நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?!
பகடை ஆட்டத்திற்குமுன், பாண்டவர்கள் செழிப்பு மற்றும் சக்தியின் உச்சத்தை அடைந்திருந்தனர்.
துரதிருஷ்டவசமாக, அவர்கள் அத்தகைய வளர்ச்சியைக் கையாள போதுமான ஞானத்தை பெற்றிருக்கவில்லை. அவர்களுடைய ஆன்மீக வழிகாட்டியாக எப்போதும் கிருஷ்ணனே இருந்தான். ஒருமுறை, அவன் அங்கு இல்லை - அவர்கள் செய்திவைத்திருக்கிற குழப்பத்தை காணுங்கள்!
பிரச்சனை யாதெனில், பாண்டவர்கள் கண்ணியமானவர்களாக இருந்தபோதிலும் - கடவுளுக்கு பயந்திருந்த போதிலும், எவ்வித கேள்வியுமின்றி சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தபோதிலும் - ஒரு உயர்ந்த முதிர்ச்சி ஒன்று அவர்களிடம் இல்லை. அவர்கள் உள் குரலுடனும் உள்ளுணர்வு ஞானத்துடனும் தொடர்பு கொள்ளவில்லை.
உண்மையில், கிருஷ்ணனே அவர்களின் உள் குரல். ஆனால், அவர்கள் தங்களுக்குள் கடந்து சென்று, "கிருஷ்ணத்துவத்தை (Krishna-hood)" தங்கள் இதயங்களில் சுயேட்சையாக பெற்றுக் கொள்ள வேண்டும்.
யுதிஷ்டிரர் விளையாட்டை கையாண்ட விதம் அவர் இன்னும் முழுமையாக 'பூர்ண' சக்கரவர்த்தி ஆகவில்லை என்பதை காட்டியது - பூரணமடைய இன்னும் இருக்கிறது. புத்தகவியலான அந்த முழுமை போதுமானதாக இல்லை. அவர் தர்மத்தின் அவதாரமாக இருக்கலாம் - ஆனால், அவரும் அவருடைய சகோதரர்களும், இன்னும் கற்றுக்கொள்ள சில கடுமையான பாடங்கள் இருந்தன.
அவர்கள் மன்னிப்பதற்கும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நிற்பதற்கும் இடையே இருக்கும் மெல்லிய கோட்டினையும்; விதிமுறைகளைப் எப்போது பின்பற்ற வேண்டும், எப்போது கைவிடவேண்டும் என்பதற்கிடையிலான மிகமெல்லிய கோட்டினையும்; அதோடு நீதிக்கும் பழிவாங்குதலுக்கும் இடையே உள்ள மெல்லிய துரும்பையும் வேறுபடுத்த வேண்டியதிருந்தது.
கிருஷ்ணன் வேண்டுமென்றே அவர்களை வனம் புகுவதிலிருந்து தடுக்கவில்லை, ஏனெனில் அவர்கள் இந்த பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. துன்பம் கற்பிக்கும் வகையில் ஒரு பாடத்தை கற்பிக்க யாராலும் இயலாது. துக்கத்தைப்போல இதயத்தை தூய்மைப்படுத்துவது ஒன்று, பிறிதொன்றும் இல்லை.
வனம்புகுந்தபோது, பாண்டவர்கள் வேதனையால் நசுக்கப்பட்டது உண்மைதான். ஒரு தருணத்தில், அவர்கள் அரியனைவிட்டு ஆண்டி ஆனார்கள்; காரணமும் அவர்களே ஆனார்கள்.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்"
ஆனால், வனவாசம் உண்மையில் அவர்களது மறுபிறப்பு.
அது அவர்கள் மனம்திரும்பும், கற்கும், காயங்கள் ஆற்றும், ஆற்றுதலடையும், முதிர்ச்சிபெறும், ஆன்மீக பாரிணாமமடையும் காலமாக அமைந்தது.
கதையின் இந்த கட்டத்தின்போது நிறைய நடைபெற்றது.
