விறகுகள் - பகுதி 10
ஆறு மாதங்கள் கடந்தன. பத்து சங்காரின் மசூதியில் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஊருக்கு திரும்பி சென்றதிலிருந்து ஹென்றா அடிக்கடி லிண்டாவிற்கு அலைபேசியில் அழைத்து அங்கு நிகழ்பவை அனைத்தும் பகிர்ந்துகொண்டு வந்தான். இரண்டு வாரங்களுக்கு முன்னாள்தான் அவன் வீடியோ அழைப்பு செய்திருந்தான்.
"அஸ்ஸலாமுலைக்கும், என்னக்கா பிசியா இருக்கியா?"
லிண்டா ஒரு மர அடுக்கில் அலைபேசியை சரிபடுத்திக்கொண்டே, "வாலைக்கும்சாலாம். ஆமாடா, சமைச்சுட்டு இருக்கேன்."
"என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?"
"காடோ-காடோ பண்ணிட்டு இருக்கேன். சொல்லு என்ன ரொம்ப நாள் கழிச்சு வீடியோ கால் பண்ணிருக்க?" என்று காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள்.
"வாஹ். ரொம்பநாளாச்சு அக்கா உங்க கையாள சாப்பிட்டு. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். எப்போ கெளம்புறனு சொல்லு டிக்கெட் போடுறேன்."
சட்டென்று நினைவு வந்தவளாய் லிண்டா வெட்டுவதை நிறுத்தினாள். "ஹென்றா. அது..."
"என்னக்கா?"
"ஹென்றா, என்னால வரமுடியும்னு... தோணலை."
"என்ன? அக்கா, உன் தம்பி கல்யாணத்துக்கு கூட வரமாட்டியா? நம்ம ஊர் மேல அவளோ வெறுப்பா?"
"அஸ்தாக்... இல்ல ஹென்றா. இரு." அடுப்பை அணைத்துவிட்டு, லிண்டா அலைபேசியை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றாள்.
"என்ன காரணம் சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். நீ..." லிண்டா வீடியோவை பின்பக்கமாக திருப்பி கண்ணடியைக் காட்டியதில் ஹென்றா சொல்லற்று போனான். "அக்கா....!!" ஹென்றா நாற்காலியிலிருந்து எழுந்து பலமுறை துள்ளிக்குதித்தான்.
லிண்டா வெடித்துச்சிரித்து, "போதும் போதும்..." என்றாள். மீண்டும் வீடீயோவை முன்பக்கமாக திருப்பி, கண்ணாடி மேசையின் முன்னால் வைத்து சற்று வளர்ந்திருந்த தனது வயிற்றை தடவி இடம் வலமாக நின்று காட்டினாள்.
"அக்கா எத்தனை மாசம்? எனக்கு சொல்லவே இல்ல பாத்தியா?"
"எட்டு மாசம். உனக்கு surprise பண்ணலாம்னு நெனச்சேன். ஆனா இடையிலேயே உன் கல்யாணம் வர்றத மறந்துட்டேன்."
"எப்போ தேதி சொல்லிருக்காங்க?"
"இன்னும் நேரம் இருக்கு. உன் கல்யாணத்துக்கு அப்புறமாத்தான்" என்று சிரித்தாள்.
"அக்கா என் மருமகன்நால நீ தப்பிச்ச. மன்னிச்சிட்டேன் போ."
"ஓஹோ ஆமபள புள்ளனே முடிவு பண்ணிட்டியா? பொண்ணு இது."
"அட! அக்கா, கல்யாணம் முடிஞ்சு நேரா என் மருமகளைத்தான் பார்க்க வரப்போறேன்." என்றான் உல்லாசமாக.
மீண்டும் அலைபேசியை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு நடந்தாள், லிண்டா. "முதல்ல நிக்காவ முடிடா. அதுக்குள்ள அவசரம். பூஸானா ஆடட் (கல்யாண சட்டை) எல்லாம் தயாரா?" என்று கூறி சமையலை தொடர்ந்தாள்.
