விறகுகள் - பகுதி 5
தம்பிதான் உஸ்தாதிடமிருந்து சைக்கிளை வாங்கிக்கொண்டு வந்திருந்தான். விறுவிறுவென்று வீட்டிருளிருடந்து கிளம்பினோம். யாரவது எதிரில் தோன்றுவது போல தெரிந்தால் உடனே சைக்கிளுடன் ஒரு ஓரமாக ஒதுங்கி மறைந்து வெளியேற வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையை நெருங்கியவுடன் தம்பி துறைமுகத்தை கடந்து செல்லும் ஒரு மணல் லாரியை நிறுத்த செய்தான்.
'அக்கா... பாத்து பத்திரமா போயிட்டு...' உடைந்து அழும் தம்பியைக் கட்டிக்கொண்டாள் லிண்டா. 'அக்கான் மெரிண்டுமு. நல்லா படிடா. நீ மட்டும்தான் இனி அப்பாக்கு' சற்று முன்னால் இரண்டு அறைகளை வாங்கிய கன்னங்களை தடவிக்கொடுத்தாள்.
'எங்களை பற்றி கவலை வேணாம் அக்கா. பத்திரமா இரு.'
'எவளோ நேரம்பா ஆகும்?! துறைமுகத்துக்கு நேரமாச்சு' ஓட்டுனன் கூவினான்.
'போக்கா போ...' லிண்டாவை ஏற்றிவிட்டு லாரி நகர்ந்து மறையும் வரை அங்கேயே நின்றுக் கொண்டிருந்தான். ஏறக்குறைய இருபது மணி நேர பயணத்தில் உடலெல்லாம் அலுத்துவிட்டிருந்தது. நல்லவேளையாக ஓட்டுநர் ஆங்காங்கே நிறுத்தி உண்ணவும் அருந்தவும் அனுமதித்தார்.
@@@@@@@@@@@@@@@@@@@@
சூரியன் உச்சியை அடைந்திருந்தது, ஆனால் வாழைகளுக்கு இடையே காற்று குளிர்ந்து வீசிக்கொண்டிருந்தது. ஒரு மண்மேட்டின் மேல் அமர்ந்துகொண்டு தீவிர சிந்தனையில் இருந்தாள் அவள். அப்பா அந்த திடுக்கிடும் கேள்வி கேட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் அதைவிட திகிலான செய்திகள் பிறகுதான் லிண்டாவிற்கு தெரியவந்தன. தனது அப்பா மாமாவை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி தன்னை ஒன்றும் சம்மதம் கேட்கவில்லை. ஏற்கனவே அந்த மனிதனுக்கு வாக்கு கொடுத்து விட்டுத்தான் தன்னிடம் வெறுமனே கூறியிருக்கிறார். அது தெரிந்ததே மற்றொருநாள் அவரிடம் வாதிட சென்ற போதுதான்.
அப்பாவிடம் பேசிய மறுநாள், தோப்பிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது. திடீரென எழுந்த தாகத்தால் ஆற்றிற்கு செல்ல பாதையிலிருந்து சற்று விலகி நடந்தாள். மாலை நேரத்தில் எப்பவும்போல யாரும் இல்லாமல் ஆறு அமைதியாய் தென்பட்டது. கைகளை குவித்து இரண்டு முறை தண்ணீரை அள்ளிக் குடித்தாள். மூன்றாம் முறை அள்ளக் கைக்குவிக்கையில் இரண்டு பெண்கள் தங்கள் துணிமூட்டைகளோடு வந்து ஆற்றங்கரையில் அமர்ந்தனர். லிண்டா தண்ணீரை அள்ளி முகம் அலம்பிக்கொண்டு புறப்பட்டாள். அவர்கள் மூட்டைகளை பிரித்து துணிகளை தண்ணீரில் நனைத்தனர். சற்று சலவைத்த்தூள் இட்டு தேய்க்கவும் செய்தனர். அவள் திரும்பியவுடன் அந்த இரண்டு பெண்களும் பேசத்தொடங்கினார். அவர்கள் பேசியது லிண்டாவை பற்றியதாயிருந்திருந்தால், அவள் மேலே நடந்து சென்றிருப்பாள். ஆனால் அவர்களது பேச்சு லிண்டாவின் அக்காவை பற்றியதாக இருந்ததால், லிண்டா ஒரு பெரிய மரத்தின் மறைவில் நின்றுகொண்டு அவர்கள் பேசுவதற்கு செவிகொடுத்தாள்.
