விறகுகள் - பகுதி 10
ஆறு மாதங்கள் கடந்தன. பத்து சங்காரின் மசூதியில் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஊருக்கு திரும்பி சென்றதிலிருந்து ஹென்றா அடிக்கடி லிண்டாவிற்கு அலைபேசியில் அழைத்து அங்கு நிகழ்பவை அனைத்தும் பகிர்ந்துகொண்டு வந்தான். இரண்டு வாரங்களுக்கு முன்னாள்தான் அவன் வீடியோ அழைப்பு செய்திருந்தான். "அஸ்ஸலாமுலைக்கும், என்னக்கா பிசியா இருக்கியா?" லிண்டா ஒரு மர அடுக்கில் அலைபேசியை சரிபடுத்திக்கொண்டே, "வாலைக்கும்சாலாம். ஆமாடா, சமைச்சுட்டு இருக்கேன்." "என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?" "காடோ-காடோ பண்ணிட்டு இருக்கேன். சொல்லு என்ன ரொம்ப நாள் கழிச்சு வீடியோ கால் பண்ணிருக்க?" என்று காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். "வாஹ். ரொம்பநாளாச்சு அக்கா உங்க கையாள சாப்பிட்டு. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். எப்போ கெளம்புறனு சொல்லு டிக்கெட் போடுறேன்." சட்டென்று நினைவு வந்தவளாய் லிண்டா வெட்டுவதை நிறுத்தினாள். "ஹென்றா. அது..." "என்னக்கா?" "ஹென்றா, என்னால வரமுடியும்னு... தோணலை." "என்ன? அக்கா, உன் தம்பி கல்யாணத்துக்கு கூட வரமாட்டியா? நம்ம ஊர் மேல அவளோ வெறுப்பா...