அந்த நேரத்தில் அவர்கள் சுய பரிதாபத்தோடு புரண்டு கொண்டிருக்கவில்லை.
"வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை"
அந்நேரத்தை அவர்கள் தங்கள் வளர்ச்சிக்கு உபயோகித்தனர். தொலைதூர இடங்களுக்குச் சென்று தங்கள் எல்லைகளை விரிவாக்கி கொண்டனர். அவர்கள் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலிருந்தும் மக்களை சந்தித்தனர். அவர்கள் தங்கள் கற்றலுக்கான புதிய பரிமாணங்களைச் சேர்த்தனர். அவர்கள் நுட்பமான ஆழ்ந்த சத்தியங்களை வழங்கும் அறிவொளி முனிவர்களின் துணையோடு வாழ்ந்தார்கள். கடுமையான கல்வி மற்றும் ஆன்மீக பயிற்சியை மேற்கொண்டனர். உடலுக்கு சவாலான பயணங்களை மேற்கொண்டனர். மலைகளிலும், ஏரிகளிலும், மரங்களிலும், மிருகங்களிடத்திலும் அவர்கள் ஆறுதல் கண்டனர். காடுகளின் தனிமையில் அவர்கள் உல்லாய்வு செய்தனர். இயற்கையில் வாழ்ந்ததால், அவர்கள் தங்களது உள் இயல்புடன் தொடர்பில் இருந்தனர்.
"மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்,
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்,
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்,
குணம்.. குணம்.. அது கோவில் ஆகலாம்!"
உண்மையை சொல்லப்போனால், அவர்கள் வீடு திரும்பினர். வனாந்திரம் அவர்களது தாய் மடியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் காட்டின் குழந்தைகள்தானே.
மறுபுறம் கௌரவர்கள், பாண்டவர்கள் கஷ்டப்பட்டதைபோல், வாழ்க்கையில் துன்பப்படவில்லை. ஏன் - கர்ணன் உட்பட, மகத்தான வலியை வாழ்வனைத்தும் அனுபவித்திருந்தாலும், பாண்டவர்கள் கண்ட படுபாதாள இறக்கங்களை அவன் பார்க்கவில்லை. கொடிய வறுமையை, ஆதரவற்றநிலையை, வீடில்லாத அனுபவத்தை, துஸ்பிரயோகத்தை, பாகுபாட்டினை கடுமையான வகையில் கும்பத்தினுள்ளேயே கண்டனர்.
கௌரவர்கள் மதி மயக்கத்தில், முட்டாள்தனமான ஆடம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்கள் அதை உந்தித் தள்ளி வெளியேற்றினர். கௌரவர்கள் தங்கள் வசதியான வரம்பு எல்லைக்குள்ளே தங்கியிருந்தாலும், பாண்டவர்கள் அவர்களது வரம்புகளை விரிவாக்கினர். கௌரவர்கள் ஒரு துளியேனும் மாறவில்லை என்றாலும், பாண்டவர்கள் ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்தனர். கௌரவர்களின் ஆத்ம கண்ணாடி தூசினையும் புகைக்கரியையும் சேகரித்து கொண்டிருந்த பொழுது, பாண்டவர்கள் சுத்தகரிக்கப்பட்டு பவித்ரமாக்கப்பட்டனர்.
அதனால்தான் பாண்டவர்கள் திரும்பி வந்தபோது, சமாதானத்திற்கு தயாராக இருந்தார்கள், ஆனால் நீதியின் விலையில் அல்ல.
"ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்,
உறவுக்கென்று விறிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்,
யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்,
மனம்.. மனம்.. அது கோவில் ஆகலாம்!"
வனவாசம் அவர்களுக்குத் தகுந்த ஒரு தண்டனையாக இருக்கவேண்டும். ஆனால், அது மாறுவேடத்தில் ஒரு ஆசீர்வாதமாக மாறியது.
"நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு"
இன்றைய வேதனை, உண்மையில், நாளைய வலிமையாக மாறியது.
"எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!"
அழகூட்டியவர்: கண்ணதாசன்



Comments
Post a Comment