுதானிருக்கிறார். ஆனால் அப்பாவிற்கும் அவருக்கும் இடையே என்ன சம்பாஷணை நிகழ்கிறதென அவளால் ஊகிக்க முடியவில்லை. சிலசமயங்களில் அப்பா அணங்கு பிடித்தாற்போல் உக்கார்ந்திருப்பது அதிகமாகியது. பக்கத்து ஊரில் நிகழ்ந்த ஓர் மந்திரவாதியின் கைது நிகழ்வில், ஊருக்குள் செய்வினை காரியத்தில் ஈடுபட்டு இறப்பவர்கள், குழந்தைகள் இறப்புகள் போன்ற வதந்திகள் பரவ ஆரம்பித்தன. லிண்டாவிற்கு அதைப்பற்றியெல்லாம் அவ்வளவு தெரியாது எனினும் தோப்பில் வேலைச் செய்பவர்களின் கதைகளையெல்லாம் கேட்க பயமாகத்தான் இருந்தது.
ஆறு மாதங்கள் உருண்டு ஓடின. அக்கா இல்லாமல் வாழமுடியுமா என்று பயந்திருந்த மனதிற்கு, பணம் எதோ ஒரு தைரியத்தை வழங்கியிருந்தது. நினைத்ததை விட மரியம் அக்கா தோப்பில் அவள் வாங்கிய ஊதியம் தம்பியின் கல்வி மற்றும் வீட்டு தேவைகளை தாண்டி மிஞ்சியும் இருந்தது. தான் வேலைக்கு செல்வதை பார்த்துவிட்டு தம்பியும் ஒரு மோட்டார் மற்றும் சைக்கிள் பழுது பார்ப்புக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொருமுறை துணி துவைக்க உக்காரும்போது, தம்பியின் காற்சட்டைகள் கண்ணன்கறீர் என்று வெளிப்படத்தான் அவளுக்கு சந்தேகம் வந்தது. பிறகு விசாரித்தபோதுதான் அவன் வேலைக்கு செல்கிறான் என்பதை அறிந்துகொண்டாள்.
"என்னடா இவ்வளோ அட்டை கரியா இருக்கு? எங்கிருந்து கொண்டுவந்த?"
"...."
"என்னடா முழிக்கிற? என்ன மறைக்கிற?"
"ம்ஹும்!"
"கடையில ஒட்டியிருக்கும் க்கா..."
"கடையா? வேலைக்கு போறியா நீ?"
"சைத் சித்தப்பா கடைல."
"நீ ஒன்னும் வேலைக்கு போகவேண்டாம். அப்புறம் படிப்பை விட்டுட்டு வேலையிலேயே இருந்துட சொல்லும். நா ஒருத்தி போனா போதும்."
"நீ மட்டும் கஷ்டப்படுறது எனக்கு என்னவோ போல இருக்குக்கா. ஒரு பொழுது போக்கா செஞ்சிட்டு போறேன். படிப்ப விட்டுடமாட்டேன் சத்தியமா."
"அப்போ இன்னொரு சத்தியமும் பண்ணு. உன் காசு உனக்கு மட்டும்தான்."
"சரி"
அவனது பிடிவாதத்தின் பேரில்தான் அவனை வேலை பார்க்க அனுமதித்தாள். நான்கு மாதங்களில் பள்ளி படிப்பு முடிந்து விடும். இப்போது மிஞ்சிய பணத்தில், மேற்கல்வி படிக்கலாமா என சிந்தித்தாள். இவ்வாறு இருக்க ஒரு நாள், காபி போட்டு முற்றத்தில் அமர்ந்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த அப்பாவின் அருகில் வைத்தாள்.
"லிண்டா! உக்காரு இங்க."
"என்ன பா?"
"உனக்கு வயசாகுது. படிப்பும் முடியபோகுதில்ல..."
அவர் வாக்கியத்தை முடிக்காமல் விட, அவள் "என்ன அப்பா?"
"கல்யாணம் பண்ணணும்ல."
"அதுக்கென்ன அவசரம் பா? யாரு வந்து கேட்டா?"
சற்று தயங்கினார். காபியை எடுத்து குடித்தார். பின்பு துண்டை எடுத்து முகம் துடைத்து, வாய் பொத்தியவாறே, "உங்க மாமா" என்றார்.
லிண்டாவிற்கு தூக்கிவாரிப்போட்டது "மாமாவா?"
தொடரும்...

Comments
Post a Comment