"கேள்விப்பட்டியாடீ? பாவம் இவ.."
"யாரடீ சொல்ற? லிண்டாவையா?"

"ஆமா, அக்காளும் தங்கையும் அவனை கட்டிட்டு சாகணும்னு இருக்குபோல.."
"அக்கா புருஷனையா கட்டிக்க போறா? அது சரி அக்காவுக்கு புள்ளை இல்லன்னுட்டு, அவ செத்ததும் இவ பெத்துக்குடுப்பானு கட்டிக்கிறானா?"
"குசுமாவுக்கு புள்ளை இல்லாம ஒன்னும் இல்லடி, அவதான் சுமந்தாளே. அதும் ரெண்டு முறை..."
"என்னடி புதுக்கதை சொல்ற? அவளுக்கு பிள்ளை இல்லாதனாலதான் அந்தாளே அவளை கொன்னுட்டாத பேசிக்கிட்டாங்க."
"புள்ளை ஒன்னும் இல்லாம போகல. இவன்தான் ஏதோ பண்ணிட்டான். சக்தி கெழவி அவனை பக்கத்தூர் மந்திரவாதி வீட்டுப்பக்கமா அப்போ அப்போ பாத்ததா சொன்னது. ரொம்ப வேண்டிருந்து ரொம்ப நாள் கழிச்சு, முதல் பிள்ளை வைத்துலையே இறந்துடுச்சு. கருவை வெளில எடுக்க புள்ளையோடு சேர்ந்து ஆணிகளும் வந்ததாம்."
"அய்யய்யோ!"
"செவிலி அம்மாவும் பயந்துடுச்சு. பெறவு, மறுபடி அவ கருத்தரிச்சா, புள்ளையும் பெத்தா. நல்ல சுகமாத்தான் பொறந்துச்சுனு சொன்னாங்க. அப்போ அவன் வெளியூர் போயிருந்திருக்கான். வீட்டுக்கு வந்ததும் புள்ளைய தூக்கிகிட்டு முதல் வேளாயா மந்திரவாதிக்கிட்ட தூக்கிட்டு போயிருக்கான். அங்க என்ன நடந்ததோ என்னவோ, மறுநாள் புள்ளை பொனமாத்தான் வீட்டுக்கு வந்தது. இடிஞ்சு போய்ட்டா குசுமா."
"அதான் சாகுற முன்னாடி ஜடம் போல வேலைய மட்டும் பார்த்துட்டு இருந்தாளா? அவ புள்ள பெத்தத அவ வீட்டுகாரவங்களுக்கு எப்படி சொல்லாம போனா?"
"அவ எங்க நம்ம ஊர்ல இருந்தா? முதல் குழந்தை போன சோகத்துல. அவளுக்கு ஒரு மாற்றம் வேணும்னுட்டு வேறெங்கேயோ கொண்டு போய் வச்சிருக்கான் அவன். ரெண்டாவது புள்ள செத்த பெறவுதான் அவ மறுபடி ஊருக்கு வந்திருக்கா."
"ஆனா அவங்கூட்டுல ஒரு பொம்பளை இருக்குமே எப்பவும். நா கூட தூரத்துல பாத்திருக்கேனே!"
"அது அந்த மந்திரவாதியோட கையாளு. அப்பப்போ பரத்தைகளையும் கூட்டிட்டு வர்றதுண்டு. பிள்ளை போன சோகத்துலையே போய்ட்டா. அவ படிக்காதவ, ஒன்னும் புரியாம மாட்டிக்கிட்டா. லிண்டா படிச்சவ. அவ தலையெழுத்துமா இப்படி ஆகணும்?"