"அது மட்டும்தான்கா இன்னும் முடியலை. தேடுற கலர் கிடைக்கல. சொங்கேட் மட்டும் மாமா பாலியிலிருந்து ஸ்பெஷலா கொண்டு வந்திருக்காரு. ரத்னாவுக்கு ஒரு பிரம்மாண்டமான சிகேர் ரெடி."
*அக்கா... உனக்குன்னு பிள்ளை பெத்துக்கல?*
ஹென்றாவிடம் தனது புது சந்தோசத்தை சொல்லிவிட்டதில் ஒரு நிம்மதி ஏற்பட்டது லிண்டாவுக்கு. அவன் ஊருக்கு கிளம்பிய பிறகு ஒரு நாள் அவள் மருத்துவகத்திற்கு சென்றிருந்த போதுதான், தான் இரண்டரை மாதங்கள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. ஹென்றா கேட்டது போல, ஒரு குழந்தை உருவாகி இருப்பதில் மகிழ்ச்சி கொண்டாள். 'இது எனக்குத்தான். எனக்கு மட்டும்தான்' என்று மனதில் நினைத்துகொண்டாள்.
இன்று மாலை ஹென்றாவிற்கு திருமணம். நேரில் சந்தித்து கலந்துகொள்ள இயலவில்லை எனினும், அவனது நிக்காஹ்வை நேரடி ஒளிபரப்பாக காணும் வாய்ப்பு கிடக்கிறதே என எண்ணி மகிழ்ந்தாள். நவீன வளர்ச்சி சில சமயங்களில் மன ஆறுதல்களை வழங்குவது இதுபோல்தான். திருமணத்தின் வண்ண கருவைக் கொண்டு தானும் ஒர் ஆடையை தயார் செய்திருந்தாள். தனது கணவனுக்கு அதே வண்ணத்தில் ஒரு சட்டையையும் தயாராக இருந்தது. ஆடைகளை அணிந்துகொண்டு லிண்டா அலைபேசியின் முன் அமர்ந்துகொண்டாள். மக்ஹ்ரிப் தொழுகைக்கு பின்னர், நிக்கா நடந்தேறியது. ஊரில் உள்ளோர் அனைவரும் வந்திருந்ததுபோல தெரிந்தது. அந்த கூட்டத்தில் சைத் சித்தப்பாவை மட்டும்தான் அடையாளம் தெரிந்தது. மற்றபடி யாரையும் தெரியவில்லை. இத்தனை ஆண்டுகள், நினைவுகளை மட்டுமில்லாமல் உலகத்தையும் மாற்றிவிட்டிருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து ஹென்றாவிடமிருந்து அழைப்பு வந்தது,
"என்னடா எப்படி இருக்க? பெரிய மனுஷனாகிட்ட."
"அப்படிலாம் இல்லக்கா. அப்புறம் எப்போ உனக்கு dueனு சொன்ன?"
அறையில் தொங்கிய நாட்காட்டியை பார்த்து, "ஹ்ம்ம். இன்னும் ரெண்டு வாரம் இருக்கு. என்ன அதுக்குள்ளவே இங்க வரப்போறியா என்ன?"
"ஆசைதான் அக்கா. ஆனால் plan மாறிவிட்டது. ரத்னாவோட அப்பா எங்களுக்கு கல்யாண பரிசா, பாலிக்கு தேனிலவு டிக்கெட் வாங்கிருக்காரு."
"பாருடா. ஹ்ம்ம் enjoy. எத்தனை நாள்?"
"இரண்டு வாரம். பாப்பாவ பாக்கமுடியாதுன்றதுதான் வருத்தமா இருக்கு."
"மருத்துவமனைல பார்க்கிறதவிட, நீ வரப்போ நாங்க வீட்டுக்கு வந்துடுவோம்ல, அப்போ எவ்வளோ மணி நேரம் வேணும்னாலும் பார்த்துக்கோ." என்றாள் லிண்டா. ஹென்றா சிரித்தான். "சரி, இப்போ எங்க நம்ம பத்து சங்கார் வீட்டுலையா இருக்கீங்க ரெண்டு பேரும்?"