"எல்லாம் அல்லா பாத்துபாருக்கா. அவ அந்த சைத்தான் கிட்டேருந்து தப்பிக்கணும்னு வேண்டிப்போம்."
லிண்டாவின் நெஞ்சில் பல இடிகள் மாறி மாறி விழுந்ததுபோலிருந்தது. இவ்வளவு துன்பங்களையும் அக்கா தனியே அனுபவித்தாளா என்பது அவளது குரவளையை அடைத்தது. கண்ணீர் பொங்கிவந்தது. எல்லாவற்றையும் தனது தந்தையிடம் கூறவேண்டும் என விரைந்தாள். வீட்டை அடைவதற்கு சற்று முன்னர் திடீரென்று நின்றாள். 'அக்கா இறந்த பிறகு மாமா சிலமுறை வீட்டிற்கு வந்து போனது நினைவிற்கு வந்தது. பிறகு சில நாட்கள் அப்பா அமைதியாக சிந்தனையில் அமர்ந்திருந்தது எல்லாம் இதன் காரணமாகத்தானா? ஒருவேளை அப்பாவிற்கு இதெல்லாம் முன்னமே தெரியுமா? அப்படியானால் ஏன் என்னை...' ஆத்திரம் மேலிட அவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.
ராணியின் வெள்ளைப் பூனை தனது காலை உரசிக்கொடு நின்றது. லிண்டா அதை தடவிக்கொடுத்தாள். மியாவ் மியாவென மேலெல்லாம் ஏறி நடந்தது. சருகுகளில் ஏதோ அசைவது கண்டு அது ஓடியது. பிறகு, ஒரு வாழைத்தண்டின் மீது தனது நகங்களை கூர்செய்துக்கொண்டது.
அன்று அப்பாவிடம் அந்த சைத்தானை மணப்பது இல்லையென உறுதியாக கூறிவிட்டிருந்தாள். அவள் அவனை நேரே சந்தித்து சொல்லவேண்டுமென தோன்றியது. ஆனால் அந்த பெண்களின் பேச்சுகளிலிருந்து சில உண்மைகள் தெளிவாகின - தான் முதன் முதலில் அக்காவிற்கு அப்பாவுடன் மாப்பிளை கேட்க சென்றிருந்தபோது கண்ட ஒரு உருவத்தின் உண்மை, அக்கா வெகுநாட்களாக தனது கடிதங்களுக்கு பதிலளிக்காதது, அக்கா இறப்பதற்கு முன்னாள் தன்னை எச்சரித்தது, அவள் இறந்தபின் மாமா வீட்டிற்கு வந்துபோனதன் காரணம் என எல்லாம். அதன் வழியே அவன் எப்படிப்பட்டவன் என்பதும் விளங்கிற்று. ஒருவேளை தனது முடிவை சொல்லி அவனை ஏமாற்றமடைய செய்தால், தன்னை அந்த வீட்டின் அறையில் பூட்டிவைத்துவிடுவானோ என்றும் பயந்தாள் லிண்டா.
என்ன செய்வது என்ன யோசனை செய்தாள். மலேசியாவிற்கு வேலைக்கு செல்பவர்களை பற்றி கேள்வியுற்றிருக்கிறாள். 'ஏன் சைத் சித்தப்பாவின் மகளும் அங்குதான் வேலை செய்கிறாள். அவரிடமே கேட்போம்' என்று புறப்பட்டாள். ஹென்றா தனது அக்கா கடைப்பக்கம் வருவதைக்கண்டு யோசனையுடன் பார்த்தான்.
"என்னக்கா இந்த பக்கம்?"
"சித்தப்பா எங்கடா?"
"உள்ள ஆபிஸ்ல இருக்கார்."
அவள் சித்தப்பாவை சந்தித்து பேசினாள். ஹென்றா, தன் அக்காவை வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். ஏறக்குறைய ஒரு அரைமணிநேரம் கழித்து அவள் வெளியே வந்தாள்.
"இவ்வளோ நேரம் என்ன பேசினீங்க?"
"வீட்டுக்கு வா சொல்றேன்."
தொடரும்...

Comments
Post a Comment