"இல்ல அக்கா. தேன்நிலவு முடிஞ்சதும் அங்க போறோம். இப்போ ரெண்டு நாள் மாமனார் வீட்டுலேதான் போகுது. யார் யாரோ இன்னமும் எங்களை பார்த்து வாழ்த்து சொல்ல வந்துட்டு இருக்காங்க. யாருன்னே தெரியலை."
"கல்யாணம்னா அப்படிதான் இருக்கும். சரி எப்போ கிளம்புறீங்க பாலிக்கு?"
"இன்னைக்கு இரவு. அக்கா."
"அட இன்னைகேவா? சரி, பத்திரமா போயிட்டு வாங்க."
தொடர்பை துண்டித்தான். ஏனோ அவனிடம் பேசியதிலிருந்து மனசே சரியில்லாமல் இருந்தது. அவர்களுக்கு திடீர் ஆபத்துக்கள் நேரிடக்கூடாது என்று டுவா செய்தாள் லிண்டா. தன் கணவனோடு இரவு உணவு முடித்துவிட்டு, இருவரும் குழந்தைக்கு ஆடை வாங்க வெளியில் சென்றார்கள். இரண்டு மூன்று விதமான அழகிய இளஞ்சிவப்பு ஆடைகளை வாங்கிக்கொண்டு அறைக்கு திரும்பினர். இந்த குழந்தையின் வரவை எண்ணி சந்தோஷப்பட்டாலும் உள்ளுக்குள் ஒரு நெருடல் இருந்து கொண்டு இருந்தது.
மறுநாள் காலையில் விழிப்பதற்கே தாமதமாகிவிட்டது. நல்லவேளையாக முன்னரே நீண்ட விடுப்பு சொல்லியிருந்தாள். அப்படியே கட்டிலிலே படுத்துக் கொண்டிருந்தாள். சுற்றி இருந்த மற்ற அறைகளிலும் ஆள் அரவம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தது. தன் தம்பி இந்நேரம் பாலி சென்று சேர்ந்திருப்பான் என்று எண்ணினாள். அழைத்து கேட்போமா என நினைத்து அருகில் இருந்த மேசையை துழாவினாள். அலைபேசி அங்கு இல்லை. மாலையில் அழைக்க முடிவு செய்தாள். விழித்ததும் அப்படியே வெகு நேரம் படுத்திருந்தது முதுகெல்லாம் வலி எடுக்க ஆரம்பித்தது. எழலாம் என்று முயன்றபோது திடீரெண்டு வற்றியில் பெரும் வலி எடுத்தது.
"யா அல்லாஹ்!"

*அம்மா சொல்லு... அம்மா சொல்லு...*
திடீரென அமினாவின் நினைவு வந்தது, அவளை பார்க்க வேண்டும் போல தோன்றியது. தனது கூச்சலை கேட்டாவது யாராவது வருவார்கள் என்று மேலும் கத்தினாள். இம்முறை ஆயிரம் மின்னல்களை ஒரு சேர வயிற்றில் செலுத்திய மாதிரி இருந்தது. ஒருவரும் வரவில்லை.
*நம்ம குடும்பத்தை நீதான் உயர்த்தனும்.*
*அப்பாவை பாத்துக்கோ. பத்திரமா இரு.*
*சந்தோஷமா இருக்கியா?*
மேலும் மேலும் என்று உரத்துக்கூவினாள். ஓரிரு தலைகள் வாசல் பக்கமாக எட்டி பார்ப்பது தெரிந்து மறைந்தது. 'ஐயோ யாரவது ஆள்புலன்ஸுக்கு அழையுங்களேன்' என்று கூவ தோன்றியது ஆனால் வலி தொண்டையை ஆக்கிரமித்து வெறும் அலறலாகவே வெளிவந்தது.
*அக்கா... பாத்து பத்திரமா போயிட்டு…*
விசிறி சுழன்றுகொண்டிருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"கா.. மேல காலைல ரொம்ப நேராமா சத்தமாவே இருந்ததே என்னவாம்? யாரவது அடிச்சுக்கிட்டாங்களா?"
"இல்ல இளா, யாரோ ஒரு கர்ப்பிணி பொண்ணு வலியில கத்திருக்கு. எல்லாம் போன் பண்ண பயந்துகிட்டு அப்படியே விட்டுட்டாங்க. அவளோட அனுமதி அட்டை வேறு காலாவதியாகி ரொம்ப நாளாச்சாம்."
"ஐயோ! அப்புறம் என்னத்தான் ஆச்சு?"
"அவ அமைதியானது பார்த்து அங்க போனவங்க உடம்பு விறகு கட்டையா கெடக்குறத பார்த்துதான் இறந்துட்டானு தெரிஞ்சது. இப்போதான் ஆம்புலன்ஸ் வந்திருக்கு தூக்கிட்டு போக. அந்தப்பக்கம் போகவே பயமா இருக்கு. பாவம்!"
முற்றும்.

தன்னுடைய அலைபேசி எங்கிருக்கிறது என்று சிந்தித்தாள். அது அலமாரியில் இருந்தது நினைவிற்கு வந்தது. அதை எடுக்க இந்த வலியை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவே பயமாக இருந்தது. மேலே சுழன்று கொண்டிருந்த விசிறியைப் பார்த்துக் கொண்டு வலியை பொறுத்துக் கொள்ள பார்த்தாள், இயலவில்லை. மீண்டும் அவள் எழ முயற்சித்தபோது, மீண்டும் வலித்தது இரண்டு மடங்கு வீரியத்துடன். வலி நின்ற பாடாக இல்லை. பனிக்குடம் உடைந்து விட்டது. ஆனால் இந்த வலி முன்னர் அனுபவித்ததுபோல இருக்கவில்லை. வேறு ஏதோபோல வலித்தது. பொறுத்து பொறுத்து வராமல் ஒரேடியாக வலித்து பெருகியது. பொறுக்க முடியாமல் அலறினாள் லிண்டா.
*அக்கா... உனக்குன்னு பிள்ளை பெத்துக்கல?*
*அம்மா சொல்லு... அம்மா சொல்லு...*
திடீரென அமினாவின் நினைவு வந்தது, அவளை பார்க்க வேண்டும் போல தோன்றியது. தனது கூச்சலை கேட்டாவது யாராவது வருவார்கள் என்று மேலும் கத்தினாள். இம்முறை ஆயிரம் மின்னல்களை ஒரு சேர வயிற்றில் செலுத்திய மாதிரி இருந்தது. ஒருவரும் வரவில்லை.
*நம்ம குடும்பத்தை நீதான் உயர்த்தனும்.*
*அப்பாவை பாத்துக்கோ. பத்திரமா இரு.*
*சந்தோஷமா இருக்கியா?*
மேலும் மேலும் என்று உரத்துக்கூவினாள். ஓரிரு தலைகள் வாசல் பக்கமாக எட்டி பார்ப்பது தெரிந்து மறைந்தது. 'ஐயோ யாரவது ஆள்புலன்ஸுக்கு அழையுங்களேன்' என்று கூவ தோன்றியது ஆனால் வலி தொண்டையை ஆக்கிரமித்து வெறும் அலறலாகவே வெளிவந்தது.
*அக்கா... பாத்து பத்திரமா போயிட்டு…*
விசிறி சுழன்றுகொண்டிருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"கா.. மேல காலைல ரொம்ப நேராமா சத்தமாவே இருந்ததே என்னவாம்? யாரவது அடிச்சுக்கிட்டாங்களா?"
"இல்ல இளா, யாரோ ஒரு கர்ப்பிணி பொண்ணு வலியில கத்திருக்கு. எல்லாம் போன் பண்ண பயந்துகிட்டு அப்படியே விட்டுட்டாங்க. அவளோட அனுமதி அட்டை வேறு காலாவதியாகி ரொம்ப நாளாச்சாம்."
"ஐயோ! அப்புறம் என்னத்தான் ஆச்சு?"
"அவ அமைதியானது பார்த்து அங்க போனவங்க உடம்பு விறகு கட்டையா கெடக்குறத பார்த்துதான் இறந்துட்டானு தெரிஞ்சது. இப்போதான் ஆம்புலன்ஸ் வந்திருக்கு தூக்கிட்டு போக. அந்தப்பக்கம் போகவே பயமா இருக்கு. பாவம்!"
முற்றும்.

Comments
Post a Comment